"கருவாடு" மீனாகிறது.. வந்தாச்சு "பச்சை சிக்னல்".. இவ்ளோ இருக்கா.. அப்ப எடப்பாடிக்கு சிக்கல்தான் போல
எடப்பாடி பழனிசாமிக்கு மேலிடத்தில் நெருக்கடிகள் கூடி வருவதாக கூறப்படுகிறது
சென்னை: கோவை செல்வராஜ் வீட்டில், ஓபிஎஸ், அவரது ஆதரவாளர்கள் முன்பு பேசியது, அதிமுகவில் பரபரப்பையும், மிகப்பெரிய விவாதத்தையும் விட்டு வருகிறது. ஓபிஎஸ் நடத்தி வரும் இந்த 2 வது தர்மயுத்தம் எந்த அளவுக்கு, அவருக்கு சாதகமாக அமைய போகிறது என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது... அத்துடன் இது தொடர்பான சாதக, பாதக சூழல்களும் அரசியல் அரங்கில் அலசப்பட்டு வருகின்றன.
கடந்த ஒரு மாத காலமாகவே எடப்பாடி பழனிசாமி சைலண்ட் மோடுக்கு சென்றதாக சொல்லப்பட்ட நிலையில், ஓபிஎஸ்ஸின் கிராப் லேசாக உயர தொடங்கியது.
குறிப்பாக, பசும்பொன்னில் கிடைத்த வரவேற்புதான் ஓபிஎஸ்ஸுக்கு தொகுதியில் உள்ள செல்வாக்கினை பார்த்துவிட்டு, அவர்தான் நிஜமான தலைவர், அவரிடம் விரைவில் அதிமுக வந்து சேரும் என்றும் ஆதரவாளர்கள் மார்தட்டி பேசினர்..

பாயிண்ட் A
அதாவது, "கட்சியில் இருந்து அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தே நீக்கப்பட்டதாக சொல்லப்படும் ஓபிஎஸ், தன் கடமையை பசும்பொன்னில் சரியாக செய்தார், ஆனால், பொதுச்செயலாளர் பதவிக்கு பேராசைப்படும் எடப்பாடி பழனிசாமியோ, தன் கடமையில் இருந்து தவறிவிட்டார் என்று எடப்பாடி டீமில் உள்ளவர்கள் பிரசங்கம் செய்ய ஆரம்பித்தனர்.. மற்றொருபக்கம், பசும்பொன்னில் ஓபிஎஸ்ஸுக்கு இருந்த செல்வாக்கை காட்டியே தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியிலும் தீவிரமாகவே ஈடுபட்டு வருவதாக செய்திகள் கசிந்தன.

பாயிண்ட் B
இதனிடையே, எடப்பாடி பழனிசாமியை டேமேஜ் செய்துவரும் மருது அழகுராஜ் போன்றவர்கள், தன் தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டுவிட்டு எடப்பாடி பழனிசாமி அதிமுகவை விட்டே ஒதுங்கி விடுவதே நல்லது" என்று அறிக்கைகளை வெளியிட்டு வந்தனர்.. இந்த சமயத்தில்தான், எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ்ஸை தரப்புக்கு 2 முறை தூது அனுப்பியதாக கூறப்பட்டது.. ஓபிஎஸ்ஸுக்கு இணை பொதுச்செயலாளர் பதவியை தர போவதாகவும், இதற்காக மதுரையை சேர்ந்த முக்கிய நபரிடம் ஓபிஎஸ்ஸுக்கு தூது அனுப்பியிருந்த நிலையில், அதை ஏற்க மறுத்துவிட்டாராம் ஓபிஎஸ்.

தூது விடும் தூது
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள்தான் சமமான பதவிகள்.. அதன்படி தான் இத்தனை காலமும் இருந்துள்ளோம்.. அதே பதவிகளே நீடிக்க வேண்டுமே தவிர, புதுஸா ஒன்றை கிளப்ப கூடாது.. முதலில், பொதுச் செயலாளர் பதவி தொடர்பாக சசிகலா தொடர்ந்துள்ள வழக்கு முடிவுக்கு வரட்டும்" என்று பதிலளித்தாராம். அதுமட்டுமல்ல, மாவட்டங்களில் நிர்வாகிகளை நியமிப்பதிலும் வேகம் எடுக்க துவங்கிவிட்டார் ஓபிஎஸ்.. இதுபோன்ற செயல்பாடுகளை பார்த்து, எடப்பாடி பணிந்து வருவதாகவும், ஓபிஎஸ் செல்வாக்கு உயர்ந்து வருவதாகவும் முணுமுணுப்புகளும் எழுந்தன.

ரூல்ஸ் சரியா?
ஆனால், இவை யாவும் ஓபிஎஸ் பக்கம் அடியோடு சரிய தொடங்கி உள்ளது... காரணம் தர்மயுத்தத்தை துவங்கி உள்ளதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.. கோவை செல்வராஜ் வீட்டில் ஆதரவாளர்களிடம் ஓபிஎஸ் பேசும்போது, கழகத்தினுடைய சட்ட விதிகளை தன்னுடைய சுயநலத்திற்காகத் திருத்தக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டு அதனால் பல பிரச்சனைகள் உருவாகி விட்டது. இன்றைக்குக் கழகம் எம்ஜிஆர் உருவாக்கிய சட்ட விதிகளின்படி தான் நடைபெற வேண்டும் என்று இந்த தர்ம யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். புதிதாக சில விதிகளை உள்ளே புகுத்தி இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.. இதையடுத்து இன்னொரு தர்மயுத்தமா? இது எப்படி சாத்தியமாகும்? என்ற சந்தேகங்களை அரசியல் நோக்கர்கள் முன்வைக்கிறார்கள்.

எடப்பாடிக்கு சேலஞ்ச்
இந்த தர்மயுத்தம் ஓபிஎஸ்ஸுக்கு சாதகமாக அமைய போகிறது என்று அவரது ஆதரவாளர்கள் நம்புகிறார்கள்.. இதுகுறித்து நம்மிடம் கருத்துக்களை அவர்கள் பகிர்ந்துகொண்டபோது, ஓபிஎஸ் அரசியல் முன்பு போல் இல்லை, வேகம் எடுத்து வருகிறது.. எடப்பாடி பழனிசாமிக்கு நேரடியாக சவால் விட ஆரம்பித்தபோதே அவரது தர்மயுத்தம் ஆரம்பமாகிவிட்டது.. அதனால்தான், சட்டவிதிகளை எப்படி திருத்தலாம் என்று துணிந்து கேள்வி எழுப்புகிறார்.. எடப்பாடி பக்கம் அத்தனை ஆதரவாளர்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்தும், ஓபிஎஸ் தர்மயுத்தத்தை துவங்கி உள்ளார் என்றால், அதற்கு காரணமும், பின்னணியும் இல்லாமல் இருக்காது..

பிளஸ் பாயிண்ட்ஸ்
எல்லாவற்றிற்கும் மேலாக, பாஜக மேலிட ஆதரவு தற்போது அதிகமாக ஓபிஎஸ் டீமுக்கு அதிகமாக கிடைத்து கொண்டிருக்கிறது.. அதிலும், தமிழகத்தின் பாஜக பொறுப்பாளரே, ஓபிஎஸ்ஸுக்குதான் சப்போர்ட் செய்துவருகிறார்.. அதேபோல, எப்படியும், இரட்டை இலை தங்களுக்குதான் கிடைக்க போகிறது என்பதிலும் எங்களுக்கு நிறைய நம்பிக்கை உள்ளது.. ஆக, பாஜக சொல்வதை கேட்கும் நிலையில்தான் எடப்பாடி தரப்பு உள்ளதே தவிர, எடப்பாடி சொல்லும் ஐடியாக்களை காது கொடுக்கும் கேட்கும் நிலைமையில் பாஜக இல்லை.. அதனால், தர்மயுத்தத்தை பொறுத்தவரை, ஓபிஎஸ் யுக்திகள் வேகமெடுக்க ஆரம்பித்துவிட்டன.. வரும் நவம்பர் 21ம் தேதிக்கு பிறகு, இந்த வேகத்தை தமிழகம் கண்முன்னாடியே காண போகிறது என்கிறார்கள்.

மைனஸ் பாயிண்ட்ஸ்
மற்றொருபக்கம், இந்த இந்த தர்மயுத்தம் ஓபிஎஸ்ஸுக்கு பாதகமாக அமைய போவதாக சொல்கிறார்கள்.. "முன்பு நடத்திய தர்மயுத்தத்திற்கும், இப்போது நடத்தும் தர்மயுத்தத்திற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.. அன்று சசிகலாவை எதிர்த்து, டிடிவி தினகரனை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து போரிட்டார்... ஆனால், இன்று அதே சசிகலாவின் ஆதரவில் தர்மயுத்தம் நடத்துகிறார்.. டிடிவி தினகரனின் ஆதரவில் தர்மயுத்தம் நடத்துகிறார்.. அப்படியானால், தேவை வரும்போது தர்மயுத்தம் என்ற ஆயுதத்தை கையில் எடுப்பதா? இது மக்களை முட்டாள் ஆக்கும் செயல்.. ஒருவேளை எடப்பாடியும், ஓபிஎஸ்ஸும் இணைந்தால்கூட, ஓபிஎஸ் முதல்வராக முடியாது.. இது ஒரு சந்தர்ப்பவாத அரசியல் நாடகம்" என்கிறார்கள்..!!

ஃபெயிலியர்
அதுமட்டுமல்ல, முதலாம் தர்மயுத்தத்தில், ஜெ.மரணம் தொடர்பாக கமிஷன் அமைக்க வேண்டும் என்றார் ஓபிஎஸ்.. இப்போது மரணத்தில் மர்மம் இல்லை என்கிறார்.. ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில், ஓபிஎஸ், சசிகலா இருவரும் கூட்டு சேர்ந்து ஒன்றாக, ஒருவருக்கொருவர் புரிதலோடு, அம்மாவின் மரணத்துக்கு காரணமாக இருந்திருக்கிறார்கள் என்று ஆணையம் சொல்கிறது.. அப்படியானால், இவரது 2வது தர்மயுத்தத்தை, எந்த அதிமுகவின் உண்மையான தொண்டர்களாவது ஆதரிப்பார்களா? இன்றைக்கு கட்சியை காப்பாற்ற வேண்டும் என்று துடிப்பவர்? ஆட்சியில் இருக்கும்போதே இந்த தர்மயுத்தத்தை எடப்பாடிக்கு எதிராக ஆரம்பிக்க வேண்டியதுதானே? எப்போதெல்லாம் தனக்கு பதவி இல்லை என்று தெரிகிறதோ, அப்போதெல்லாம் தர்மயுத்தத்தை கையில் எடுத்து கொண்டிருந்தால், இருக்கும் ஆதரவாளர்களையும் ஓபிஎஸ் இழந்துவிடுவார்" என்கிறார்கள்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications