பெரிய மீன், சிறிய மீன்.. சிறிய கட்சிகளை விழுங்கும் திமிங்கலமா திராவிட அரசியல்?: பாஜக அர்ஜுனமூர்த்தி
சென்னை: தமிழகத்தில் கூட்டணி அரசியல் என்ற பெயரில் திராவிடக் கட்சிகள் சிறிய கட்சிகளின் அடையாளத்தை அழிப்பதாக பாஜக தேர்தல் அறிக்கை குழு உறுப்பினர் இரா.அர்ஜுனமூர்த்தி பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். கம்யூனிஸ்ட் இயக்கங்கள் முதல் தேசியக் கட்சிகள் வரை திராவிட அரசியலின் சுழலில் சிக்கிச் செல்வாக்கை இழந்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், இது ஜனநாயகக் கருவியா அல்லது அதிகார வேட்டையா என்ற கேள்வியையும் முன்வைத்துள்ளார்.
அறிக்கையில் உள்ளதாவது: இந்திய ஜனநாயகத்தில் 'கூட்டணி' என்பது வெறும் எண்களின் கூட்டல் மட்டுமல்ல; அது ஒரு தத்துவத்தின் நீட்சி. ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த 60 ஆண்டுகளில் கூட்டணி அரசியல் என்பது சிறிய கட்சிகளை வளர்த்ததா அல்லது அதன் அடையாளத்தை மெல்ல மெல்ல அழித்து ஒரு பெருங்கட்சிக்குள் ஐக்கியமாக்கியதா என்ற விவாதம் தற்போது மேலெழுந்துள்ளது.

வர்க்கப் போராட்டம்
1950 மற்றும் 60-களில் தமிழகத்தின் அரசியல் களம் தொழிலாளர் இயக்கங்களின் கோட்டையாக இருந்தது. கம்யூனிஸ்ட் கட்சிகள் தொழிற்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கின.
"வர்க்கப் போராட்டம்" என்பதே அன்றைய அரசியலின் மையப்புள்ளி. இருப்பினும், 1967-ல் திமுக-வின் எழுச்சி இந்தப் போக்கை மாற்றியது. 'திராவிட அடையாளம்' மற்றும் 'சமூக நீதி' என்ற முழக்கங்கள், வர்க்க அரசியலை பின்னுக்குத் தள்ளின.
இடதுசாரி சித்தாந்தம்
திமுக-வின் தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் மற்றும் அரசு உருவாக்கிய பல்வேறு தொழிலாளர் நல வாரியங்கள், கம்யூனிஸ்ட் கட்சிகளின் பிடியில் இருந்து தொழிலாளர் வாக்கு வங்கியை மெல்ல மெல்லத் தன்வசப்படுத்தின. இன்று கம்யூனிஸ்ட் கட்சிகள் பலமான இடதுசாரி சித்தாந்தத்தைக் கொண்டிருந்தாலும், தேர்தல் களத்தில் திராவிடக் கட்சிகளின் தயவை எதிர்பார்க்கும் நிலைக்கு அவை தள்ளப்பட்டுள்ளன.
திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு துருவங்களே இப்போது தமிழக அரசியலின்மையப் புள்ளிகளாக உள்ளன. குறிப்பாக, திமுக கூட்டணியில் இணையும் சாதி சார்ந்த சிறு கட்சிகள் மற்றும் நடுத்தரக் கட்சிகள், காலப்போக்கில் தங்களின் தனித்துவமான கொள்கைகளை இழந்து, பெரிய கட்சியின் நிழலிலேயே வாழப் பழகிக் கொள்கின்றன.
மூப்பனார் ராஜாஜி
தமிழகத்துக்கு வெளியே குறிப்பாக, பாஜக போன்ற தேசியக் கட்சிகள் அமைக்கும் கூட்டணி சில இடங்களில் மாறுபட்ட முடிவுகள் தந்துள்ளன. பிஹாரில், நிதிஷ் குமாருக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்தது. பஞ்சாப்பில், சிரோமணி அகாலி தளத்துடன் நீண்ட காலப் பயணம்.
