Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பச்சைத் துண்டு எடப்பாடி பழனிசாமி ஒரே போடு.. நிலமே இல்லாமல் விவாதமாகும் அசையா சொத்து விவரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி பழனிசாமி தன்னை ஒரு விவசாயியாக முன்னிறுத்துவதன் மூலம் எளிய மக்களின் உணர்வுகளைக் கவர்ந்து, திமுகவின் செயல்பாடுகளோடு தனது விவசாயப் பின்புலத்தை ஒப்பிட்டு பிரச்சாரம் செய்து வருகிறார்.. செல்லும் இடமெல்லாம் திமுகவை விமர்சிப்பதுடன், தான் ஒரு விவசாயி, இன்றும் விவசாயம் செய்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி பேசி வருவது, மிகுந்த கவனம் பெற்று வருகிறது. இதற்கு என்ன காணம் தெரியுமா?

தேர்தல் பிரச்சாரத்தில், திமுக ஆட்சியில் அதிமுக கொண்டு வந்த விவசாயத் திட்டங்கள் நிறுத்தப்பட்டதால் விவசாய வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி வருகிறார்.

Edappadi Palaniswami AIADMK Election Affidavit Asset Disclosure Theni Campaign Tamil Nadu Politics Farmer Identity Property News Political Controversy 2026

எடப்பாடி பழனிசாமி விவசாயி அடையாளம்

விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் அரசு அவர்களை வஞ்சிப்பதாகக் குறிப்பிட்ட அவர், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் பாபநாசம் - மணிமுத்தாறு அணை இணைப்பு போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படும் என உறுதியளித்து வருவதுடன், கிராமப்புற வாக்குகளைத் தக்கவைத்துக் கொள்ளவும், டெல்டா உள்ளிட்ட விவசாய மண்டலங்களில் ஆளுங்கட்சிக்கு எதிரான அதிருப்தியைத் தனக்குச் சாதகமாக மாற்றவும் இந்த "விவசாயி" அடையாளத்தைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்.

திமுக அரசு விவசாயிகளுக்குத் துரோகம் இழைப்பதாகவும், முதல்வர் ஸ்டாலின் விவசாயிகளின் எதிரி என்றும் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சிக்கிறார்..

பயிர் காப்பீட்டு திட்டம்

குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிப்பிற்குத் தமிழக அரசு உரிய நேரத்தில் தண்ணீர் பெற்றுத் தராததே காரணம் என்று குற்றம் சாட்டினார். பயிர் காப்பீட்டுத் திட்டத்தைச் சரியாகச் செயல்படுத்தாததால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளதாகவும், அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல்வேறு விவசாய நலத்திட்டங்களை இந்த அரசு முடக்கி வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க இந்த அரசு தவறிவிட்டதாகவும் அழுத்தமாகக் கூறி வருகிறார்.

நேற்றைய தினமும் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன் இணைந்து ஒரே மேடையில் பிரசாரம் மேற்கொண்ட அவர், தேனி மாவட்டத்தின் முக்கிய வாழ்வாதாரமான விவசாயம் குறித்து உருக்கமாகப் பேசினார்.

சொந்தமாக நிலம் இல்லை

அப்போது பேசிய அவர், தேனி மாவட்டம் முழுமையாக விவசாயத்தைச் சார்ந்த பகுதி.. நானும் ஒரு விவசாயி.. நானும் ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன்தான், இன்றும் தொடர்ந்து விவசாயம் செய்து வருகிறேன். விவசாயம் என்பது மிகவும் கடினமான தொழில். தனது ரத்தத்தை வியர்வையாகச் சிந்தி, நாட்டு மக்களுக்கு உணவு படைப்பவன் தான் விவசாயி" என்று அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

ஆனால், எடப்பாடி பழனிசாமியின் இந்த பேச்சு தான், அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம், அவர் தனது வேட்புமனுவில் தனக்கு விவசாய நிலங்கள் இருப்பதாக குறிப்பிட்டிருந்தாலும், அவரிடம் சொந்தமாக நிலம் இல்லை என்றும், நிலமே இல்லாத ஒருவர் "இன்றும் விவசாயம் செய்கிறேன்" என்று கூறுவது முரணானது என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

சொத்து கணக்கு விவரம்

எடப்பாடி சமர்ப்பித்திருந்த பிராமண பத்திரத்தில், அவரது மனைவி ராதாவிடம் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் உள்ளது. பெயரிலோ, அவர் மனைவி, பெயரிலோ, கார் உட்பட எந்த வாகனங்களும் இல்லை. பழனிசாமியிடம் 100 கிராம் தங்க நகை, அவர் மனைவியிடம் 720 கிராம் தங்க நகை உள்ளது. மொத்தமாக, பழனிசாமிக்கு 3.16 கோடி ரூபாய் அசையும் சொத்து உள்ளது. அவர் பெயரில் அசையா சொத்துக்கள் ஏதும் இல்லை.

மனைவி ராதா மற்றும் குடும்பத்தினர் பெயரில், 5.83 கோடி ரூபாய் அசையா சொத்து உள்ளது. மொத்தமாக, பழனிசாமி பெயரில், 8.99 கோடி ரூபாய் அசையும், அசையா சொத்துக்கள் உள்ளன. கடன் 17 லட்சம் ரூபாய்; ஐந்து குற்றவியல் வழக்குகள் உள்ளன என தெரிவித்துள்ளார். தொழில் விவசாயம் என தெரிவித்துள்ள பழனிசாமிக்கு, சொந்தமாக வேளாண் நிலங்கள் இல்லை" என்று வேட்பு மனு தாக்கலில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் செல்லும் இடமெல்லாம் தான் இன்னும் விவசாயம் செய்வதாக கூறி வருவது, அதிமுக தொண்டர்களிடையே குழப்பத்தை தந்து வருகிறதாம்,. இதைத்தான் திமுகவினர் சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து வருகிறார்கள்...!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+