சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திடீர் திருப்பம்.. ஜெ. மரணம் தொடர்பாக மறு விசாரணை தேவை.. அப்பல்லோ மருத்துவமனை பிரமாண பத்திரம்

Google Oneindia Tamil News

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக மருத்துவர் குழு ஒன்றை அமைத்து மறு விசாரணை நடத்த வேண்டும் என்று, அப்பல்லோ மருத்துவமனை சார்பில், ஆறுமுகசாமி ஆணையத்திடம், பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா மாரடைப்பால் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

Apollo hospital wants re inquiry in to the Jayalalitha death case

ஆனால் சுமார் 75 நாட்களாக வெளி உலகத்திற்கு தெரியாமல் அப்போலோ மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனவே, இந்த சிகிச்சையில் மர்மம் இருப்பதாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

அப்பல்லோ மருத்துவமனையின், மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோரிடமும் இந்த ஆணையம் ஏற்கனவே விசாரணை நடத்தி உள்ள நிலையில், அப்பல்லோ மருத்துவமனை சார்பில் ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், மருத்துவர்கள் அளித்த வாக்குமூலம் தவறாக, பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. எனவே, மருத்துவர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து புதிதாக விசாரணை நடத்தி சரியாக வார்த்தைகளை பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

intubation என்ற வார்த்தை incubation என்றும், Enterococcus பேக்டீரியா என்பது, Endocarditis என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதேபோலத்தான் மேலும் பல வார்த்தைகளும் இடம் பெற்றுள்ளதாகவும், அந்த பிரமாண பத்திரம் சுட்டிக்காட்டுகிறது.

English summary
Apollo in its affidavit says several errors have been made during the recording of depositions of doctors and hospital staff to the Armughaswamy commission.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X