• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முடிஞ்சுது.. பாஜக பஞ்சதந்திரத்தில் மாட்டிய "பஞ்சபூதம்".. அதிமுக லீடர் அவரா.. பிரம்மாஸ்திரம் வந்தாச்சு

எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களுக்கு பாஜக வலை விரித்துள்ளதாக கூறப்படுகிறது
Google Oneindia Tamil News

சென்னை: விரைவில் எடப்பாடி பழனிசாமியின் டீமுக்குள்ளேயே ஒரு பிளவு வரும் என்றும், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களுக்கு பாஜக மேலிடம் குறி வைத்துள்ளதாகவும் ஒரு தகவல் வட்டமடித்து வருகிறது..

அதிமுகவின் வாங்கு வங்கி என்பது பாஜகவுக்கு மிக மிக முக்கியமானது.. ஆனால், எம்பி தேர்தலை பற்றி எடப்பா பழனிசாமி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை என்றே தெரிகிறது.

அதாவது தோற்றாலும் பரவாயில்லை, வரப்போகும் சட்டமன்ற தேர்தல்தான் மிக முக்கியமானது என்று நினைக்கிறாராம்.. அதனால்தான், பாஜகவின் வேண்டுகோளுக்கு செவிசாய்க்கவில்லை என்கிறார்கள்..

ஜி20.. முகம் முழுக்க பொங்கி வழியும் சிரிப்பு.. டெல்லி புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி ஜி20.. முகம் முழுக்க பொங்கி வழியும் சிரிப்பு.. டெல்லி புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி

 5 புள்ளிகள்

5 புள்ளிகள்

எனினும், ஒருங்கிணைந்த அதிமுகவை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் இல்லாவிட்டால், 2 விதமான அதிரடிகளை பாஜக கையில் எடுக்க கூடும் என்கிறார்கள்.. ஒன்று, ஒருங்கிணைந்த அதிமுகவுக்கு எடப்பாடி ஒப்புக்கொண்டால் மட்டுமே இரட்டை இலை தரப்படுப்படும் இல்லாவிட்டால், முடக்கிவிட வேண்டியதுதான் என்ற முடிவுக்கு பாஜக வரக்கூடும் என்கிறார்கள்.. இரண்டாவதாக, எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது தரப்புக்கான நெருக்கடிகளை அதிகப்படுத்தவும் வாய்ப்புள்ளதாகவும், அதற்கான அதிரடியைதான் விஜயபாஸ்கரை வைத்து பாஜக, ஆட்டத்தை துவங்கி உள்ளதாகவும் சொல்கிறார்கள்.

 மெயின் ட்விஸ்ட்

மெயின் ட்விஸ்ட்

அந்தவகையில், மொத்தம் 5 பேருக்கு குறி வைத்துள்ளதாம் மேலிடம்.. இதில் மெயின் குறி எடப்பாடி என்றாலும், விஜயபாஸ்கரை வைத்து, எடப்பாடிக்கு நெருக்கடி கொடுக்க பிளான்கள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.. தனக்கு எதிரான காய்நகர்த்தல்கள் அதிகரித்து வரும்நிலையில், இன்று மாலை டெல்லிக்கு புறப்பட்டு பிரதமர் தலைமையில் நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ள எடப்பாடி, மாநாட்டிற்கு பிறகு பிரதமர் மோடியை தனியாக சந்தித்து பேசுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

 அனுமானங்கள்

அனுமானங்கள்

அப்படி சந்தித்து பேசும்போது, பாஜகவை சமாதானப்படுத்த எடப்பாடி மீண்டும் முயற்சி செய்தால், அது அவருக்கே மைனஸாகிவிடக்கூடும் என்றும் அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள்... கடந்த சில தினங்களாகவே, எடப்பாடி டீமில் உள்ளவர்களுக்கு பாஜக தூண்டில் போட்டுள்ளதாக செய்திகள் பரபரத்து வரும் நிலையில், இதே தகவலைதான், இந்நிலையில், மூத்த பத்திரிகையாளர் மணி ஒரு டிவி சேனலுக்கு பேட்டியாக தந்துள்ளார்.. அந்த பேட்டியில் சில கேள்விகளையும் அவர் எழுப்பியுள்ளதுடன், பாஜக முன்னெடுக்கும் அரசியல் குறித்த தன்னுடைய அனுமானங்களையும் பகிர்ந்துள்ளார்..

 டைரி மேட்டர்

டைரி மேட்டர்

அதில், "பொதுவாக ஆளும் கட்சிகள் மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவார்கள்.. ஆனால், ஆளும் கட்சியில் உள்ள அமைச்சர் வீட்டில், தேர்தல் கமிஷனே 89 கோடியை இவ்வளவு பெரிய தொகையை பிடித்துள்ளதும், இது தொடரபாக விசாரணை நடத்துங்கள் என்று வருமான வரித்துறைக்கு பரிந்துரைத்ததும் சுதந்திர இந்தியாவிலேயே இதுதான் முதல்முறையாக இருக்கும்.. குட்கா வழக்கு ரெயிடின்போது டைரி சிக்கியது.. 40 கோடி பணம் காவல்துறை அதிகாரிகளுக்கு தரப்பட்டதாக எழுதப்பட்ட அந்த டைரியை, வருமானவரித்தறையினரே கைப்பற்றுகிறார்கள்.. 206.42 கோடி வருமானவரி ஏய்ப்பு செய்துள்ளதாக மற்றொரு புகார் கிளம்பியது.

