சென்னை கே கே நகரில் சாலையில் 20 அடி ஆழ பள்ளங்கள்.. சிக்கியது டெம்போ டிராவலர் வாகனம்!
சென்னை: சென்னை கே கே நகரில் மிகப் பெரிய அளவில் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் அதில் டெம்போ டிராவலர் வாகனம் ஒன்று சிக்கியுள்ளது.
வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் சென்னையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மிக பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு பெரு வெள்ளத்திற்கு பிறகு மிக அதிக மழை ஞாயிற்றுக்கிழமை சென்னையில் பதிவானது.
இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. பல இடங்களில் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளதால் தரமின்றி கிடக்கும் சாலைகள் பெயர்ந்து கிடக்கின்றன.

பெருமளவில்
இந்த நிலையில் சென்னை கே.கே. நகரில் மழையால் பல இடங்களில் பெருமளவில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. நேற்று இரவு காமராஜர் சாலை மற்றும் அண்ணா மெயின் ரோடு ஆகிய இடங்களில் மிகப் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. அவ்வாறு ஏற்பட்ட ஒரு பள்ளத்தில் அங்கு நின்றிருந்த டெம்போ டிராவலர் வாகனம் சிக்கிக் கொண்டது.

20 அடி ஆழம்
இந்த பள்ளங்கள் 20 அடி ஆழம் வரை இருப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள். ஒவ்வொரு மழையின் போதும் இத்தகைய சிரமங்களை சந்திப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள். இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில் காமராஜர் சாலை மற்றும் அண்ணா மெயின் ரோடு சாலைகளில் மெட்ரோ குடிநீர் பணிகளுக்காக பைப் புதைக்கும் பணிகள் அண்மையில்தான் நடந்து முடிந்தன.

மெட்ரோ வாரியம்
பள்ளத்தை மூடி சாலையை அமைத்துக் கொள்ளுமாறு கடந்த வாரம்தான் மெட்ரோ குடிநீர் வாரியம் எங்களுக்கு ஆட்சேபமில்லா சான்றை அளித்தது என்கிறார். அது போல் இதுகுறித்து மெட்ரோ குடிநீர் அதிகாரி ஒருவர் கூறுகையில் 20 அடி குழிகளை தோண்ட நாங்கள் பெரும் பாடுபட்டோம். பள்ளத்தில் இருந்த பைப்லைன்கள் எல்லாம் மிக மோசமாக இருந்தன.

காயமடையவில்லை
அவற்றை நாங்கள் மாற்றிவிட்டோம். ஆனால் அதில் சில கசிவுகள் உள்ளன. அதை விரைவில் சரி செய்துவிடுவோம். இதுவரை யாருடைய உயிருக்கும் எந்த ஆபத்தும் நேரவில்லை, யாரும் காயமடையவில்லை என்றார் அந்த அதிகாரி. இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில் ஒவ்வொரு முறையும் இதே சிரமத்தை நாங்கள் அனுபவித்து வருகிறோம். இந்த பள்ளங்கள் மிகவும் ஆபத்தானவையாக உள்ளன. அவை 20 அடி ஆழம் கொண்டவைகளாக உள்ளன. இதற்கு நிரந்தர தீர்வை அரசு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்றார்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications