Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் மேலும் 39 பேருக்கு ஓமிக்ரான் அறிகுறி வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு 7 நாட்கள் தனிமை

வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுடன் தொடர்பில் இருந்த 39 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுடன் தொடர்பில் இருந்த 39 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் அளித்துள்ளார். வெளிநாட்டில் இருந்து வரும் அனைவரும் 7 நாள் கட்டாயம் தனிமையில் இருப்பது அவசியம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Recommended Video

    இந்தியாவில் உயரும் ஓமைக்ரான் பாதிப்பு: 415 பேருக்கு ஓமைக்ரான் தொற்று!

    உலகில் பல நாடுகளில் பரவி வரும் ஓமிக்ரான் வைரஸ் இந்தியாவிலும் பரவ தொடங்கி உள்ளது. இதுவரை 415 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.டெல்டா கொரோனா வைரசை விட வேகமாக பரவும் தன்மை உடையதாக இது இருப்பதால் இதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    Omicron symptoms for 39 people 7 days compulsory home quarantine for those coming from abroad says Ma. Subramanian

    ஓமிக்ரானை கட்டுப்படுத்துவது தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது மருத்துவ கட்டமைப்புகளை வலுப்படுத்தவும், தேவையான முன்னேற்பாடுகளை செய்து வைக்கவும் அனைத்து மாநில அரசுகளும் உஷார் படுத்தப்பட்டன.

    தமிழகத்திலும் ஓமிக்ரான் தொற்று வேகமாக பரவ தொடங்கி உள்ளது. 34 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து எடுக்க வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் மருத்துவதுறை வல்லுனர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

    தற்போது பண்டிகை காலமாக இருப்பதால் பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடுவதால் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து முதல்வர் மு.க ஸ்டாலின் பொதுமக்களுக்கு விடுத்த வேண்டுகோளில் கூட்டம் கூடுவதை தவிருங்கள். கட்டாயம் முக கவசம் அணிந்து வெளியே நடமாடுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

    கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதே போல் ஓமிக்ரான் பரவல் அதிகரித்தால் எதிர் கொள்ள தயாராக இருக்கும்படி சுகாதாரத்துறையினருக்கும் உத்தரவிட்டுள்ளார்.

    சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், தமிழ்நாட்டில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 12 பேர் குணமடைந்துள்ளனர் என்று கூறியுள்ளார். ஏற்கனவே 3 பேர் குணமடைந்த நிலையில் மேலும் 9 பேர் ஒமிக்ரான் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளார்.

    வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுடன் தொடர்பில் இருந்த 39 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் அளித்துள்ளார். வெளிநாட்டில் இருந்து வரும் அனைவரும் 7 நாள் கட்டாயம் தனிமையில் இருப்பது அவசியம் என்று வலியுறுத்தியுள்ளார். ஒமிக்ரான் பாதிப்பை உறுதி செய்ய 39 பேரின் சளி மாதிரிகள் புனே ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

    இதனிடையே வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மட்டுமே ஓமிக்ரான் தொற்றுக்கு ஆளாகி இருக்கிறார்கள். தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களில் 7 பேர் பூரண குணம் அடைந்து வீடு திரும்பி விட்டார்கள். இருப்பினும் அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள். ஏதாவது அசவுகரியமாக தெரிந்தால் உடனே மருத்துவமனையை தொடர்பு கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

    கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டில் சிகிச்சையில் இருப்பவர்களை நான் நேரில் சென்று பார்த்தேன். அவர்கள் நலமுடன் இருக்கிறார்கள். ஓமிக்ரான் வேகமாக பரவும் என்று கூறப்படுவதால், ஒருவேளை பாதிப்பு அதிகமாக ஏற்பட்டால் அதை எதிர் கொள்ளவும் அரசு தயாராக உள்ளது. புத்தாண்டு கொண்டாடும் போது நட்சத்திர விடுதிகளில் கூட்டம் சேருவதைத் தவிர்க்க வேண்டும் மா.சுப்ரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+