தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?
சென்னை: அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க போகிறாரா? அல்லது மீண்டும் தமிழக பாஜக தலைவராக நியமனம் செய்யப்பட உள்ளாரா? அல்லது மத்திய அமைச்சர் ஆகப்போகிறாரா? என்று சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வரும் சூழலில், சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பியும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவருமான கார்த்தி சிதம்பரம் பரபரப்பான ட்வீட் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் மொத்த தேர்தல் கணக்குகளையும் தலைகீழாக மாற்றிவிட்டது. திமுக vs அதிமுக என கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தில் மாறி மாறி ஆட்சியை பிடித்து வந்த நிலையில், விஜய்யின் தவெக, தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே தனிப்பெரும் கட்சியாக வென்று ஆட்சியை பிடித்தது.

தனிக்கட்சி தொடங்குகிறாரா அண்ணாமலை?
தமிழகத்திற்குள் மெல்ல மெல்ல எண்ட்ரி கொடுக்க ஆரம்பித்த பாஜகவை மொத்தமாக விஜய் அலை வாரி சுருட்டிச்சென்றது. இதனால் பலத்த மவுனத்தில் பாஜக உள்ளது. இன்னொரு பக்கம், காங்கிரஸ் தவெகவுடன் கூட்டணி அமைத்து பயணிக்க ஆரம்பித்துவிட்டது. இந்த பரபரப்புக்கு நடுவே தமிழக பாஜக முன்னாள் தலைவரான அண்ணாமலையின் அடுத்த கட்ட அரசியல் நகர்வு என்னவாக இருக்கும் என்பது கடந்த சில நாட்களாக தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிகம் பேசப்படும் ஒன்றாக மாறியுள்ளது.
விரைவில் அண்ணாமலை புதுக்கட்சி தொடங்க இருப்பதாக சமூக வலைத்தளங்களில் அண்ணாமலை ஆதரவு நெட்டிசன்களே பரபரப்பாக பதிவிடுவதையும் காண முடிகிறது. அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க போகிறாரா? அல்லது மீண்டும் தமிழக பாஜக தலைவராக நியமனம் செய்யப்பட உள்ளாரா? அல்லது மத்திய அமைச்சர் ஆகப்போகிறாரா? என்று சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
கார்த்தி சிதம்பரம் ட்வீட் பதிவு
இந்த சூழலில், சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பியும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவருமான கார்த்தி சிதம்பரம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு இருக்க கூடிய பதிவு, யூகங்களுக்கு மேலும் வலு சேர்ப்பதாக அமைந்து இருக்கிறது. கார்த்தி சிதம்பரம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் மேலும் ஒரு புதிய அரசியல் கட்சி விரைவில் உருவாக வாய்ப்பு உள்ளது. மாற்றம் வேகமெடுக்கிறது... (எம்.எஸ். - முன்மொழியப்பட்டுள்ள கட்சிப் பெயருக்குப் பின்னால் சுவாரஸ்யமான ஒரு லாஜிக்கும் உள்ளது.)" என்று பதிவிட்டுள்ளார்.
அண்ணாமலை புதிய கட்சி தொடங்க போகிறாரா? என்று பரபரப்பாக சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் போய்க்கொண்டு இருக்கும் நிலையில் கார்த்தி சிதம்பரத்தின் இந்த பதிவு கவனம் பெற்றுள்ளது. கார்த்தி சிதம்பரத்தின் பதிவுக்கு கீழே நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்தை பதிவிட்டு வருகிறார்கள். பல நெட்டிசன்கள் அண்ணாமலைதான் கட்சி தொடங்க இருக்கிறார் எனவும் அதைத்தான் சூசகமாக பதிவிட்டு இருப்பாரோ என்றும் பதிவு போட்டு இருக்கிறார்.
அண்ணாமலை புது கட்சியா?
கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணி அமைத்தது. அதிமுகவுடன் கூட்டணி வைப்பதற்கு பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை மாற்றப்பட்டார். காவல் துறை அதிகாரியாக இருந்து அண்ணாமலைக்கு மிகவும் குறுகிய காலத்திலேயே அரசியலில் தனி செல்வாக்கு உருவாக தொடங்கியது. அதிரடியான தனது பேச்சு, தீவிரமான களப்பணி, சமூக வலைதள செயல்பாடு மற்றும் எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சிக்கும் பாணி ஆகியவற்றின் மூலம் தனக்கென ஒரு அரசியல் அடையாளத்தை உருவாக்கினார்.
சட்டமன்ற தேர்தலில் போட்டியிடாத அண்ணாமலை, தேர்தல் முடிவுக்கு பிறகும் மவுனமாக உள்ளார். சமீபத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராக கருத்து தெரிவித்தார். அண்ணாமலை உண்மையில் புதிய கட்சி தொடங்கப் போகிறாரா? அல்லது பாஜகவிலேயே இருந்து புதிய பொறுப்பை ஏற்கப் போகிறாரா? என்பது பெரிய கேள்வியாக உள்ளது. இதற்கான விடை ஓரிரு வாரங்களில் கிடைக்கலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
-
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
சிங்கம் ஒன்று புறப்பட்டதே.. அண்ணாமலைக்கு ஷிப்ட் ஆன ரஜினிகாந்த் ரசிகர்கள்.. தவெக இதை எதிர்பார்க்கல -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலை கைகளை பிடித்த அஜித், ரஜினி.. மதுரையில் பரபரக்கும் போஸ்டர்களால் அதிரும் அரசியல் களம்!














Click it and Unblock the Notifications