சில நேரங்களில் ஒற்றை பென்குயின் போல் இருப்பதில் தவறில்லை! அண்ணாமலை பஞ்ச்! என்ன சொல்ல வராரு?
கோவை: அண்ணாமலை தனிப் பென்குயின் போன்று செயல்படுகிறாரா என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் அளித்துள்ள சுவாரஸ்யமான பதிலை பார்க்கலாம். மேலும் பேசாமல் ஐபிஎஸ் அதிகாரியாகவே தான் இருந்திருக்கலாம் என நினைத்தது உண்மையா என்பது குறித்தும் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், மத்திய பட்ஜெட் யாருமே குறை சொல்ல முடியாத அளவுக்கு இருக்கிறது.

மத்திய பட்ஜெட்டில் உள்கட்டமைப்புக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பட்ஜெட் 4 லட்சம் கோடிக்கு போடப்பட்டாலும் செலவினம் அதிகம் உள்ளது. 16ஆவது நிதி நிலை குழு அறிக்கையை மத்திய அரசு முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளது.
நிதி பகிர்வு
மாநிலங்களுக்கான நிதி பகிர்வு 201 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் 33 சதவீதமாக இருந்தது. பிரதமராக மோடி பதவியேற்ற பிறகுதான் 41 சதவீதமாக அதிகரித்துள்ளது. மத்திய அரசு எவ்வளவு தான் நித ஒதுக்கினாலும் மத்திய அரசு பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சிகள் குறை சொல்வது வாடிக்கையான ஒன்று.
7 முக்கியமான விஷயங்கள்
இந்த பட்ஜெட்டில் 7 முக்கியமான அம்சத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். அதன்படி தமிழகத்தில் பயோ பார்முலாவிற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். செமி கண்டக்டர் மிஷனுக்கு 40 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளார்கள்.
புதிய திட்டம்
2030 க்குள் இந்தியன் கோகோ என்பதற்காக புதிய திட்டம் அறிமுகம் செய்து உள்ளனர். தமிழ்நாட்டில் மகளிர்சுய உதவி குழு அதிகம் உள்ளது என கூறிய அவர் She Mart என்ற பெயரில் அவர்கள் கடை தொடங்கப்படும்.
அண்ணா வழி
அண்ணா வழியை பின்பற்றுகிறோம் என திமுக கூறுவதை யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். திமுக மீது இருக்கும் வெறுப்பு திராவிட சித்தாந்தத்தின் மீது இருக்கும் வெறுப்பாக மாறியுள்ளது. அண்ணாவை நாங்கள் பின்பற்றுகிறோம் என திமுகவினர் கூறுவது பசு மாட்டின் மீது காகம் அமர்வதை போன்றுதான் உள்ளது.
விஜய்
தமிழக வெற்றி கழக தலைவர் விஜயை பொறுத்தவரை, அவரிடம் இன்ஜின் இருப்பதாக தெரியவில்லை. எங்களிடம் 2 டபுள் இன்ஜின் இருக்கிறது. அவரது இன்ஜினில் ஆயில் இல்லை, வண்டி இல்லை, சேஸ் இல்லை, பெட்ரோல் இல்லை, டீசல் இல்லை, அதை ஸ்டார்ட் செய்வதற்கு ஆட்கள் இல்லை. இவர்களெல்லாம் பாரதிய ஜனதா கட்சியை பார்த்து டப்பா என்ஜின் என்று கூறுகிறார்கள்.
பொது கழிவறை
பொதுக் கழிவறைகளில் முகத்தை மூடிக் கொண்டு வந்து கிறுக்குவதைப் போலவே திமுகவினரும் பேசி வருகிறார்கள். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு தரிகட்டுப் போய் விட்டது. 5 ஆண்டுகளில் அவர்கள் எதுவுமே செய்யவில்லை, அவர்கள் தான் அல்வா கொடுத்து உள்ளார்கள்.
விசில் அடிக்க பேசுகிறார்
விஜய் பேசும்போது ரசிகர்கள் கைதட்ட வேண்டும், விசில் அடிக்க வேண்டும், ஆரவாரம் செய்ய வேண்டும் என்பதற்காக பேசுகிறார். மக்களை சந்திக்க வைக்க விஜய் முயல வேண்டும், விஜய் பேசும் போது மக்கள் சிந்திக்கும் அளவிற்கு எதுவும் இல்லை என்று தான் நான் பார்க்கிறேன் என்றார்.
