அவருக்கும் கட்சிக்கும் என்ன சம்பந்தம்? அவர பத்தி ஏன் பேசணும்.. அதிமுக மீட்டிங் - சூடான ஜெயக்குமார்!
சென்னை : ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பல முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளனஇந்தக் கூட்டத்திற்குப் பின்னர் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டி அளித்தார்.
எதிர்க்கட்சி யார் என்பது குறித்து நடைபெறும் விவாதம் பற்றிய கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், நாங்கள்தான் முதன்மையான எதிர்க்கட்சி. மீதி அனைத்தும் எதிர்க் கட்சிகள் கிடையாது, உதிரி கட்சிகள் எனத் தெரிவித்துள்ளார்.

நான்கரை மணி நேரம்
செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "கருத்து கேட்பு என்ற அடிப்படையில் கருத்துகள் கேட்கப்பட்டது. நான்கரை மணிநேரம் அமைதியாக ஆரோக்கியமான விவாதம் நடைபெற்றது பொதுக்குழு கூடவுள்ள நிலையில் இன்றைக்கு இந்த கூட்டம் நடைபெற்றது. பொதுக்குழுவுக்கு முன்பாக இப்போது நடந்த கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த விவாதம் ஆரோக்கியமான முறையில் இருந்தது. இது குறித்து பெரும்பான்மையான தலைமை கழக நிர்வாகிகள், பெரும்பான்மையான மாவட்ட கழக செயலாளர்கள் கழகத்திற்கு ஒற்றைத் தலைமைதான் தேவை என்பதை வலியுறுத்தி கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்கள். கழகம் ஒரு வலிமையான இயக்கம் என்ற வகையிலே ஒற்றை தலைமை அவசியம் என்று வலியுறுத்திப் பேசினார்கள்." எனத் தெரிவித்தார்.

ஒற்றைத் தலைமை
இரட்டை தலைமையிலிருந்து ஒற்றைத் தலைமை வருவதற்கான காரணம் என்ன என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், "காலம் அனைத்தையும் பார்த்துக்கொண்டுதான் உள்ளது. அன்றைக்கு இருந்த சூழ்நிலை வேறு. இன்றைக்கு இருக்கும் சூழ்நிலை வேறு. இன்றைக்கு கழக தொண்டர்களும் சரி, கட்சி நிர்வாகிகளும் சரி, பொதுவாக எதிர்பார்ப்பது கட்சிக்கு ஒன்றைத் தலைமை தேவை என்பது. அந்த காலத்தின் கட்டாயத்தின் அடிப்படையில் இன்றைக்கு அந்த பொருள் குறித்து விவாதிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் பெரும்பான்மையானவர்கள் அதற்கு அமோகமான ஆதரவைத் தெரிவித்துள்ளார்கள்." என பதிலளித்தார்.

சசிகலா
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சசிகலா குறித்து விவாதிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "அவருக்கும் கட்சிக்கு என்ன சம்பந்தம் உள்ளது. கட்சியில் இல்லாதவர்கள் குறித்துப் பேச வேண்டாம். சசிகலா குறித்து விவாதிக்க வேண்டிய அவசியம் என்ன? யார் அவர்? அவருக்கும் கட்சிக்கும் தொடர்பு உள்ளதா? அவர்களுக்கும் தொடர்பு இல்லாத ஒருவரை, சம்பந்தம் இல்லாத ஒருவரை, கட்சிக்கு கிஞ்சித்தும் சம்பந்தம் இல்லாத ஒருவர் குறித்து பொதுக்குழுவில் விவாதித்து எங்களுடைய நேரத்தை நாங்கள் ஏன் வீணாக்கவேண்டும். நேரத்தை வீணாக்க விரும்பவில்லை." எனக் காட்டமாகத் தெரிவித்தார்.

வாக்கு வங்கி குறையாது
மேலும் பேசிய அவர், "எம்.ஜி.ஆரின் சின்னம் இரட்டை இலை இருக்கும் வரைர் கழகத்தின் ஒட்டு வங்கி என்றைக்கும் குறையாது. கழகத்திற்கு அழிவு என்பது கிடையாது. 100 வருடத்திற்கு மேலும் கழகம் இருக்கும். வெற்றி, தோல்வி என்பது நாணயத்தின் இருபக்கம் போன்றது. 96ல் தோற்றோம். 2001ல் வந்தோம்.2006 ல் தோற்றோம். 2011 ல் வந்தோம். இப்போது நடைபெற்ற தேர்தலில் எங்களுக்கும் திமுகவுக்கும் மூன்று சதவீத வாக்குகள்தான் வித்தியாசம். வரும் பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் அதிகமான இடங்களை பெறுவோம். 2026 ல் அதிக வாக்குகள் பெற்று மீண்டும் புரட்சித்தலைவர் ஆட்சி,புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சியை அமைப்போம்.

உதிரி கட்சிகள்
தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி யார் என்பது குறித்து விவாதிக்கவேண்டிய அவசியமே இல்லையே. எங்கள் கடமையை நாங்கள் செய்து வருகிறோம். அவரவர்கள் எதிர்க்கட்சி என்று சொல்லிக்கொள்ள வேண்டியதுதான். ஆனால் நாங்கள்தான் முதன்மையான எதிர்க்கட்சி. மீதி அனைத்தும் எதிர்க் கட்சிகள் கிடையாது. உதிரி கட்சிகள்." எனத் தெரிவித்தார்.
-
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
தவெகவில் இணைய திட்டமா? ஆதரவாளர்களுடன் ஆலோசித்த பின் விஜயபாஸ்கர் சொன்ன பதில் -
GOAT படத்துல Traffic Police மாதிரி பேசிட்டு.. இது சினிமா இல்ல! மக்கள் பணி! அமைச்சரை விளாசிய அதிமுக! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
அதிமுக சிதறி சின்னாபின்னமாகிடுச்சு.. தவெகவில் இணைந்த கையோடு எடப்பாடியை வெளுத்த வெல்லமண்டி நடராஜன்! -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா












Click it and Unblock the Notifications