அதிமுக வாரிசு அரசியல் இல்லையா? அதிமுக பற்றியே தெரியாத பழனிசாமி..! முரசொலி தலையங்கம் கடும் விமர்சனம்!
சென்னை : அதிமுகவில் வாரிசு அரசியல் கிடையாது என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூறிய நிலையில், அதனை கடுமையாக விமர்சித்து திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில், எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க.-வைப் பற்றியே தெரியவில்லை என்பது இதன் மூலமாகத் தெரிகிறது என கடுமையாக விமர்சித்துள்ளது.
கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அதிமுகவில் வாரிசு அரசியல் கிடையாது எனவும், கட்சிக்காக உண்மையாகவே உழைப்பவர்களுக்கே உயர்பதவி என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார்.
இதற்கு பல தரப்பினரும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தனர். எம்ஜிஆரின் மனைவி தொடங்கி, தற்போது பதவியில் உள்ள பலரும் அதிமுக மூத்த நிர்வாகிகளிம் வாரிசுகள் தான் என பலரது பெயர்களை சுட்டுக் காட்சி விமர்சித்து வருகின்றனர்.

எடப்பாடி பழனிசாமி அதிமுக
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவைப் பற்றி எதுவுமே தெரியாது என முரசொலி நாளேட்டில் விமர்சிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள தலையங்கத்தில்," ஆட்சியில் இருக்கும் போது எதையுமே செய்யாத பழனிசாமி, பதவி பறிக்கப்பட்டதும் பேசும் பேச்சுகள் 'தத்துவ முத்துகளாக' இருக்கின்றன.தான் என்ன சொல்கிறோம் என்பது அவருக்கே தெரியவில்லை.தன்னைப் புத்திசாலி யாக நினைத்துக் கொண்டு தானேஏதேதோசொல்லிக் கொண்டு இருக்கிறார். இப்படித்தான் ஒரு கருத்தைச் சொல்லி இருக்கிறார் பழனிசாமி. "அ.தி.மு.க.வில் வாரிசு அரசியல் கிடையாது" - என்று திருவாய் மலர்ந்துள்ளார் பழனிசாமி. அவருக்கு அ.தி.மு.க.-வைப் பற்றியே தெரிய வில்லை என்பது இதன் மூலமாகத் தெரிகிறது.

எம்.ஜி.ஆர். கட்சி
எம்.ஜி.ஆர். தொடங்கிய கட்சி அ.தி.மு.க. முதலமைச்சராக இருக்கும் போது தான் எம்.ஜி. ஆர். அவர்கள் மறைந்தார்கள். அவரை அடுத்து தமிழ் நாட்டின் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஜானகி. அவர், எம்.ஜி.ஆரின் மனைவி தானே தவிர மக்கள் சேவகர் அல்ல. அதற்கு முந்தைய நாள் வரைக்கும் அவருக்கும், அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கட்சிக் கூட்டங்களில் கூட அவர் பேசியது இல்லை. எந்தப் பொறுப்பிலும் இருந்ததும் இல்லை. எம்.ஜி.ஆரின் மனைவி என்ற ஒரே வாரிசுத் தகுதியுடன் தான் ஜானகி அவர்கள், அன்றைய தினம் முதலமைச்சராக ஆக்கப்பட்டார். இது வாரிசு அரசியல் இல்லையா?

ஜெயலலிதாவுக்கு போட்டி
ஜானகிக்கும், ஜெயலலிதாவுக்கும் போட்டி ஏற்பட்டது. எம்.ஜி.ஆர். அவர்கள் இறந்தபோது, 'உடன்கட்டை ஏறிவிடலாமா என்று யோசித்தேன்' என்று சொன்னவர் ஜெயலலிதா. அதாவது தனக்கும் - எம்.ஜி.ஆருக்குமான நெருக்கத்தைத் தான் அப்படி சுட்டிக் காட்டினார் ஜெயலலிதா. எம்.ஜி.ஆருடன் 29க்கும் மேற்பட்ட படங்களில் உடன் நடித்தவர் ஜெயலலிதா. தன்னோடு நடித்த பலரையும் வெவ்வேறு காலக்கட்டத்தில் அரசியலுக்குள் கொண்டு வந்தவர் - கொண்டுவர நினைத்தவர் எம்.ஜி.ஆர். வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கும், ஜெயலலிதாவுக்கும் பதவி கொடுத்தார் எம்.ஜி.ஆர். 'நான் அரசியலுக்கு வரவிரும்பினால் பதவி தரத் தயார்' என்று எம்.ஜி.ஆர். சொன்னதாக சரோஜா தேவி அவர்களே பலமுறை பேட்டி அளித்துள்ளார்கள்.

தத்தெடுத்த வாரிசு முறை
இதில் இருந்து தெரிவது எல்லாம் தன்னோடு நடித்த நடிகைகளை, தன்னோடு நடித்தவர்கள் என்ற ஒற்றைத் தகுதியுடன் அரசியலுக்குள் கொண்டு வர நினைத்தார் எம்.ஜி.ஆர். இது 'தத்தெடுத்த வாரிசு' முறை அல்லவா? ஜானகிக்கும், ஜெயலலிதாவுக்கும் நடந்த போட்டியில் ஜெயலலிதா வென்றார். ஜெயலலிதாவைச் சந்தித்து, ஜானகி தனதுகட்சியை இணைத்தார். வாரிசுகள் ஒன்று சேர்ந்தார்கள். அப்படிஎம்.ஜி.ஆரின் வாரிசுகளால் உருவாக்கப்பட்டதுதான் ஜெயலலிதாவின் அ.தி.மு.க. அந்த ஜெயலலிதாவுக்கு உதவி செய்வதற்காக போயஸ் கார்டனுக்குள் போனவர் சசிகலா. அவரது கட்டுப்பாட்டில்தான் 1990 முதல் அந்தக் கட்ச இருந்தது. சசிகலாவின் குடும்ப வாரிசுகளின் கொலுமண்டபமாக அ.தி.மு.க. மாறியது.

சசிகலாவின் குடும்பம்
பழனிசாமிகள், கப்பம் கட்டியது சசிகலாவின் குடும்பத்திடம்தான். இவர்களில் யார் மந்திரி, யார் எந்திரி என்பதை தீர்மானித்தவர் சசிகலாவும் அவரது குடும்பத்தினரும்தான். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அந்தக் கட்சிக்கு கடைக்கோடித் தொண்டர் யாரும் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட வில்லை. புறக்கடையில் இருந்த சசிகலாதான் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டமன்றக் கட்சித் தலைவராக, எந்த சாமானியனும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அதுவரை சாம்ராஜ்யத்தை மறைமுகமாக நடத்திய சசிகலாவைத்தான் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கத் தேதி குறிக்கப்பட்டது.

நான்காண்டு சிறைத்தண்டனை
ஆனால் நான்காண்டு சிறைத்தண்டனை உறுதிசெய்யப்பட்டதால் - கோட்டைக்குப் போக நினைத்த சசிகலா - சிறைக்குப் போக வேண்டியதாயிற்று. அப்போதும் தனது வாரிசுரிமையை நிலைநாட்டிவிட்டுத் தான் போனார் சசிகலா. கூவத்தூரில் பெரும்பான்மை அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வணக்கம் சொல்லி சட்டமன்றக் கட்சித் தலைவராக பழனிசாமி தேர்வு ஆகவில்லை. சசிகலாவின் காலை நோக்கி ஊர்ந்து போய் தனது விசுவாசத்தைக் காட்டி 'அடிமை வாரிசாக' அறிவிக்கப்பட்டார். பண்ணையார்களின் காலில் விழுந்து நிலத்தை பினாமிக்குத்தகை 'பெறுவதைப் போல பதவியைப் பெற்றவர் பழனிசாமி. தான் யாரால் பதவி பெற்றோம், அத்தகைய பதவியை தனக்குத் தந்தவருக்கு என்ன தகுதி இருந்தது என்பதை பழனிசாமியால் சொல்ல முடியுமா?

டிடிவி தினகரன் போட்டி
அதுதான் போகட்டும். இராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி. தினகரனுக்காக வாக்குக் கேட்டார் பழனிசாமி. முதலமைச்சராக இருக்கும் போது வாக்குக் கேட்டார் பழனிசாமி. அந்த டிடிவி யார்? பழனிசாமியால் விளக்கிச் சொல்ல முடியுமா? அவருக்கு மறந்திருந்தால், நினைவூட்டுவது நமது கடமை. சசிகலாவின் அக்கா பெயர் வனிதா. அவர் மகன் தான் டிடிவி தினகரன்.

நடிக்கிறார் பழனிசாமி
சசிகலா மூலமாக அ.தி.மு.க. பலன் அடைந்து விடக் கூடாது என்பதற்காக பா.ஜ.க. ஆடிய பரமபத விளையாட்டில் அந்தக் குடும்பத்தை எதிர்க்கும் நாடகத்தில் இப்போது தற்காலிகமாக நடித்துக் கொண்டு இருக்கிறார் பழனிசாமி. இதனை பா.ஜ.க. செய்யாமல் போயிருந்தால் சசிகலா - டிடிவி அன்கோ முன்னால் கைகட்டிச் சேவகம் செய்து கொண்டு இருப்பார் பழனிசாமி.இவர் மீதான புகார்களை வைத்து மிரட்டிக் கொண்டு இருக்கிறது டெல்லி.மிரண்டு கொண்டு இருக்கிறார் பழனிசாமி. இவர் வாரிசுகளைப் பற்றிப் பேசலாமா?

ஓ.பன்னீர்செல்வம் மகன்
போகட்டும். அ.தி.மு.க.வின் இன்றைய ஒருங்கிணைப்பாளர் பெயர் ஓ.பன்னீர்செல்வம். இன்றைய அ.தி.மு.க.வுக்கு நாடாளுமன்ற மக்களவையில் ஒரே ஒரு உறுப்பினர்தான் இருக்கிறார் அவர் பெயர் ரவீந்திரநாத்குமார். இவர் பன்னீர்செல்வத்தின் மகன். அதாவது வாரிசு.இதுவாவது பழனிசாமிக்கு தெரியுமா?ஒருவேளை, பன்னீர்செல்வத்துக்கு எதிராகத் தான் 'அ.தி.மு.க.வில்வாரிசு அரசியல் கிடையாது' என்று பழனிசாமி சொல்லத் தொடங்கி இருக்கிறாரா? பொறுத்திருந்து பார்ப்போம்!" என அந்த தலையங்கத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
-
வணிக காஸ் சிலிண்டர் ரூ.5000, 6000 என விற்பனை.. சென்னை,கோவையில் மூடப்படும் ஏராளமான உணவங்கள் -
சென்னைக்கு சரிபட்டு வராது.. டபுள் டெக்கர் ஓபன் டாப் பஸ் திட்டத்தை கைவிடும் எம்டிசி.. பயணிகளுக்கு ஏமாற்றம் -
சிறிய கட்சிகளுக்கு தாமரை சின்னம்.. வாக்கு வங்கியை காக்க பாஜக ஐடியா.. எடப்பாடி காதுக்கு போன மெசேஜ்! -
174 தொகுதிகளில் இரட்டை இலை.. அமித்ஷாவிடம் காய் நகர்த்திய எடப்பாடி.. 2029 கணக்கால் இறங்கி வந்த பாஜக! -
அதிமுகவுக்கு கூடுதல் சீட் கேட்டு டெல்லி சென்ற இபிஎஸ்! "அப்ப கடைக்கு ஓனர் டக்ளஸ் அண்ணே இல்லையா? நேரு -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
’அம்மா’ இல்லாத பிள்ளையான அதிமுக..எடப்பாடியை அசிங்கப்படுத்திய அமித் ஷா! மனதுக்குள் குமுறும் ர.ர.க்கள் -
இது திமுக கோட்டை.. அதிமுகவுக்கு ஒத்துவராது.. சென்னையை கூட்டணி கட்சியிடம் தாரைவார்க்க தயாரான எடப்பாடி -
இதுவரை 4 முறை டெல்லிக்கு பயணம் செய்த எடப்பாடி பழனிசாமி! அதிமுக பாணியையே மாற்றிய பாஜக! -
மார்ச் மாதத்தில் நடந்த மேஜிக்.. சென்னையில் அசாதாரணமான மழை.. வெதர்மேன் வெளியிட்ட பதிவு -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது!












Click it and Unblock the Notifications