"சிலையை தூக்கிடு".. அன்னபூரணியின் 2வது கணவர் சிலையை உடைத்த 3வது கணவர்.. என்னதான் நடக்குது?
சென்னை: அன்னபூரணியின் இரண்டாவது கணவர் அரசுவின் சிலையை மூன்றாவது கணவர் ரோஹித் நீக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தன்னை ஆதிபராசக்தி அம்மாவின் அவதாரம் என்று சொல்லிக்கொள்ளும் அன்னபூரணி தற்போது இணையம் முழுக்க வைரலாகி உள்ளார். நான் அவதாரமாக உருவெடுத்து இருக்கிறேன்.. ஜனவரி 1ம் தேதி அருள்வாக்கு தரப்போகிறேன் என்று அன்னபூரணி தெரிவித்து இருந்தார்.
ஆனால் செங்கல்பட்டில் நடக்க இருந்த இவரின் நிகழ்ச்சிக்கு போலீசார் தடை விதித்து உள்ளனர். இதையடுத்து இவரை பற்றி புதிது புதிதாக பல செய்திகள் வெளியே வர தொடங்கி உள்ளன.

இரண்டாவது கணவர்
அன்னபூரணி இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக ஏற்கனவே சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சர்ச்சையில் சிக்கினார். இதில் லட்சுமி என்ற பெண்ணின் கணவர் அரசு என்பவரை அன்னபூரணி அபகரித்துவிட்டதாக புகார் வைக்கப்பட்டது. இவர்கள் இருவரும் பின்னர் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்ததாக கூறப்படுகிறது.

மர்ம மரணம்
இவர்கள் இருவரும் இயற்கை ஒலி (ளி) என்ற பெயரில் சென்னையில் மாந்திரீக அமைப்பு ஒன்றை நடத்தி வந்துள்ளனர். இதில் மக்களின் நோய்களை குணப்படுத்துவதாக கூறி அன்னபூரணி - அரசு இருவரும் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் சில வருடங்களுக்கு முன் அரசு மர்மமான முறையில் பலியாகிவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இவர் எப்படி மரணம் அடைந்தார் என்று தெரியவில்லை.

மூன்றாவது கணவர்
இவர் தன்னுடன் ஒளியாக கலந்துவிட்டதாக பேட்டிகளில் அன்னபூரணி குறிப்பிட்டு வருகிறார் தவிர.. அரசு எப்படி பலியானார் என்பதை விளக்கமாக சொல்லவில்லை. இந்த நிலையில் மூன்றாவதாக ரோஹித் என்பவரை திருமணம் செய்து கொண்டு அன்னபூரணி வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களும் இப்போது ஒன்றாக இல்லை.

சிலை
இந்த நிலையில் சென்னையில் மதுராந்தகம் அருகே அன்னபூரணி தனது இரண்டாவது கணவருக்கு என்று 50 சென்ட் நிலம் வாங்கி அங்கு அவருக்கு சிலை வைத்து இருக்கிறார். அங்கு தினமும் வழிபாடும் நடத்தி வந்துள்ளார். அதோடு இதற்கு பின்புதான் தான் ஆதி பராசக்தியின் அவதாரம் என்றும் அன்னபூரணி குறிப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

நீக்கம்
இப்படிப்பட்ட நிலையில்தான் அன்னபூரணியின் மூன்றாவது கணவர் ரோஹித் இரண்டாவது கணவர் அரசின் சிலையை உடைத்து நீக்கி உள்ளாராம். சிலை இருந்த இடத்திற்கு சில நாட்களுக்கு முன் வந்த ரோஹித் சிலையை அகற்றி, உடைத்து எடுத்து அங்கிருந்து தூக்கி சென்றுள்ளார். இதற்கு பின்பான காரணம் தெரியவில்லை.
Recommended Video

வாழ்ந்து வருகிறார்
இதையடுத்து ரோஹித்துடனும் தற்போது அன்னபூரணி வாழவில்லை என்று கூறப்படுகிறது. இன்னொரு நபருடன் இவர் வாழ்ந்து வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விரைவில் இவர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கவும் அதிக வாய்ப்புகள் உள்ளன.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications