சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தூள் தூளாக சிதறிய "கணக்கு".. செம டென்ஷனில் எடப்பாடியார்.. எனினும் விடாத கடைசி நம்பிக்கை..!

Google Oneindia Tamil News

சென்னை: உச்சக்கட்ட கோபத்தில் இருக்கிறாராம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.. இதற்கு காரணம் நேற்றைய தினம் வெளியான எக்ஸிட் போல் முடிவுகள்தான் என்கிறார்கள்!

தேர்தலுக்கு முன்பிருந்தே மிகுந்த நம்பிக்கையில் இருப்பவர் எடப்பாடியார்.. பிரச்சாரத்தின்போதே இவரிடம் தன்னம்பிக்கையும், வீரியமும் அதிகமாகவே காணப்பட்டது.. அனைத்து கட்சிகளுக்கும் முன்பாக, இவர்தான் பிரச்சாரத்தை முதலில் கையில் எடுத்தார்.. தனித்தே பிரச்சாரத்துக்கு சென்றார்..

தனி ஒருவராகவே தமிழகம் முழுக்க வலம் வந்து வாக்குகளை சேகரித்தார்.. ஓபிஎஸ்கூட ஓரிரு இடங்களுக்கு மட்டுமே சென்றார்.. ஆனால், எடப்பாடியார் அளவுக்கு அதிமுகவில் அப்படி ஒரு தீவிரத்தை யாரும் முன்னெடுக்கவில்லை என்பதே உண்மை. வாக்குப்பதிவு அன்றும் அதிமுகவே வெற்றி பெறும் என்று மிகுந்த நம்பிக்கையில் இருந்தவர்..

 ஆலோசனை

ஆலோசனை

எத்தனையோ அமைச்சர்கள் கலங்கி போய் இவருக்கு போனை போட்டபோதும்சரி, பலமுறை நடத்திய ஆலோசனைகளிலும் சரி, அனைவருக்கும் நம்பிக்கையை ஊட்டிக் கொண்டே இருந்தார்.. இதற்கெல்லாம் காரணம், தனிப்பட்ட முறையிலும், தனியார் ஏஜென்சிகள் மூலமும், உளவுத்துறை மூலமும், கள நிலவர ரிப்போர்ட்டை கேட்டு பெற்றிருந்தார்.. அதில், 130 இடங்களில் அதிமுக வெற்றி பெறும் என்று கூறியிருந்ததுதான், முதல்வரின் நம்பிக்கைக்கு காரணம்.

 எடப்பாடியார்

எடப்பாடியார்

ஆனால், நேற்று சாயங்காலம் வந்த எக்ஸிட் போல் முடிவுகள் எடப்பாடியாரின் நம்பிக்கையை ஓரளவு தகர்த்து விட்டதாம்.. அதிமுகவுக்கு 70-ஐ தாண்டாது என்ற கணிப்பும் அவருக்கு டென்ஷன் ஏற்படுத்தி விட்டதாம்.. வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் சில சமயங்களில் முடிவுகளை மாற்றியமைக்கக்கூடும் என்றாலும், பெரும்பாலான நிறுவனங்கள் நேற்று அதிமுகவுக்கான சாதகமான முடிவை சொல்லவில்லை என்பதே உண்மை.

திமுக

திமுக

ஒருவேளை டைம்ஸ் நவ்-சிவோட்டர் மட்டுமாவது அதிமுக ஜெயிக்கும் என்று சொல்லும் என கணக்கு போடப்பட்டது.. அந்த நிறுவனமும் திமுகவே ஜெயிக்கும் என்று சொல்லிவிட்டதுதான், முதல்வருக்கு அதிர்ச்சியாக இருந்ததாம். சசிகலா இல்லாமலேயே தென்மாவட்டங்களில் வெற்றி பெறுவோம் என்று நம்பினார், கடைசியில் அதுவும் இல்லை..

 தென்மாவட்டம்

தென்மாவட்டம்

ஒருவேளை தென்மாவட்டம் இல்லாவிட்டாலும் வடமாவட்டமாவது கைகொடுக்கும் என்றுதான் பாமக இடஒதுக்கீடு விஷயத்தில் கணக்கு போட்டார்.. கடைசியில் அதுவும் இல்லை.. தன் கைவசம் இருந்த கொங்குவும் திமுகவின் பிடியில் சென்றுள்ளதாக எக்ஸிட்போல்கள் தெரிவித்து விட்டன.. அதனால், எடப்பாடி பழனிசாமி டென்ஷனாகி விட்டார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்... இது எல்லாவற்றிற்கும் மேலாக, 130 இடங்களில் அதிமுக ஜெயிக்கும் என்று கணித்து தந்தவர்கள் மீதுதான் செம கோபத்தில் இருக்கிறாராம்..!

English summary
ADMK will win in 70+ Constitution, Exit Polls
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X