என்ன வச்சு ரேகாநாயர் விளம்பரம் தேடுறாங்க! ‘யூட்யூப்’ சேனலின் சதி! சட்டப்படி சந்திப்பேன் - பயில்வான்!
சென்னை : வாக்கிங் சென்ற தன்னுடன் நடிகை ரேகா நாயர் வாக்குவாதம் செய்தது ஒரு திட்டமிட்ட நாடகம், ஒரு யூட்யூப் சேனல் செய்த சதி வேலை எனவும், அவர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அதனை நான் சந்திக்க தயாராக இருக்கிறேன். காவல்துறையிலும் புகார் கொடுத்துள்ளேன் என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
Recommended Video
இயக்குனர் பார்த்திபன் நடிப்பு மற்றும் இயக்கத்தோடு வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோரின் நடிப்புடன், ஏ.ஆர்.ரகுமானின் இசையமைப்புடன் வெளிவந்திருக்கும் இரவின் நிழல் படம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியானது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகி உள்ள இந்தப் படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இது மிகவும் அருமையான படம் எனவும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் ரசிகர்களும், திரைப் பிரபலங்களும்.
இந்நிலையில் இரவின் நிழல் படத்தில் நடிகைகள் பிரிகிடா மற்றும் ரேகா நாயர் ஆகியோர் அரை நிர்வாணமாக நடித்திருப்பதை பலரும் சுட்டிக்காட்டி விமர்சித்து வருகின்றனர். குடும்பத்துடன் இதை பார்க்க முடியாது என்றும் பலர் தெரிவித்தனர்.

நடிகை ரேகா நாயர்
இந்த நிலையில் நடிகை ரேகா நாயர் இதில் அரை நிர்வாணமாக நடித்திருப்பதை விமர்சகரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் விமர்சித்ததாக கூறப்படுகிறது. இதனால் கடும் கோபம் அடைந்த ரேகா நாயர் திருவான்மியூர் கடற்கரை பகுதியில் வாக்கிங் சென்று கொண்டிருந்த பயில்வான் ரங்கநாதனை மறித்து அவருடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

கடும் வாக்குவாதம்
மேலும்," நான் எப்படி வேண்டுமானாலும் நடிப்பேன் உங்களுக்கு என்ன என்று கேட்டதோடு மிகவும் மரியாதை குறைவாக பேசினார். ஆனாலும் பயில்வான் ரங்கநாதன் பொறுமை காத்த நிலையில் அருகில் இருந்தோர் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது இந்த நிலையில் ரேகா நாயர் நடத்தியது திட்டமிட்ட நாடகம் எனவும் இது ஒரு youtube சேனலின் சதி என பயில்வான் ரங்கநாதன் பதிலளித்துள்ளார்.

பயில்வான் ரங்கநாதன்
இதுகுறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன்," நான் வாக்கிங் சென்ற போது அங்கு வந்த ரேகா நாயர் என்னை அசிங்கமாகவும், அவமரியாதையாகவும் பேசியதோடு, தாக்க முற்பட்டாங்க.. கையை ஓங்கினாங்க, நான் கைய பிடிச்சுகிட்டேன். இது என்னோட வந்த ஆடிட்டர், காவல்துறை அதிகாரிகள், வியாபாரிகள் சங்க தலைவர் என எல்லோருக்கும் தெரியும், என்னை கோபப்படுத்தி வேறு மாதிரி சித்தரிக்க முயற்சி பண்ணாங்க.,

திட்டமிட்ட நாடகம்
இது ஒரு திட்டமிட்ட நாடகம், ஒரு யூட்யூப் சேனல் செய்த சதி வேலை.. கேமரா எடுத்துட்டு வந்தாங்க.. நான் அப்போது உணர்ச்சி வசப்பட்ருந்தேனா என்னோட பெயர் பாதிக்கப்பட்டிருக்கும். புகழுக்கு களங்கம் ஏற்பட்டிருக்கும். அதனால் நான் அமைதி காத்தேன். என்னை வைத்து பப்ளிசிட்டி தேடனும் என்ற எண்ணம் இருப்பது தெரிந்துவிட்டது. அதற்கு நான் அனுமதிக்க மாட்டேன்.

ரேகா நாயர்
அதே மாதிரி ரேகா நாயர் அடுக்கடுக்கான பொய்களை சொல்லிக் கொண்டே இருக்காங்க.. நான் நிர்வாணமாக நடித்தேன் என அவர் சொன்னதை தான் நான் சொன்னேன். அதுவும் நான் ‘ரேகா நாயர்; என்ற பெயரைக் கூட சொல்லவில்லை. நிர்வாண காட்சி கதையோட சேர்ந்தது தான் என நான் சொன்னேன் . அதை பார்த்திபனும் பாராட்டினார். அந்த காட்சியை நான் விமர்சிக்கவில்லை.

காவல்துறையிலும் புகார்
ஆனால் நிர்வாணமாக நடித்ததை தகுதி அதிகம் என நினைத்து அவர் தான் தொடர்ந்து பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார். அதையே விளம்பரமாகவும் நினைக்கிறார். நான் அதனை பெரிது படுத்த விரும்பவில்லை. அதே நேரத்தில் அவர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அதனை நான் சந்திக்க தயாராக இருக்கிறேன். காவல்துறையிலும் புகார் கொடுத்துள்ளேன்' என கூறியுள்ளார்.
-
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்!












Click it and Unblock the Notifications