வடகிழக்கு மாநிலங்களில் என்இடிஏ மூலம் பிராந்தியத் தலைவர்களுக்கு அதிகாரம். இந்த மாதிரிகள் கூட்டணிக் கட்சிகளின் அடையாளத்தைப் பாதுகாக்கும் முயற்சியாகப் பார்க்கப்படுகின்றன. ஆனால், தமிழகத்தில் காமராஜர், ராஜாஜி, மூப்பனார் போன்ற ஆளுமைகள் வழிநடத்திய கட்சிகளே திராவிட அரசியலின் சுழலில் சிக்கித் தங்களின் செல்வாக்கை இழந்துள்ளன.
போக்குவரத்து வாரியம்
தமிழக அரசு அமைத்த கட்டுமான வாரியம், போக்குவரத்து வாரியம் போன்ற அமைப்புகள் தொழிலாளர்களுக்கு பல நன்மைகளைச் செய்தாலும், அவை ஆளுங்கட்சியின் அரசியல் கட்டுப்பாட்டுக்குள் இயங்குவதாக ஒரு விமர்சனம் உண்டு. இது சுயேச்சையான தொழிலாளர் இயக்கங்களின் வீழ்ச்சிக்கு மறைமுகக் காரணமாக அமைந்தது.
கூட்டணி அரசியல் என்பது அனைவருக்குமான இடத்தைப் பெற்றுத் தரும் ஒரு ஜனநாயகக் கருவியா அல்லது ஒரு பெரிய மீன் சிறிய மீன்களை விழுங்கும் அதிகார வேட்டையா?" என்று அந்த அறிக்கையில் அர்ஜுனமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்..
தேர்தல் யுக்தி
வடமாநிலங்களில் கூட்டணிக் கட்சிகளுக்கு அதிகாரம் அளிக்கப்படுவது போலத் தமிழகத்தில் நிலைமை இல்லை என்பதை அர்ஜுனமூர்த்தி அறிக்கையில் கோடிட்டு காட்டியிருப்பது பெருத்த கவனத்தை பெற்று வருகிறது..
காரணம், தமிழக அரசியலில் கூட்டணி என்பது தற்போது ஒரு தேர்தல் யுக்தியாக மட்டுமே சுருங்கிவிட்டது. சிறிய கட்சிகள் ஒரு குறிப்பிட்ட வாக்கு வங்கியை வைத்திருந்தாலும், அவை தங்களின் தனித்துவமான கொடி, கொள்கை மற்றும் அடையாளத்தை விட, பெரிய கட்சிகளின் நிழலில் இருப்பதே பாதுகாப்பு எனக் கருதுகின்றன. இது அக்கட்சிகளின் நீண்டகால வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன், வாக்காளர்களிடமும் அந்தக் கட்சிகள் மீதான நம்பிக்கையைக் குறைக்க வழிவகுக்கிறது.
திராவிட கட்சிகள்
குறிப்பாக, தொழிலாளர் நல வாரியங்கள் போன்ற அரசு அமைப்புகள் ஆளுங்கட்சியின் நேரடிப் பார்வையில் இருப்பதால், ஒருகாலத்தில் வலுவாக இருந்த தொழிற்சங்கங்களின் அரசியல் பேரம் பேசும் சக்தி மழுங்கடிக்கப்பட்டுள்ளது.
சிறிய கட்சிகள் தங்களை மீட்டெடுக்க வேண்டுமானால், வெறும் தேர்தல் சீட் ஒதுக்கீட்டோடு நின்றுவிடாமல், கொள்கை ரீதியான போராட்டங்களை முன்னெடுத்துத் தங்களின் சுய அடையாளத்தை மக்களிடம் நிரூபிக்க வேண்டியது அவசியமாகும்...!!
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications