ஆகாஷ் வானொலி செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண்ஸ்வாமி! கம்பீர குரலால் வசீகரித்தவர் காலமானார்
சென்னை: ‛அகில இந்திய வானொலியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ‛ஆகாஷ் வானொலி செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண்ஸ்வாமி'' எனும் கம்பீர குரலால் வசீகரித்த பிரபல செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணஸ்வாமி மும்பையில் காலமானார். அவருக்கு வயது 87 ஆகும்.
தொலைக்காட்சி அதிகமாக பயன்பாட்டுக்கு வராத காலத்தில் மக்கள் அதிகமாக வானொலி கேட்டு தான் அன்றாட செய்திகளை அறிந்து கொண்டனர். இதனால் வானொலி கேட்பது என்பது பலருக்கும் வாடிக்கையாக மாறி போனது.
வானொலியில் முகம் தெரியாது என்பதால் குரல் மட்டுமே ஒவ்வொருவருக்கும் அடையாளமாகும். இதனால் ஒவ்வொருவரின் தமிழ் உச்சரிப்பு, செய்தியை எடுத்து கூறும் ஸ்டைல் உள்ளிட்டவற்றால் சிலர் புகழ் பெற்றனர்.

சரோஜ் நாரயண்ஸ்வாமி
அதன்படி அன்றைய காலத்தில் வானொலியில் வசீகர குரலால் நம்மை வசீகரித்தவர்களின் முக்கியமானவர் தான் சரோஜ் நாராணயணஸ்வாமி. இவர் அகில இந்திய வானொலியில் பணியாற்றியானார். ‛‛ஆகாஷ் வானொலி செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண்ஸ்வாமி'' என அவர் கூறுவதற்கு இன்றளவும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

35 ஆண்டு பணி
மேலும் அவர் தனது தனித்துவ கம்பீர குரலால் செய்திகளை எடுத்துரைக்கும் விதம் அனைவரையும் ஈர்த்தது. இதனால் அவருக்கு தமிழகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் இருந்தது. உள்ளூர் முதல் உலகத்தின் ஒவ்வொரு இடங்களிலும் நடக்கும் விஷயங்களை அவர் குரலில் கேட்டு அறிந்ததை இன்றும் பலர் மறக்கவில்லை. 35 ஆண்டுகள் வரை வானொலியில் பணியாற்றிய அவர் அதன்பிறகு ஓய்வு பெற்றார்.

மும்பையில் காலமானார்
அதன்பிறகு தமிழ் படங்கள், ஆவணப்படங்களுக்கு குரல் கொடுத்து வந்தார். இந்நிலையில் தான் சின்னஞ்சிறு வயது முதல் நம் நெஞ்சங்களை கம்பீர குரலுடன் வசீகரித்து ஒவ்வொருவரின் வீட்டிலும் ஒலித்த கணீர் குரலுக்கு சொந்தக்காரரான சரோஜ் நாராயணஸ்வாமி இன்று காலமானார். பணி ஓய்வுக்கு பிறகு மும்பையில் வசித்து வந்த அவர் இன்று காலமாகி உள்ளார். அவருக்கு வயது 87.

கலைமாமணி விருது
சரோஜ் நாராயணஸ்வாமியின் பூர்வீகம் தஞ்சாவூர் ஆகும். இவர் பிறந்து வளர்ந்து படித்தது அனைத்தும் மும்பையில் தான். பிஏ ஆங்கிலம் முடித்த அவர் தமிழில் புலமை பெற்று திகழ்ந்தார். அதன்பிறகு திருமணம் முடிந்து வானொலி பணிக்காக டெல்லியில் குடியேறினார். பணி ஓய்வுக்கு பின் மும்பையில் வசித்து வந்தார். இந்திய வானொலியின் முதல் தமிழ் செய்தி வாசிப்பாளராக இருந்த இவர் பெண்களுக்கு முன்னுதாரணமாக இருந்தார் என்றால் மிகையாகாது. ஒலிபரப்புத்துறையில் அவர் பணியாற்றியதை பாராட்டி இவருக்கு 2009ல் தமிழக அரசு சார்பில் கலைமாமணி விருது வழங்கப்பட்டது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications