எந்த நிரபராதியும் தண்டிக்கப்பட கூடாது.. காந்தியின் கூற்றுபடி நியாயம் கிடைக்கட்டும்.. அற்புதம்மாள்
சென்னை: எந்த ஒரு நிரபராதியும் தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991-ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூருக்கு தேர்தல் பிரச்சாரத்துக்காக வருகை தந்தார். அப்போது அவர் அங்கு மனித வெடிகுண்டு வைத்து படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு 29 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வருகின்றனர்.

பேரறிவாளனின் தாய்
இவர்களின் விடுதலைக்காக பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் சட்ட போராட்டம் நடத்தி வருகிறார். இது தொடர்பான வழக்கின்போது தமிழக அரசே எழுவரின் விடுதலை குறித்து முடிவு செய்யலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துவிட்டது.

ஆளுநர் நடவடிக்கை
இதையடுத்து ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அதை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஓராண்டுக்கு மேலாகியும் அந்த கோப்பு மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை.

அமைச்சரவை
இந்த நிலையில் கடந்த 9-ஆம் தேதி பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் ஒரு ட்வீட் பதிவிட்டார். அதில் அமைச்சரவை பரிந்துரைத்து 1ஆண்டு நிரபராதி,விடுதலை செய்யனும்னு சம்பந்தப்பட்ட பலர் ஒப்புக்கொண்டும் தாமதமேனோ? நிரபராதிக்கு தீர்வு அரசியல்சட்டம்161என அறிவீரே! 29வருட அநீதியில் உங்கள் பங்கு ஒன்றுடன் முடியட்டும்; என்னுயிர் இருக்கும்போதே கோப்பில் மை படட்டும்!#29YearsTooMuchGovernor என உருக்கமாக தெரிவித்திருந்தார்.
|
நியாயம்
"எந்த நிரபராதியும் தண்டிக்கப்பட கூடாது" என்று சொன்ன காந்தியடிகளின் 150ஆவது பிறந்த நாளிலாவது அறிவு உள்ளிட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கட்டும் என கூறியுள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications