பசும்பொன்னில் ஆப்சென்ட்..! தேவர் சிலைக்கு இபிஎஸ் சென்னையில் மரியாதை செலுத்தியதன் பின்னணி
சென்னை: சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பெரியகுளத்தில் உள்ள முத்தராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 114-வது ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. பொதுமக்கள், பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள் தமிழகத்தின் பல மாவட்டங்களில் முத்துராமலிங்க தேவரின் உருவப்படத்துக்கு, உருவச்சிலைக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

எடப்பாடி பழனிசாமி மரியாதை
குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பசும்பொன் கிராமத்தில் தேவர் ஜெயந்தி விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதேபோல் அமைச்சர்களும் மரியாதை செலுத்தினார்கள். சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

ஓ.பன்னீர்செல்வம்
அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்கள் பலரும் நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்கள். அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளத்தில் முத்தராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அ.தி.மு.க.வின் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவரும் பசும்பொன் கிராமத்துக்கு சென்று மரியாதை செலுத்துவது வழக்கம்.
Recommended Video

பசும்பொன் செல்லாதது ஏன்?
ஆனால் இந்த ஆண்டு இருவருமே பசும்பொன் கிராமத்துக்கு செல்லவில்லை, ஓ.பி.எஸ்.சின் மனைவி காலமாகி, 60-வது நாள் அனுசரிக்கப்படுவதினால் அவர் பசும்பொன் செல்லாமல் சொந்த ஊரிலேயே மரியாதை செலுத்தியதாக கூறப்படுகிறது. இதேபோல் எடப்பாடி பழனிசாமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

மதுரையில் சசிகலா
இதன் காரணமாக அவரும் பசும்பொன் கிராமத்துக்கு செல்லாமல் சென்னையிலேயே தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தி இருக்கிறார். அதே வேளையில் அதில் அ.தி.மு.க.வை கைப்பற்ற மீண்டும் களமிறங்கியுள்ள சசிகலா கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய பிரசார வாகனத்திலேயே அவர் மதுரை சென்றது குறிப்பிடத்தக்கது.
-
லேட் ஆகுது மதுரவாயல் பாலம்.. முடங்கும் கார் ஏற்றுமதி! சென்னை போர்ட்டில் நடப்பது என்ன? எக்ஸ்க்ளூசிவ் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications