Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிமுக இப்போ 3 ஆக பிரிந்துள்ளது.. காரணமே அவங்க தான்.. தொல் திருமாவளவன் அட்டாக்

அரசியல் சித்து வேலைகளை எல்லா மாநிலத்திலும் பாஜக செய்து கொண்டு இருக்கிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் சாடினார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக தலையிடாமல் இருந்திருந்தால் அதிமுக சசிகலா தலைமையில் ஒன்றாக இருந்து இருக்கும் எனவும் எடப்பாடியையும் ஓபிஎஸ்ஸ்சையும் ஒன்றாக இணைத்து கையில் எடுத்தார்கள். இப்போது அவர்களையும் உடைத்து விட்டார்கள் என்று தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

அதிமுகவில் பாஜகவே பிளவு ஏற்படுத்தியதாகவும் பாஜக தலையீடு இல்லாமல் இருந்தால் சசிகலா தலைமையில் ஒரே அதிமுகவாக இருந்திருக்கும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கூறினார். சென்னை ஆலந்தூரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசியபோது திருமாவளவன் இவ்வாறு கூறினார்.

மேலும், பாஜகவின் அரசு பொது சிவில் சட்டத்தை கொண்டு வர திட்டம் தீட்டி வருவதாகவும் அவர்களுடைய அடுத்த இலக்கு இந்தியாவை இந்து மத நாடாக அறிவிப்பதுதான் எனவும் கடுமையாக சாடினார். இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கூட்டத்தில் பேசியதாவது:-

சசிகலா தலைமையில் ஒரே அதிமுகவாக

சசிகலா தலைமையில் ஒரே அதிமுகவாக

திமுகவை எதிர்க்கக் கூடியவர்களையும் திராவிட அரசியலை எதிர்க்கக் கூடியவர்களையும் மறைமுகமாக அனைத்து ஆதரவையும் கொடுத்து ஊக்கப்படுத்துகிறார்களோ அதேபோல எல்லா மாநிலத்திலும் அரசியல் சித்து வேலைகளை பாஜக செய்து கொண்டு இருக்கிறது. அதிமுக மூன்றாக சிதறிக்கிடப்பதற்கு பாஜகதான் காரணம். பாஜக தலையிடாமல் இருந்து இருந்தால் சசிகலா தலைமையில் ஒரே அதிமுகவாக இருந்து இருக்கும். எடப்பாடியையும் ஓபிஎஸ்ஸ்சையும் ஒன்றாக இணைத்து கையில் எடுத்தார்கள். இப்போது அவர்களையும் உடைத்து விட்டார்கள்.

செயல் திட்டம் ஒன்றாகத்தான் உள்ளது

செயல் திட்டம் ஒன்றாகத்தான் உள்ளது

பாஜக அரசு பொது சிவில் சட்டத்தை கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறார்கள். ராஜஸ்தானை சேர்ந்த பாஜக எம்.பி 2020 ஆம் ஆண்டு தாக்கல் செய்த மசோதா அண்மையில் விவாதத்திற்கு வந்தது. பொது சிவில் சட்டம் குறித்த விவாதம் மாநிலங்களவையில் நடைபெற்றது அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. சங் பரிவார் அமைப்புகள் வேறு வேறு பெயர்களில் இருந்தாலும் செயல் திட்டம் ஒன்றாகத்தான் உள்ளது.

முடிந்த வரை பாஜக செய்துவிட்டது

முடிந்த வரை பாஜக செய்துவிட்டது

இந்தியாவை இந்து மதம் சார்ந்த நாடாக அறிவிக்க வேண்டும், இந்து ராஷ்டிரா என்று அறிவிக்க வேண்டும் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஒட்டு மொத்த இலக்காக உள்ளது. அதற்கு முன் நிபந்தனையாக சிலவற்றை செய்ய வேண்டும். பாபர் மசூதி இடிப்பு, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ நீக்குவது, பொது சிவில் சட்டம், குடியுரிமை பறிப்பு போன்றவற்றை செய்ய வேண்டும். இதை முடிந்த வரை பாஜக அரசு செய்து விட்டது.

இந்து மதம் இருக்க வேண்டும்

இந்து மதம் இருக்க வேண்டும்

அண்டை நாடுகளில் இருந்து வரும் அகதிகள் முஸ்லிம்களாக இருந்தால் குடியுரிமை கொடுப்பது இல்லை. அவர்களின் இறுதி இலக்கு அரச மதமாக இந்து மதம் இருக்க வேண்டும் என்பதேயாகும். இதற்கு தடையாக இருப்பது இந்திய அரசியல் அமைப்பு சட்டம் மட்டுமே. எனவே தான் அவர்கள் ஒவ்வொரு திட்டத்தையும் படிப்படியாக நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறார்கள். பாக்கி இருப்பது பொது சிவில் சட்டம் மட்டும்தான். அதையும் செய்துவிட்டால் அரசியல் அமைப்பு சட்டம் நீர்த்து போகும்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+