'திருத்தணி முருகன் கோவிலில் நடிகை ரோஜா சாமி தரிசனம்'.. அரசியல் நிகழ்வுக்காக வரவில்லை என பேட்டி
திருவள்ளூர்: திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகையும், ஆந்திர பிரதேச சுற்றுலா அமைச்சருமான ஆர்.கே ரோஜா குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். அங்கு பேட்டியளித்த அவர் அரசியல், பொது நிகழ்ச்சிக்காக வரவில்லை சாமி தரிசனம் செய்வதற்காகவே வந்தேன் என பேசினார்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் வீடாக திருத்தணி ஸ்ரீ பால சுப்பிரமணிய சுவாமி கோவில் திழந்து வருகிறது.
சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள இந்த திருத்தணி முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.

முருகன் கோவிலில் நடிகை ரோஜா
இந்த நிலையில் ஐப்பசி முதல் நாளான இன்று அதிகாலை திருத்தணி ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேக பூஜை நிகழ்ச்சி நடந்தது. இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதில் நடிகையும், ஆந்திர பிரதேச மாநிலத்தின் சுற்றுலாத்துறை அமைச்சருமான ஆர்.கே ரோஜாவும் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். இதற்காக அவர் அதிகாலையிலேயே குடும்பத்தினருடன் கோவிலுக்கு வந்தார்.

ரோஜாவுடன் புகைப்படம் எடுத்த பக்தர்கள்
கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகை ரோஜாவுக்கு தொடர்ந்து பூஜை முடிந்ததும் திருக்கோவிலின் சார்பில் பிரசாதங்கள் மற்றும் பூமாலைகள் வழங்கப்பட்டது. இதன் பின்னர் கோவிலை சுற்றி பார்த்துவிட்டு மலைக் கோயிலில் கீழே இறங்கி கொண்டிருந்தார். அப்போது பக்தர்கள் பலரும் அவருடன் புகைப்படம் எடுக்க அலை மோதினர். அவர்களுடன் நடிகை ரோஜா புகைப்படம் எடுத்தார்.

மகிழ்ச்சியாக உள்ளது
தொடர்ந்து கோவில் முன்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நடிகை ரோஜா கூறியதாவது:- திருத்தணி முருகப்பெருமானை தரிசனம் செய்வதற்காகவே இன்று வந்தேன். எனது அண்ணன் மற்றும் அண்ணியாருடன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கோவிலில் அபிஷேக நிழச்சியை கண்டுகளித்து சாமி தரிசனம் செய்தேன்.

சாமி கும்பிடவே வந்தேன்
அரசியல் நிகழ்வுக்காகவோ.. அல்லது வேறு எந்த பொது நிகழ்வுக்காகவோ நான் வரவில்லை. சாமி தரிசனம் செய்வதற்காகவே கோவிலுக்கு வந்தேன். இவ்வாறு அவர் பேசினார். ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகை ரோஜா காவடி எடுத்து தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications