Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புதுமை பொங்க, இனிமை தங்க, செல்வம் பெருக.. ஓபிஎஸ் - ஈபிஎஸ் கூட்டாக பொங்கல் வாழ்த்து செய்தி

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் மகிழ்ந்து கொண்டாடும் இனிய பொங்கல் திருநாளில், புதுமை பொங்க, இனிமை தங்க, செல்வம் பெருக, வளமை வளர, அனைவருக்கும் உளமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளனர்.

தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் திருவிழா, உழவர் திருநாள் ஆகியவை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட இருக்கிறது. இதனையொட்டி மக்கள் பண்டிகையை கொண்டாட தயாராகி வருகின்றனர்.

உலகமெங்கும் வாழும் தமிழர்களுக்கு முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சியினர், பிரபலங்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அதிமுக சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான ஓபிஎஸ் ஈபிஎஸ் ஆகியோர் தங்கள் பொங்கல் வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.

ஓபிஎஸ் - இபிஎஸ் வாழ்த்து

ஓபிஎஸ் - இபிஎஸ் வாழ்த்து

திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் மகிழ்ந்து கொண்டாடும் இனிய பொங்கல் திருநாளில், புதுமை பொங்க, இனிமை தங்க, செல்வம் பெருக, வளமை வளர, அனைவருக்கும் எங்களது உளமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம் என கூறப்பட்டுள்ளது.

பொங்கலோ பொங்கல்

பொங்கலோ பொங்கல்

போகிப் பண்டிகை, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் (உழவர் திருநாள்) என 4 நாட்கள் விமரிசையாகக் கொண்டாடும் பண்டிகை பொங்கல் பண்டிகை ஆகும் எனவும், தை முதல் நாளன்று புதுப் பானையில் அரிசியிட்டு "பொங்கலோ பொங்கல்" என்று மகிழ்ச்சிக் குரல் எழுப்பி, இறைவனை வணங்கி அனைவரும் ஒன்றுபட்டு, வேற்றுமைகளை மறந்து உள்ள மகிழ்ச்சியுடன் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவார்கள். மனத் தூய்மை, அச்சமின்மை, துணிவு, கருணை போன்ற நல்ல எண்ணங்கள், புதுப் பானையில் உள்ள நற்பொங்கல் போன்று நம் உள்ளத்தில் நிறைந்திருந்தால் நாடு நலமும், வளமும் பெறும் என கூறியுள்ளனர்.

வாழ்வில் ஏற்றம் பெற திட்டங்கள்

வாழ்வில் ஏற்றம் பெற திட்டங்கள்

பிறருக்கு உணவு வழங்கி உண்ண நினைப்பது தெய்வப் பண்பாகும் எனவும், அனைத்து மக்களுக்கும் உணவு கிடைத்திட அல்லும் பகலும் அயராது பாடுபட்டு வரும் உழவர் பெருமக்கள் தெய்வப் பண்புள்ளவர்கள் ஆவார்கள் எனவும் இத்தகைய உழவர் பெருமக்கள் வாழ்வில் ஏற்றம் பெற்றிட மாண்புமிகு அம்மா அவர்களும், அதனைத் தொடர்ந்து அம்மாவின் அரசும் பல்வேறு நலத் திட்டங்களைத் தீட்டி, சீரிய முறையில் செயல்படுத்தின என்பதை இந்த நேரத்தில் பெருமையோடு நினைவுகூற விரும்புகிறோம் என ஓபிஎஸ் இபிஎஸ் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொங்கல் வாழ்த்து

பொங்கல் வாழ்த்து

தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாளில், தமிழர்கள் வாழ்வில் அன்பும், அமைதியும் நிலவட்டும்; நலமும் வளமும் பெருகட்டும்; அனைவருக்கும் உடல் நலத்தையும், மகிழ்ச்சியையும் தரட்டும்; கடினமாக உழைத்து வரும் நம் விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வில் வளத்தைக் கொண்டுவந்து சேர்க்கட்டும் என்று, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது வழியில் மனதார வாழ்த்தி, எங்களுடைய பொங்கல் திருநாள் வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறோம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+