"குண்டை போட்ட அமெரிக்கா! பறக்கும் தங்கம்.. ஒரு கிராம் ரூ.25,000.." இடியை இறக்கிய ஆனந்த் சீனிவாசன்
சென்னை: மத்திய கிழக்கில் ஒரு பக்கம் போர் சூழல் உருவாகியுள்ள நிலையில், மற்றொரு பக்கம் தங்கம் விலையும் வரலாறு காணாத உச்சத்தை நோக்கிச் செல்ல ஆரம்பித்துவிட்டது. இதனால் தங்கம் விலை வரும் நாட்களில் மேலும் மேலும் உயரும் என்றே தெரிகிறது. இது தொடர்பாகப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளார். அது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!
தங்கம் விலை இப்போது மீண்டும் உச்சத்திற்குப் பறக்க ஆரம்பித்துவிட்டது. மத்திய கிழக்கில் ராக்கெட்கள் விழுவதற்கு முன்பே தங்கம் விலை எகிறி ஆரம்பித்துவிட்டது. போர் தொடரும் சூழலில் தங்கம் விலை மேலும் மேலும் உயரும் என்றே தெரிகிறது. இதற்கிடையே தங்கம் விலை வரும் காலங்களில் எப்படி இருக்கும் என்பது தொடர்பாகப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

ஆனந்த் சீனிவாசன்
இது தொடர்பாக அவர் தனது யூடியூப் பக்கத்தில், "இப்போது மக்கள் அனைவரும் ஆக்டிவ் மியூச்சுவல் ஃபண்ட்களை விட்டுவிட்டு தங்கம் பின்னால் போய்விட்டனர். எனவே, ஆக்டிவ் மியூச்சுவல் ஃபண்ட்களின் டர்ன் ஓவர் குறைந்துள்ளது. விட்டதைப் பிடிக்க வேண்டும் என்பதற்காகச் செபி அவர்களும் தங்கத்தை வாங்க அனுமதி கொடுத்துள்ளனர். இவ்வளவு தூரம் தங்கம் உயரும் என எதிர்பார்க்கவில்லை. இதனால் நீயும் தங்கம் வாங்கிக்கொள் என அனுமதி கொடுத்துள்ளனர்.
ஒரு கிராம் ரூ.25,000
ஏனென்றால் ஆக்டிவ் மியூச்சுவல் ஃபண்ட்டில் போர்ட்போலியோ மேனேஜருக்கு சம்பளம் தர வேண்டும். ஆனால், கோல்ட் இடிஎப்-இல் சம்பளம் தர தேவையில்லை. இதனால் ஆக்டிவ் மியூச்சுவல் ஃபண்ட்களில் கொஞ்சம் பங்குகளைக் குறைத்துவிட்டுத் தங்கத்தை வாங்கிக் கொள்வார்கள். இப்போது ஈரானில் குண்டு போட்டதால் இன்னொரு 5 ஆண்டுகளில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.25000க்கு போக வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.
கடந்த 5 ஆண்டுகள், 10 ஆண்டுகள், 15 ஆண்டுகள், 20 ஆண்டுகளில் தங்கத்தை மியூச்சுவல் பண்ட அசால்டாக காலி செய்துள்ளது. இந்த காலகட்டத்தில் மியூச்சுவல் ஃபண்ட் தங்கத்தை விட அதிக லாபம் கொடுத்ததே இல்லை. முன் எப்போதோ காலத்தில் அது தங்கத்தை விட அதிக லாபம் கொடுத்திருந்து என்ன பயன்? இன்று தங்கம் விலை எகிறிக் கொண்டு இருக்கிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.25,000 போய்விடும் எனப் பலரும் சொல்கிறார்கள். 5 முதல் 6 ஆண்டுகளில் தங்கம் விலை இந்தளவுக்கு உயர வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.
இந்திய ரூபாய் மதிப்பு
ஏனென்றால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிந்து கொண்டு இருக்கிறது. ரூ.100ஐ நிச்சயமாகத் தொட்டுவிடும். ரூ.120 எங்கள் லட்சியம் எனச் சொல்லலாம்.. ரூபாய் மதிப்பு இந்தளவுக்குச் சரிந்தால் தங்கம் விலை சர்வதேச உயரவில்லை என்றாலும் கூட இந்தியாவில் 20% முதல் 30% உயர்ந்துவிடும்.. அதாவது ரூபாய் மதிப்பு காரணமாகவே தங்கம் விலை ரூ.20,000க்கு போய்விடும்.
பிறகு டிரம்ப் வந்து அது, இது என அறிவிப்பை வெளியிட்டால் தங்கம் விலை மற்றொரு ரூ.5000 உயர்ந்து ரூ.25,000க்கு போய்விடும். நமது மக்கள் எல்லாம் முட்டாள் கிடையாது. ஒரு வருஷம் ஏமாறுவான், ரெண்டு வருஷம் ஏமாறுவான், அஞ்சு வருஷம் ஏமாறுவான். ஏமாந்துகொண்டே இருப்பானா? பொருளாதார வல்லுநர்கள் சொல்வதைக் கேட்பார்கள். மியூச்சுவல் ஃபண்ட் நஷ்டம் ஆகிறது என்று தங்கத்திற்குப் போய்விடுவார்கள். இதனால் மியூட்சுவல் பண்ட் முதலீடு குறைகிறதே என இதை அறிவித்துள்ளனர்.
தங்கமான தங்கம்
கடந்த 2 ஆண்டுகளில் மியூச்சுவல் ஃபண்ட் பெரிதாக லாபம் கொடுக்கவே இல்லை. அதே காலகட்டத்தில் எதாவது கடன் பத்திரத்தில் முதலீடு செய்திருந்தால் நல்ல வட்டி வந்திருக்கும். முதல் ஆண்டிலேயே மியூச்சுவல் ஃபண்ட்டை விடத் தங்கத்திற்கு இந்தளவுக்கு லாபம் என்றால்.. வரும் ஆண்டுகளில் தங்கத்தால் மியூச்சுவல் ஃபண்ட்களை பிடிக்கவே முடியாது. நேரடியாகப் பங்குகளை வாங்குவது என்பது வேறு மியூச்சுவல் ஃபண்ட் என்பது வேறு. அதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்" என்றார்.
இது சாதாரண செய்தி மட்டுமே.. நிச்சயம் இதைப் பொருளாதார ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக்கூடாது. உங்கள் பணத்தை முதலீடு செய்வதற்கு முன்பு உங்கள் நிதி ஆலோசகரைத் தொடர்பு கொள்ளவும்!
-
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
இங்கிட்டு ஹரி நாடார் மாதிரி..அங்கிட்டு அவரு! கழுத்து வலிக்க வலிக்க தங்கநகைகள்! ஒரே நாளில் உடைத்த ஐடி -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது












Click it and Unblock the Notifications