வீட்டில் இருக்குற தண்ணி டேங்க் மட்டும் தான் கழட்டிட்டு வரல.. திரும்பி பார்க்க வைத்த சென்னைவாசி
சென்னை: சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் தட்டுப்பாடு ஏற்படும் என்கிற பயத்தில், பலர் பெட்ரோலை மொத்தமாக நிரப்பி வருகிறார்கள்.. பெட்ரோல் நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது. சென்னையில் ஒரு பெட்ரோல் பங்கில் ஒருவர் , 20 லிட்டர் வாட்டன் கேனில் பெட்ரோல் வாங்கினார்.. அதை பார்த்து கொதித்து போன நெட்டிசன்கள் பலர், அவரை விமர்சித்து வருகிறார்கள். வாட்டகேனில் பெட்ரோல் வாங்கிய நபர் சென்னை புகைப்படம் இந்தியாவில் பேசுபொருளாகி உள்ளது.
சென்னை கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டது போல் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் நிலவுகிறது. இதனால் பயந்து போன மக்கள், பெட்ரோலை வாகனங்களில் மொத்தமாக நிரப்பி வருகிறார்கள். பேருந்து, லாரி வைத்துள்ளவர்கள், டீசலலை பேரல் பேரலாக வாங்கி அடுக்க தொடங்கி உள்ளார்கள். இதனால் பெட்ரோல்நிலையங்களில் கூட்டம் கடுமையாக அலைமோதுகிறது.

இந்த சூழலில் சென்னை பெட்ரோல் பங்கில் ஒரு நபர், வேட்டியை மடித்துக் கொண்டு வேகமாக 20 லிட்டர் கேனை எடுத்துக் கொண்டு, பெட்ரோல் வாங்க வந்தார். இதை பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பலரும் அவரிடம் ஏன் இப்படி வாங்குறீங்க..இப்படி பாதுகாப்பு இல்லாமல் வாங்கி சென்றால் விபத்து ஏற்படும் என்று எச்சரித்தனர். ஆனால் அவர் எச்சரிக்கையை மீறி வாங்கி சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள நெட்டிசன் ஒருவர், "யாரு எக்கேடு கெட்டு போனா எனக்கென்ன, நான் எவளோ விவரம் தெரியுமான்னு சொல்லிக்குறதுல நம்ப ஊருக்கு எப்பயுமே தனி ஆர்வம் உண்டு. அதாவது உலகத்துல இருக்கறவன் எல்லாம் மக்கு பண்டாரம் தான் மட்டும் தான் விவரம்னு மனசுக்குள்ள நினைப்பு. ஒரு highly inflammable எரிபொருளை, எந்த பாதுகாப்பும் இல்லாம, ஜட்டி வரை லுங்கியை ஏத்தி விட்டுட்டு வாங்கிட்டு போய் வீட்ல இருக்கிறவுங்க பாதுகாப்பற்றி கவலைபடாம வீட்டுக்கு கொண்டு போய்ட்டா இவரு விவரமான ஆள.. வீட்டில இருக்குற தண்ணி டேங்க் மட்டும் தான் இவனுங்க கழட்டிட்டு வரல" இவ்வாறு காட்டமாக கூறியுள்ளார்.
இன்னொரு நெட்டிசன் கூறுகையில், "பெட்ரோலை சேகரிக்க அதற்கென தனி டேங்குகள் உண்டு அதை தான் உபயோகிக்க வேண்டும் இவர் பெரிய புத்திசாலி தண்ணி தண்ணி கேனை பயன்படுத்துகிறார், இந்த மாதிரி தண்ணீர் பாட்டில்களில் டேங்குகளில் பெட்ரோலை வைத்தால் அது கொஞ்ச நேரத்தில் அந்த பிளாஸ்டிக்கை உருக வைக்கும் அது இன்ஜின்களுக்கு கேடு" என்று கூறியுள்ளார்.
மூன்றாவதாக ஒரு நெட்டிசன் கூறுகையில், என்னை பொறுத்த வரை அவர்மேல் எந்த தவறும் இல்லை, இப்படி தான் கொரோனா நேரத்தில் அரசாங்கம் சொல்லுவதை நம்பி காத்திருந்து இறுதியில் ஆக்சிஜன் பெட் கிடைக்காமல் இறந்தோர் பலர். அந்த ரணம் இன்னும் பலர் நெஞ்சில் அகலவில்லை. இந்த நாட்டை பொறுத்த வரை அவர் குடும்பத்தை அவரவர் காத்து கொள்ள வேண்டும் என்றார்.
நான்காவதாக ஒரு நெட்டிசன் கூறும் போது, இந்த வழக்கம் நம்ம கிட்ட அது கொஞ்சம் கம்மியா தான் இருந்துச்சு. வடக்கே சிலர், ஆந்திராவில் சிலர் இந்த தப்ப கொஞ்சமும் கூச்சப்படாம பண்ணிட்டு அதையே ஒரு திறமை நு இந்த சமூகத்துல நம்ப வெச்சிட்டாங்க. அதனால நம்மாலும் சரி தப்பு பக்கமா அப்படியே பண்றாங்க" என்றார்.
-
பிழைப்பு தேடி தமிழ்நாடு வந்த சிறுவன்..காலி ரயில் பெட்டியில் சீரழித்த கயவர்கள்! துடித்து பலியான சோகம்! -
சிவரஞ்சனியை போட்டு தள்ளிட்டேன், மகளையும் முடிச்சுட்டேன்!" காலங்காத்தாலேயே அம்மாவுக்கு போன் செய்த மகன் -
சொந்த செலவில் சூனியம்.. 2022க்கு பிறகு அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி! டிரம்புக்கு எதிராக மக்கள் -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
பிரபலங்களின் இறுதி நிமிடங்களை கண்ணியமாய் மாற்றிய flying squad! ஃப்ரீசர் பாக்ஸ் வந்தது இப்படித்தான் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. மீண்டும் தமிழகத்தில் வெளுக்க போகும் மழை.. தென் மாவட்டங்களுக்கு அலர்ட்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல்












Click it and Unblock the Notifications