சிங்காநல்லூர் தொகுதி
சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடுவது போன்ற பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறதே? என்ற கேள்விக்கு, "எனது தந்தையாரின் உடல்நிலை சரியில்லை என்பதால் அவரைப் பார்த்துக் கொள்ள வேண்டும். எனவே அடிப்படை வேலைகளை செய்வதற்கான சாத்திய கூறுகள் இல்லை. என்னால் அதிகமாக பயணம் செய்ய முடியாது. இதுபற்றி பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கூறிவிட்டேன். கட்சியும் அதனை ஏற்றுக் கொண்டு வேறு பொறுப்பாளர்களை நியமிப்பார்கள். அதே சமயம் பாஜக கட்சி என்ன சொல்கிறதோ, அதனை செய்வதற்கு ஒரு காரிய கர்த்தாவாக, தொண்டராக தயாராக இருக்கிறேன்.
கட்சிக்கு என்ன வேலை செய்ய வேண்டும், கூட்டணிக்கு என்ன வேலை செய்ய வேண்டும், பா.ஜ.க வேட்பாளர்களுக்கு என்ன வேலை செய்ய வேண்டும் என்று கட்சி என்ன கூறுகிறதோ அதனை நாங்கள் செய்வோம்.
வேறு பொறுப்பாளர்
தற்போதைக்கு அதிகம் பயனம் செய்ய முடியாத சூழ்நிலை எனக்கு உள்ளது. அதையும் கட்சி புரிந்து கொண்டார்கள். சம்பந்தப்பட்ட நேரத்தில் என்ன வேலை செய்ய வேண்டும் என்பதை கட்சி சொல்லட்டும். அதன் பிறகு அதனைப் பற்றி பேசுகிறேன். சிங்காநல்லூர் தொகுதிக்கு வேறு ஒரு பொறுப்பாளரை நியமனம் செய்வார்கள் என்றார்.
தனி பென்குயின்
இந்த நிலையில் அண்ணாமலை தனி பென்குயின் போன்று செயல்படுகிறாரா? என்ற கேள்விக்கு "அந்த ஒரு பென்குயின் அதன் பாதையை தனியார் தேர்ந்தெடுத்து சென்றதைப் பற்றி பேசுகிறோம். அது 2017ஆம் ஆண்டு வெளியான ஆவணப்படம், சில நேரம் அந்த ஒற்றை பென்குயின் போன்று இருப்பதும் தவறில்லை என நான் நினைக்கிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
கோவை வந்த மோடியை வரவேற்க அண்ணாமலை வராதது ஏன்? புது காரணம் சொன்ன நயினார் நாகேந்திரன் -
ராதாபுரத்தில் தமிழிசை, மயிலாப்பூரில் அண்ணாமலை? பாஜக எடுக்கும் முடிவு.. கமலாலயத்தில் நடந்தது என்ன? -
2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியில்லை? மொடக்குறிச்சியை திணிக்கும் பாஜக மேலிடம்? Annamalai அப்செட் -
நாடியே அடங்கிடுச்சே.. அதிமுக கூட போட்ட டீலா? அண்ணாமலை எங்கே? நயினாரிடம் நறுக்கென்று கேட்ட பியூஸ்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்? -
வானதி vs அண்ணாமலை.. எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு வைத்த செக்.. நடுவில் செந்தில் பாலாஜி வேறு -
அண்ணாமலை போட்டியிடும் தொகுதி இதுவா? ஈரோட்டில் பாஜக செம ட்விஸ்டு.. மொத்த மொடக்குறிச்சியும் வெயிடிங் -
பியூஸ் கோயல் சொன்ன வார்த்தை.. இறங்கி வந்த அண்ணாமலை.. பாஜக வேட்பாளராக சம்மதம்? என்ன நடந்தது? -
அண்ணாமலை பெயரும் பாஜக வேட்பாளர் பட்டியலில் இருக்கு.. மையக்குழு கூட்டத்துக்கு பின் உறுதி செய்த நயினார்! -
யாரு? எங்க? பாஜகவில் பரபர பஞ்சாயத்து! அதிமுகவால் கடுப்பான டெல்லி! மொடக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி? -
புதுச்சேரி குறித்து பக்கம் பக்கமாக புகார்.. தமிழக அரசியல் குறித்து கப்சிப்.. அண்ணாமலைக்கு வந்த சோதனை -
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்!












Click it and Unblock the Notifications