சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏழு மாதங்களுக்கு பிறகு.. முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது.. முடங்கியது தமிழகம்.. இவையெல்லாம் இயங்கலாம்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் ஏழு மாதங்களுக்கு பிறகு இன்று தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் முக்கிய நகரங்கள் வெறிச்சோடின.

Recommended Video

    அமலுக்கு வந்தது முழு ஊரடங்கு… சாலைகள் ‘வெறிச்’…. காவல்துறை தீவிர கண்காணிப்பு!

    தமிழகத்தில் கொரோனா 2-வது அலை போட்டு பாடாய்படுத்தி வருகிறது. கொரோனா பாதிப்புகள் தினமும் உச்சத்தில் சென்று வருகின்றன. உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழகத்தில் 14,842 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டு புதிய உச்சத்தை எட்டியது. கொரோனாவுக்கு மேலும் 80 பேர் உயிரிழந்துள்ளனர்.

    உலக வரிசை கொரோனா பாதிப்பில் இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் .. ஒரே நாளில் 2,761 பேர் உயிரிழப்பு! உலக வரிசை கொரோனா பாதிப்பில் இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் .. ஒரே நாளில் 2,761 பேர் உயிரிழப்பு!

    மீண்டும் முழு ஊரடங்கு

    மீண்டும் முழு ஊரடங்கு

    கொரோனவை கட்டுப்படுத்த வேண்டும் என்பதால் தமிழக அரசு சுமார் ஏழு மாதங்களுக்கு பிறகு ஊரடங்கு என்னும் ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது. தினமும் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு இந்த வாரம் முதல் அமலுக்கு வந்துள்ளது. இது தவிர வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்தது.

    கடைகள் அடைப்பு

    கடைகள் அடைப்பு

    அதன்படி சுமார் ஏழு மாதங்களுக்கு பிறகு இன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளத. நேற்று இரவு 10 மணிக்கு தொடங்கிய முழு ஊரடங்கு நாளை காலை 4 மணி வரை 30 மணி நேரம் அமலில் இருக்கும். இந்த நிலையில் தமிழகத்தில் இன்று அத்தியாவசிய பணிகளை தவிர வேறு எவற்றுக்கும் அனுமதி கிடையாது. இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட், காய்கறி கடைகள், டாஸ்மாக் மதுக்கடைகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள் உள்பட அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

    இவை இயங்கலாம்

    இவை இயங்கலாம்

    அத்தியாவசிய பணிகளான பால் வினியோகம், தினசரி பத்திரிகை வினியோகம், மருத்துவமனைகள், மருந்தகங்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த தொடர்புடைய பணிகள், அனைத்து சரக்கு வாகனங்கள், விவசாயிகளின் விளை பொருட்களை எடுத்துச்செல்லும் வாகனங்கள், எரிபொருள் எடுத்துச்செல்லும் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    போக்குவரத்து கிடையாது

    போக்குவரத்து கிடையாது

    சில குறிப்பிட்ட தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளிக்கப்படும். முழு ஊரடங்கு நாளில் திருமண விழாக்களில்100 நபர்களுக்கு மிகாமலும், துக்க நிகழ்வுகளுக்கு 50 நபர்களுக்கு மிகாமலும் கலந்துகொள்ள அனுமதி உண்டு. அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து சேவைக்கும், ஆட்டோ, டாக்சி சேவைக்கும் அனுமதி இல்லை. இதனால் போக்குவரத்து இல்லாததால் தமிழகம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

    அடையாள அட்டை கட்டாயம்

    அடையாள அட்டை கட்டாயம்

    எனினும் விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் இயங்கும் என்பதால் பெரும்பாலான பயணிகள் ஆட்டோ, டாக்சியை பயன்படுத்தி பயணம் செய்கின்றனர். ஆனால் பயணம் தொடர்பான டிக்கெட்டை வைத்து இருந்தால்தான் அனுமதி அளிக்கப்படுகிறது. அத்தியாவசிய பணிகள் மற்றும் தொழிற்சாலைகளில் வேலைக்கு செல்பவர்கள் அதற்குரிய அடையாள அட்டையை வைத்திருந்தால்தான் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

    சென்னை நிலைமை

    சென்னை நிலைமை

    முழு ஊரடங்கால் சென்னை நகரின் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. சென்னையில் புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் மெட்ரோ ரயில்கள் இன்று அதிகாலையில் இருந்து ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை இயக்கப்படுகிறது. மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயில்களில் வரும் பயணிகள் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். சென்னை மாநகர தூய்மை பணியாளர்களுக்கு இன்று 100 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    மதுரை, கோவை திருச்சி

    மதுரை, கோவை திருச்சி

    இது தவிர தமிழகத்தின் முக்கிய நகரங்களான மதுரை, கோவை, திருச்சி, சேலம், ஈரோடு, நெல்லை, நகார்கோவில், தஞ்சாவூர் உள்ளிட்ட பல இடங்களில் மக்கள் கூட்டம் இல்லாததால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் சாலைகள் வெறிச்சோடி உள்ளன. தமிழகம் முழுவதும் முக்கிய பஸ் நிலையங்களும், மார்கெட்டுகளும் ஆள் அரவமின்றி காணப்படுகின்றன.

    போலீசார் கண்காணிப்பு

    போலீசார் கண்காணிப்பு

    முழு ஊரடங்கு என்பதால் மாநிலம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேவையில்லாமல் வெளியில் சுற்றுபவர்களை எச்சரித்து அனுப்பி வருகின்றனர். அவசியம் இல்லாமல் சுற்றுபவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்த்துள்ளனர். மேலும் அபராதமும், வழக்குப்பதிவும் செய்யப்படும் எனவும் கூறியுள்ளனர்.

    English summary
    After seven months in Tamil Nadu, a complete curfew has been imposed today. Thus the major cities of Tamil Nadu were deserted
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X