 சார்ஜ் ஷீட்

சார்ஜ் ஷீட்

7 வருடமாக வருமான விஜயபாஸ்கர் வரி செலுத்தவில்லை என்கிறார்கள்.. 200 கோடி ரூபாய்க்கு வருமானவரி கட்டவில்லையாயானால், அவர் குறைந்தபட்சம் 600 கோடியையாவது சம்பாதித்திருக்க வேண்டும்.. இந்த 600 கோடி எங்கிருந்து அவருக்கு வந்தது? தமிழக காவல்துறையின் லஞ்ச ஒழிப்புத்துறை, உடனடியாக வழக்கு பதிவு செய்து விஜயபாஸ்கரை கைது செய்து சிறையில் தள்ள வேண்டும்.. ஆனால், திரும்ப திரும்ப ரெய்டுகளை மட்டும் திமுக அரசு நடத்துகிறது.. இதே விஜயபாஸ்கரிடம் அத்தனை முறை ரெயிடு நடந்தும் சார்ஜ் ஷீட் போடவில்லையே ஏன்? இதுவரை ஒருத்தரும் கைது செய்யவில்லையே ஏன்? எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் வீடுகளில் இன்னும் ரெய்டு நடக்கவில்லையே ஏன்? இதுகுறித்த கேள்விகளும் எழுகின்றன.

 டாக்குமெண்ட்கள்

டாக்குமெண்ட்கள்

அதிமுக கூட்டணியில்தான் இன்னமும் பாஜக இருக்கிறது.. என்டிஏ கூட்டணியில் இருப்பதாக எடப்பாடியும் சொல்கிறார்.. கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் 200 கோடி வரிஏய்ப்பு என்று சொல்வதும், பாஜக அரசுதான்.. அந்த பாஜகவில் உறவு வைத்துள்ளது அதிமுக.. அந்த அதிமுகவில் உள்ளவர் விஜயபாஸ்கர் என்றால் இதைவிட கேலிகூத்து என்ன இருக்கமுடியும்? எடப்பாடி ஆட்சியில் ஊழலில் திளைத்ததை கூட்டணி கட்சியான பாஜகவே கோர்ட்டில் ஆவணமாக தாக்கல் செய்துள்ளது.. அப்படியென்றால், இந்த 2 கட்சியில் உள்ளவர்களும் எப்படி ஒன்றாக சேர்ந்து ஓட்டு கேட்பார்கள்? விஜயபாஸ்கர் அடித்த கொள்ளையில் பாஜகவுக்கும் பங்கு போயிருக்கிறது என்று எடுத்து கொள்வதா?

 இமேஜ்ஜா டேமேஜ்ஜா

இமேஜ்ஜா டேமேஜ்ஜா

பாஜகவின் பிளான் இதுதான்.. எடப்பாடியின் அரசியல் பாஜகவுக்கு பிடிக்கவில்லை.. ஒன்றுபட்ட அதிமுகவையே விரும்புகிறார்கள். அதிமுக பெயரை டேமேஜ் செய்து கொண்டே, அந்த கட்சியுடன் கூட்டணி வைத்து கொள்ள வேண்டும்.. மோடிதான் அதிமுகவின் ஒரே தலைவராக இருக்க வேண்டும் என்று பாஜக நினைக்கிறது.. அதனால்தான், எடப்பாடியை தாங்கி நிற்கக்கூடிய 4, 5 அமைச்சர்களை பாஜக டார்கெட் செய்கிறது.. அதில் ஒருவர்தான் விஜயபாஸ்கர்.. அடுத்து வேலுமணி, தங்கமணி, சிவி சண்முகம், முனுசாமி இனிமேல் லிஸ்ட்டில் வருவார்கள.. இதில் மெயின் டார்கெட் எடப்பாடிபழனிசாமி என்பதை மறந்துவிடக்கூடாது.

 டபுள் டபுள் டபுள்

டபுள் டபுள் டபுள்

விஜயபாஸ்கர் எடப்பாடிக்கு எதிராக திரும்புவாரா? அப்படி திரும்பினால் விஜயபாஸ்கர் தப்பித்து விடுவார்.. இரட்டை இலக்கத்துக்கு மேல், சீட் ஒதுக்க வேண்டும், குறைந்த 15 சீட்டுகளையாவது பாஜக எதிர்பார்க்கும்.. இல்லாவிட்டால், இரட்டை இலையை முடக்கக்கூடும்" என்று தன் அனுமானங்களை அதில் தெரிவித்துள்ளார்.. தேர்தல் நெருங்க நெருங்க, நாளுக்கு நாள் பல்வேறு யூகங்களும், சலசலப்புகளும் கிளம்பினாலும், வழக்கு விசாரணைகளை யாராலும் மாற்ற முடியாது.. அந்தவகையில், அதிமுகவில் முக்கிய தலைவர்களுக்கு சிக்கல்கள் பெருகி வருவதாக தெரிகிறது.

மாஸ்டர் ஸ்ட்ரோக்

மாஸ்டர் ஸ்ட்ரோக்

இதையறிந்த மாஜிக்களில் சிலர், பாஜகவுக்கு வெள்ளைக்கொடியை காட்டவும் தயாராகி வருகிறார்களாம்.. சிலர் வெள்ளைக்கொடி காட்டவும் தூது அனுப்பி வருகிறார்களாம்.. மாஜிக்கள் பாஜக பக்கம் சாய்வது, எடப்பாடிக்கான நெருக்கடியை அதிகரிக்கும் விதமாகவே அமைந்துள்ளது.. அந்தவகையில், "இரட்டை இலை சின்னத்துடன், இரட்டை தலைமையில், இரட்டை இலக்க சீட்டுகள்" என்ற காயநகர்த்தல் எப்படி நகர போகிறது என்பதை இனிமேல்தான் பார்கக் வேண்டும்..!!

English summary
5 top Stars: Is BJP targeting 5 supporters of Edappadi Palaniswami and what are AIADMKs plan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X