Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உள்ளே மீட்டிங்.. ஈபிஸ் வீட்டுக்கு வெளியே திரண்ட கரைவேட்டிகள்.. எல்லா காரும் கிரீன் வேஸ் சாலை நோக்கி!

Subscribe to Oneindia Tamil

சென்னை : நாளை நடைபெற இருக்கும் அதிமுக பொதுக்குழுவுக்காக சென்னை வந்துள்ள பொதுக்குழு உப்பினர்கள், எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு படையெடுத்து வருகின்றனர்.

தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு திரண்டு வரும் கார்களும், வேன்களும் செல்வதெல்லாம் கிரீன் வேஸ் சாலை நோக்கி எனக் கூறும் அளவுக்கு, அதிமுகவினர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

தனது வீட்டுக்கு வெளியே பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்கள் திரண்டிருக்கும் நிலையில், முக்கிய நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.

நாளை பொதுக்குழு

நாளை பொதுக்குழு

பரபரப்பான அரசியல் சூழலில் அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தை சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் நாளை நடத்த எடப்பாடி பழனிசாமி தரப்பு தயாராகி வருகிறது. ஜூன் 23ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டம் பாதியில் கலைந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளர் ஆக்கியே தீர்வது என்ற தீர்மானத்தோடு எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

 பரபர ஏற்பாடு

பரபர ஏற்பாடு

பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. வானகரம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்து பொதுக்குழு கூட்டம் நடைபெறும் மண்டபத்துக்கு செல்லும் வானகரம் - அம்பத்தூர் சாலை வரை வரவேற்பு போஸ்டர்கள் பேனர்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த பேனர்கள் அனைத்திலும் ஓ.பன்னீர்செல்வத்தின் படம் புறக்கணிக்கப்பட்டுள்ளன. பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமான பெஞ்சமின் செய்து வருகிறார்.

அதிகரிக்கும் ஆதரவு

அதிகரிக்கும் ஆதரவு

நாளை பொதுக்குழு கூட்டம் தொடங்குவதற்கு கால் மணி நேரம் முன்னதாக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவுள்ளது. இதற்கிடையே, எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை 2,452 ஆக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியிலேயே எடப்பாடி பழனிசாமிக்கு பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டத்திலேயே 20 பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே ஓபிஎஸ் ஆதரவாளர்களாக இருக்கின்றனர். மற்ற 42 பேரும் ஈபிஎஸ் பக்கம் இருக்கின்றனர்.

சென்னையில் குவியும் நிர்வாகிகள்

சென்னையில் குவியும் நிர்வாகிகள்

வெளி மாவட்டங்களில் உள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் ஒரு நாள் முன்னதாக, இன்றே சென்னைக்கு வந்துவிடுமாறு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியதால், அதற்கு ஏற்ப பயண ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர்கள் திட்டமிட்டு, இப்போதே பல்வேறு தென் மாவட்டங்களைச் சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்கள், முக்கிய நிர்வாகிகள் சென்னையில் திரண்டுள்ளனர்.

 ஈபிஎஸ் வீட்டில் திரளும் கூட்டம்

ஈபிஎஸ் வீட்டில் திரளும் கூட்டம்

நாளை அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு பொதுக்குழு உறுப்பினர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில், தனது இல்லத்தில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோருடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

Recommended Video

    எடப்பாடியை அதிமுகவிலிருந்து நான் நீக்குகிறேன்! ஓபிஎஸ் பரபரஅறிவிப்பு
    முக்கிய நிர்வாகிகள் வருகை

    முக்கிய நிர்வாகிகள் வருகை

    பல்வேறு பகுதிகளில் இருந்தும் கார்கள், வேன்களில் சென்னை வந்துள்ள அதிமுகவினர் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெளியே திரண்டுள்ளனர். முக்கிய நிர்வாகிகள் பலரும் பூங்கொத்துகளோடு எடப்பாடி பழனிசாமியை சந்திப்பதற்காக காத்திருக்கின்றனர். நாளை பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், சென்னை வந்துள்ள உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவிக்க அவரது இல்லத்திற்கு அணிவகுத்து வருவதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+