Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகள் வைத்த பன்றி விருந்து! 1 உதவிக்கு 10 கிமீ டிராபிக் ஜாம்! ஊரே திரண்டு அசத்திய நெகிழ்ச்சி சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தன் அப்பாவை பற்றி மகளுக்கு ஒரு கவலை எழுந்தது.. இந்த கவலையை சோஷியல் மீடியாவில் பதிவிட்டார்.. இதன்பிறகு அந்த கிராமத்தை, உலகம் கவனிக்கும் அளவுக்கு போய்விட்டது.. இப்போது அந்த இளம் பெண் நெகிழ்ந்து போய் உள்ளார்.. என்ன நடந்தது சீனாவில்? யாரிந்த பெண்?

சீனாவின் தென் மேற்கு பகுதியில் உள்ள சோங்க்சிங் அருகே உள்ளது கியூங்ஃபூ என்ற குட்டி கிராம்.. இந்த சீன புத்தாண்டு வரும்போது ஒரு பழமையான பழக்கம் உண்டு.

அதாவது கிராம மக்களுக்காக வீட்டில் பன்றியை வெட்டி, பெரிய விருந்து போடுவார்கள்.. இப்படி விருந்து வைப்பது, அந்த வீட்டின் மரியாதை, அந்த குடும்பத்தின் பெருமையாக கருதப்படும்..

மகள் கேட்ட 1 உதவி

அந்தவகையில் அந்த கிராமத்தில் வசிக்கும் டாய்டாய் என்ற இளம்பெண் வீட்டிலும் இந்த பாரம்பரியமான முறை பல வருடங்களாகவே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.. ஆனால் இப்போது டாய்டாய் அப்பாவுக்கு வயதாகிவிட்டது... வீட்டில் வேறு யாரும் ஆண் துணை இல்லை.. அப்பாவுக்கு முன்புபோல் இப்போது உடல் பலம் இல்லை..

இப்படிப்பட்ட சூழலில் புத்தாண்டு தினத்தன்று விருந்து வைக்க வேண்டிய நிலைமை டாய்டாய்க்கு வந்தது.. ஆனால் 2 பன்றிகளை வெட்டி சமைத்து, கிராம மக்களுக்கு விருந்து போட தன்னுடைய அப்பாவால் முடியாதே என்று டாய்டாய் கவலைப்பட்டார்.. ஒருவேளை விருந்து போட முடியாவிட்டால் தன்னுடைய குடும்ப மானம் போய்விடுமோ? என்றும் கலங்கினார்...

2 பன்றி - விருந்து

இதற்காக கடும் மன அழுத்தத்துக்கு ஆளான டாய்டாய், சோஷியல் மீடியாவில் ஒரு வீடியோ பதிவிட்டார்.. அதில், “என் அப்பா வயசானவர்... உடம்பு முடியாமல் வலு இல்லாமல் இருக்கார்.. நான் வளர்த்து வரும் 2 பன்றிகளை அவரால் வெட்ட முடியாது..

என் அப்பாவுக்கு பதில் யாராவது எனக்கு உதவி செய்வீங்களா? அப்படி யாராவது வந்து எனக்கு பன்றிகளை வெட்டி உதவி செய்தால் அவர்களை பன்றி விருந்தால் உபசரிப்பேன்.. நான் என் கிராமத்தில் தலைநிமிர்ந்து வாழ உதவி செய்வீங்களா" என்று என்று கண்ணீர் கலந்த குரலில் கேட்டார்.

மனம் நெகிழ்ச்சி - உதவி

இந்த வீடியோவானது யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு வைரலானது. லட்சக்கணக்கான பேர் பார்த்தார்கள். ஆயிரக்கணக்கானோர் மனம் நெகிழ்ந்தார்கள். “நாம் போய் உதவி செய்யலாம்” என்று பலர் முடிவு எடுத்தார்கள்.

அடுத்த சில நாட்களிலேயே கியூங்ஃபூ கிராமத்தை நோக்கி கார்கள் வரிசைக்கட்டி வர ஆரம்பித்துவிட்டன.. அதாவது சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவுக்கு பலரும் திரண்டு வந்தார்கள்.. ஒருசிலர் தங்களது காரை வெகுதூரத்தில் நிறுத்திவிட்டு, டாய்டாய் வீட்டுக்கு நடந்து வந்தார்கள்.

டிராபிக் ஜாம் - அரசு அதிகாரிகள்

கூட்டம் வீட்டு வாசலில் நிற்பதை பார்த்து டாய்டாய் திக்குமுக்காடி போய்விட்டார்.. தன்னிடம் உள்ள 2 பன்றிகளை வைத்து, எத்தனை பேருக்கு விருந்து வைப்பது? இத்தனை பேர் உதவி செய்ய வந்துள்ளார்களே? என்று நினைத்து திகைத்து போய் நின்றார்..

அதற்குள் டாய்டாய் வீட்டு பகுதியில் டிராபிக் ஜாம் என்று அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரியவும் அவர்கள் விரைந்து வந்தார்கள்.. டாய்டாய் நிலைமையை அறிந்து, கூடுதல் பன்றிகளை வழங்கினர்..

3000 பேர் விருந்து - வராதீங்க ப்ளீஸ்

அத்தனை பேருக்கும் சின்ன வீட்டில் சாப்பாடு போட முடியாது என்பதால், அருகிலுள்ள சிறிய ஓட்டல்கள் மக்களுக்கு உணவு பரிமாற உதவி செய்தன.. இப்படி 2 நாட்கள் தொடர்ந்து விருந்து நடந்தது. முதல் நாள் ஆயிரம் பேர். அடுத்த நாள் இரண்டாயிரம் பேர். மொத்தம் மூவாயிரத்துக்கும் மேல் மக்கள் சாப்பிட்டார்கள்.

இரவு நேரங்களில் கூட விருந்து சமைக்க நெருப்பு எரிந்தவாறே இருந்தது.. பாட்டு சத்தம் விருந்தில் கேட்டு கொண்டேயிருந்தது.. ஒரு சின்ன கிராமம் ஒரு பெரிய விழாவாக மாறிவிட்டது.. இதனால் உச்சிக்குளிர்ந்த டாய்டாய், “இனி போதும். இந்த 2 நாளில் நான் 4 மணி நேரம்தான் தூங்கினேன். தயவு செய்து இனிமேல் யாரும் என் வீட்டுக்கு வராதீங்க” என்று சிரித்தவாறே பதிவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+