அக்னி நட்சத்திரம் முடியப்போகுது.. புழுக்கம் போகலையே..இன்னும் எத்தனை நாளைக்கு சுடும்
கோடை வெயிலின் உச்சமான கத்திரி வெயில் என அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் நாளையுடன் நிறைவு பெறுகிறது.
சென்னை:
கோடை வெயிலின் உச்சமான கத்திரி வெயில் என அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் நாளையுடன் விடைபெறுகிறது. சில ஊர்களில் மழை பெய்தாலும் பல ஊர்களில் 100 டிகிரி பாரன்ஹீட் தாண்டி வெப்பம் சுட்டெரித்தது.
ஆண்டு தோறும் கோடை காலத்தின் உச்சமான மே மாதத்தில் 'அக்னி நட்சத்திரம்' என அழைக்கப்படும் கத்திரி வெயில் தொடங்குவது வழக்கம். இக்காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும்.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன் சேலம், ஈரோடு, வேலூர், திருச்சி, திருப்பூர், தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களில் 98 முதல் 102 பாரன்ஹீட் வரை வெயிலின் அளவு இருந்தது.

மார்ச்சில் தகித்த வெப்பம்
நடப்பாண்டை பொறுத்தவரை அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே மார்ச் இறுதியில் இருந்தே வெயில் கொளுத்த தொடங்கியது. வெயிலின் தாக்கம் மிகமிக அதிகமாக இருந்தது. இதனால் பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது.

காப்பாற்றிய மழை
இந்நிலையில் அக்னி நட்சத்திரம் கடந்த மே 4ம் தேதி தொடங்கிய நிலையில் தமிழகத்தில் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து மக்கள் உஷ்ணத்தில் இருந்து தப்பினர். அசானி புயல், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் இவைகளால் தமிழகத்தின் பல பகுதிகளில் அக்னி நட்சத்திர கால கட்டத்தில் அவ்வப்போது மழை பெய்தபடியே காணப்பட்டது. இதனால் இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் குளுமையாக இதமாக கழிந்தது.

சுட்டெரித்த சூரியன்
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பல நகரங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானது. இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியுள்ளது. இந்த ஆண்டு அக்னி நட்சத்திரத்தின் போது அதிகபட்சமாக மே 23ம் தேதி மீனம்பாக்கத்தில் 104 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.

சதமடித்த வெப்பநிலை
மே24ம் தேதி சென்னை, மீனம்பாக்கம், கடலூர், கரூர் பரமத்தி, மதுரை விமான நிலையம் ஆகிய இடங்களில் 104 டிகிரி வெயில் பதிவானது. 25ஆம் தேதி தமிழகத்தில் 13 இடங்களில் வெயில் 100 டிகிரிக்கு மேல் பதிவானது. நுங்கம்பாக்கம், தஞ்சாவூர், திருச்சி, திருத்தணி, வேலூரில் தலா 102 டிகிரியும், ஈரோடு, மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல்லில் தலா 100 டிகிரியும் வெப்பநிலை பதிவானது

வெயில் சுடும்
இந்த நிலையில் நாளையுடன் அக்னி நட்சத்திரம் நிறைவு பெறுகிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டில் அக்னி நட்சத்திரத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் இல்லாமல் விடைபெறுகிறது. அக்னி நட்சத்திரம் முடிந்தாலும் மேலும் சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications