பாஜக கூட்டணிக்கு வந்துவிடுங்க.. கடைசியில் எடப்பாடிக்கு போனை போட்ட "பெரிய" தலை.. மாலை வரை டைம்?
சென்னை: பாஜகவுடன் அதிமுக மீண்டும் கூட்டணி வைக்க வேண்டும் என்று முக்கியமான "புள்ளி" ஒருவர் எடப்பாடி பழனிசாமிக்கு போன் செய்து கோரிக்கை விடுத்துள்ளாராம்.
பாஜகவுடன் கூட்டணி வைக்க அதிமுகவிற்கு இன்று மாலை வரை முடிவு எடுக்க நேரம் கொடுக்கப்பட்டு உள்ளதாம். ஆனால் எடப்பாடி பாஜகவுடன் செல்லும் முடிவை எடுக்க மாட்டார் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாஜக தோல்வி: கர்நாடகா உட்பட தென்னிந்தியாவில் பாஜக அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து வருகிறது. இந்த தொடர் தோல்விகளால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் சுமுகமாக போக டெல்லி பாஜக ஆலோசனை செய்து வருகிறதாம்.
2024ல் தமிழ்நாட்டில் கூடுதல் எம்பி இடங்களை வெல்லும் விதமாகவும்.. 2026ல் கூடுதல் சட்டசபை இடங்களை வெல்லும் விதமாகவும் பாஜக எடப்பாடி உடன் சமாதானமாகி செல்ல இருக்கிறதாம். அதிமுகவிற்கான கூட்டணி கதவு திறந்தே இருக்கிறது என்று பாஜக மூத்த தலைவர் அமித் ஷா பேட்டி அளித்துள்ளார். அவரின் இந்த பேச்சுக்கு பின் முக்கியமான காரணம் இருப்பதாக பாஜக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
என்ன காரணம்?: 1. தேசிய அளவில் பாஜக லோக்சபா தேர்தலில் வெல்ல வாய்ப்பு இருக்கிறது என்றே பாஜககருதுகிறது , இருந்தாலும் தென்னிந்தியாவில் வலுவாக கால் பதிக்க வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது. 2, தமிழ்நாட்டில் இருந்து அமைச்சர்கள் வேண்டும் என்பதில் பாஜக தீர்க்கமாக இருக்கிறது. அதற்கு அதிமுக தயவு தேவை. 3. 2024ல் கூட்டணி இருந்தால்தான் , 2026 சட்டசபை தேர்தலில் கூட்டணியை தொடர முடியும். 4. தென்னிந்தியாவில் பாஜக வலுவாக இல்லை என்ற விமர்சனத்தை சரி செய்ய அதிமுகவின் தேவை இருக்கும் என்பதால் பாஜக இறங்கி வருவதாக கூறப்படுகிறது.
சாமியார்: கூட்டணி பேச்சுவார்த்தைகளை தொடங்கி ஒரு மாதம் ஆகியும் இதுவரை பாஜக கூட்டணிக்கு வர யாரும் தயாராக இல்லை. பாமக, தேமுதிக என்று யாரும் அதிமுக கூட்டணிக்கு செல்ல தயாராக இல்லை. இந்த நிலையில் அதிமுகவை சமாதானம் செய்து பாஜக சார்பாக கோவையை சேர்ந்த ஆன்மீக குரு ஒருவர் களமிறக்கப்பட்டு உள்ளாராம்.
இரண்டு கட்சிக்கும் நெருக்கமாக இருக்கும் அந்த சாமியார் மூலம் மீண்டும் அதிமுகவை பாஜகவிற்குள் இழுக்கும் பணிகள் நடந்து வருகிறதாம். திரைமறைவில் இந்த பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறதாம்.
பேச்சுவார்த்தை: இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடையும் வாய்ப்பு உள்ளதால்.. நேற்று பாஜகவுடன் அதிமுக மீண்டும் கூட்டணி வைக்க வேண்டும் என்று முக்கியமான "புள்ளி" ஒருவர் எடப்பாடி பழனிசாமிக்கு போன் செய்து கோரிக்கை விடுத்துள்ளாராம்.
பாஜகவுடன் கூட்டணி வைக்க அதிமுகவிற்கு இன்று மாலை வரை முடிவு எடுக்க நேரம் கொடுக்கப்பட்டு உள்ளதாம். எங்க கூட வந்துவிடுங்கள்.. இன்று மாலை முடிவை அறிவியுங்கள். நாம் சேர்ந்தால் 8 இடங்களில் வெற்றி உறுதி என்று அந்த நபர் பேசி இருக்கிறாராம்.
ஆனால் எடப்பாடி பாஜகவுடன் செல்லும் முடிவை எடுக்க மாட்டார் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாஜக வேண்டாம். தனியாகவே தேர்தலை சந்திக்கலாம் என்ற முடிவில் அவர் இருக்கிறாராம்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications