ஆமா.. அது ஏன் பென்னாத்தூரில் ஆசிரமம்.. பெண் சாமியார் அன்னபூரணி சொன்ன அடடே காரணம்
சென்னை: திருவண்ணாமலை மாவட்டம் கீழ் பென்னாத்தூரில் இடம் வாங்கி ஆசிரமம் அமைப்பது ஏன் என்பது குறித்து அன்னபூரணி அரசு தெரிவித்துள்ளார்.
திடீர் திடீர் என முளைக்கும் சாமியார்களுக்கு இங்கு பஞ்சமில்லை. அப்படி திடீரென முளைத்தவர்தான் அன்னபூரணி அரசு. இவரை டிவியில் பார்த்ததும் மக்கள் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதே என தங்கள் மெமரியில் சேவ் செய்துள்ள பதிவுகளை ரீவைண்ட் செய்தனர்.
அப்போதுதான் தெரிந்தது, கடந்த 2014 ஆம் ஆண்டு தனது கணவர், 14 வயது மகளை விட்டுவிட்டு அரசு என்ற அடுத்த பெண்ணின் கணவருடன் காதல் வயப்பட்டார்.

கணவருடன் பிரிவு
இதையடுத்து தனது கணவரை பிரிந்து அரசுவுடன் குடித்தனம் நடத்தியது குறித்து நியாயம் கேட்க அரசுவின் மனைவி சொல்வதெல்லாம் உண்மை எனும் நிகழ்ச்சியில் புகார் கொடுத்தார். இந்த விவகாரத்தை லட்சுமி ராமகிருஷ்ணன் விசாரித்தார். அப்போது லட்சுமி எத்தனையோ அறிவுறுத்தியும் தனக்கு அரசுதான் வேண்டும் என்றார்.

7 ஆண்டுகள்
இதையடுத்து 7 ஆண்டுகளாக அன்னபூரணி என்ன செய்கிறார், எங்கிருக்கிறார் என தெரியாத நிலை இருந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியுலகிற்கு வந்த அன்னபூரணி, சாதாரண பெண்ணாக வராமல் தன்னை ஆதிபராசக்தியின் அவதாரம் என கூறிக் கொண்டு மாடர்ன் சாமியார் வேடத்தில் வந்தார்.

புதிய ஆசிரமம்
அவர் திவ்ய தரிசன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில் அது அனுமதியின்றி நடத்தப்படுவதாக போலீஸார் அந்த நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து சமூகவலைதளங்களில் சொற்பொழிவு நடத்தி வந்தார். இந்த நிலையில்தான் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் அவர் ஆசிரமம் கட்ட இடம் வாங்கி உள்ளார்.

சென்னையில் முடியவில்லை
இதற்கான பூமி பூஜை நேற்றைய தினம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அன்னபூரணி தனது பக்தர்களுடன் வருகை தந்தார். அப்போது பக்தர்களிடம் அன்னபூரணி பேசுகையில் என்னுடைய பட்ஜெட்டிற்கு சென்னையில் இடத்தை வாங்க முடியாது. அதனால்தான் இந்த இடத்தில் இடம் வாங்கி ஆசிரமம் அமைக்கவுள்ளேன்.

அருள்வாக்கு இல்லை
நான் அருள்வாக்கு சொல்வதில்லை. ஆன்மீகத்தை சொல்லி கொடுத்து வருகிறேன். நான் உங்களுடைய தாய். எந்த பிரச்சினை இருந்தாலும் என்ன குறைகள் இருந்தாலும் எதற்குமே கவலைப்படாதீர்கள். நமக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்று மேலே இயங்கிக் கொண்டிருக்கிறது. அதனால் எந்த பிரச்சினையை கண்டும் பயப்படாதீர்கள். எந்த பிரச்சினை இருந்தாலும் என்னிடம் வாங்க, உங்கள் எல்லாருக்குமே சந்தோஷமான கொண்டாட்டமான வாழ்க்கையை வாழ முக்தி நிலையில் நிலைபெற வைக்க தயாராக உள்ளேன் என்றார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications