சாதி கொடுமைகளை அகற்றிய ஆர்எஸ்எஸ்.. அம்பேத்கர் சொன்னதை தெளிவா படிங்க திருமா.. பாஜக நாராயணன் அட்டாக்!
சென்னை : இந்துக்கள் குறித்து அவதூறு பேசுவதை கைவிட்டு உண்மையிலேயே பாதிக்கப்படும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்க முயற்சி செய்யவேண்டும் என திருமாவளவனைச் சாடியுள்ளார் பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணண் திருப்பதி.
எந்த மதங்களை திருமாவளவன் உயர்த்தி பிடிக்கிறாரோ, போற்றுகிறாரோ, அந்த மதங்கள் தான், மற்ற மத நம்பிக்கைகளை புறந்தள்ளி, தங்களின் மத நம்பிக்கைகளை உலகம் முழுவதும் எப்படியாவது கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதோடு சகிப்பு தன்மையற்று அடிப்படைவாதத்தை முன்னிறுத்துகின்றன என விமர்சித்துள்ளார் நாராயணண் திருப்பதி.
இந்துக்களை ஒன்றாகத் திரட்டுவதற்கு சாதி வெறியை தூண்டினால் போதும் என்பதால் அப்படிச் செயல்படுகிறார்கள் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேசியது குறித்து பாஜக மாநிலத் துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பாஜக நாராயணன் பதிலடி
இதுதொடர்பாக பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், "கிறிஸ்துவ உணர்வை தூண்டுவதற்கு இயேசு பெயரை சொன்னால் போதும், இஸ்லாமிய உணர்வை தூண்டுவதற்கு அல்லா பெயரை சொன்னால் போதும். கிறிஸ்துவ பற்று ஏற்படுவதற்கு பைபிள் வசனங்களை சொன்னால் போதும். இஸ்லாம் பற்று வளர்ப்பதற்கு குரான் வசனங்களை சொன்னால் போதும். ஆனால், இந்துக்களை ஒன்றாக திரட்டுவதற்கு சாதி வெறியை தூண்டினால் தான் திரட்ட முடியும். அவனுக்கு எந்த வசனமும் இல்லை. இந்து மதத்திற்கு நிறுவனர் இல்லை. தனித்தனி கடவுளை சொல்லி இந்துக்களை திரட்ட முடியாது.

சாதி வெறியை தூண்டினால் தான்
இயேசுவை ஒரே கடவுள், அல்லா ஒரே கடவுள், அவர் அருவமானவர், அவர் ஏக இறைவன், எங்கும் இருப்பார் என்று கிறிஸ்துவர்களும், முஸ்லிம்களும் சொல்வது போல், ஹிந்துக்கள் யாரை சொல்வார்கள்? சிவன் என்று சொன்னால், விஷ்ணு வரமாட்டான், விஷ்ணுவை சொன்னால் முருகன் வரமாட்டான், முருகனை சொன்னால் விநாயகர் வர மாட்டான், விநாயகரை சொன்னால் கருப்பசாமி வரமாட்டான், கருப்பசாமியை சொன்னால் நொண்டி கருப்பசாமி வரமாட்டான்" என்று தொல்.திருமாவளவன் பேசிய ஒரு உரையை கேட்க நேர்ந்தது.

இந்து மதத்திற்கு நிறுவனர் இல்லை
கிறிஸ்துவமும், இஸ்லாமும் மற்ற மதங்களை, கடவுள்களை ஏற்று கொள்வதில்லை. மற்ற கடவுள்களை சாத்தான்கள் என்றே குறிப்பிடுகின்றன. மற்ற நம்பிக்கைகளை மூட நம்பிக்கைகள் என்றே அழைக்கின்றன. ஆனால், இந்து புனித நூல்கள் எதுவும் மற்ற மதங்கள் குறித்தோ, மற்ற கடவுள்கள் குறித்தோ, எந்த விமர்சனமும் செய்வதில்லை. மாறாக, அனைவரும் நலன் பெற்றிருக்க வேண்டும் என்றே சொல்கிறது. இந்து மதத்திற்கு நிறுவனர் இல்லை என்று அவர் சொல்வது சரி தான். இந்து மதத்திற்கு துவக்கமும் இல்லை, முடிவும் இல்லை. 'ஆதியும் அந்தமும் இல்லாதது இந்து மதம்'. சனாதன தர்மம் என்ற இந்து மதத்திற்கு பொருள் 'நிலையானது' என்பதை திருமாவளவன் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்து என்றால் யார்?
அனைவரும் ஒன்றே என்பதால் தான் முருகனை, விஷ்ணுவை, சிவனை, கருப்பசாமியை, என் குலதெய்வம் நீலி அம்மாவை உட்பட யாரை சொன்னாலும் அனைவரும் இறைவன் தான் என்ற சிந்தனையை, நம்பிக்கையை, உறுதியை தான் 'இந்து என்றால் யார்?' என்பதை நம் அரசியலமைப்பு சட்டத்தை அளித்த அண்ணல் அம்பேத்கர், " யார் ஒருவர் இஸ்லாமியர் இல்லையோ, யார் ஒருவர் கிறிஸ்துவர் இல்லையோ, யார் ஒருவர் பார்சி இல்லையோ, அவர் இந்து" என்று தெளிவாக, எளிமையாக கூறியுள்ளார். "இந்து என்பது மதமல்ல, வாழும் முறை. இந்து மதம் என்பது நம் மண்ணின் தர்மம், நெறி, தத்துவம், கலாச்சாரம், பண்பாடு," கல்லை, மண்ணை, செடியை, கொடியை, மரத்தை, நீரை, நெருப்பை, ஆகாயத்தை, பூமியை, காற்றை என்று இயற்கையை கடவுளாக வணங்குபவர்கள் இந்துக்கள்.

மத ஆதிக்கம்
சனாதன தர்மம் என்ற இந்து மதம் சாதியை உருவாக்கவில்லை. ஆனால், இஸ்லாமிய, கிறிஸ்துவ மதங்கள் தான் நம் கலாச்சாரத்தின் மீது படையெடுத்து, நம்மை பிரித்தாள சாதிகளை உருவாக்கின என்பதை திருமாவளவன் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். முகலாயர்களும், ஆங்கிலேயர்களும் அவர்களின் மதங்களை வளர்ப்பதற்கு, பரப்புவதற்கு நம் இதிகாசங்களை, கலாச்சார காவியங்களை, பண்பாட்டு நெறிகளை திரித்து, சிதைத்து , குழப்பம் விளைவித்தன, இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளில் அந்த மதங்களின் ஆதிக்கமே உள்ளது.

மத நல்லிணக்கம்
ஆனால், இந்தியாவில், பெரும்பான்மை மக்களின் சகிப்புத்தன்மையின் காரணமாகவே மத நல்லிணக்கம் கடைபிடிக்கப்படுகிறது என்பதை திருமாவளவன் அவர்கள் உணர வேண்டும். எந்த மதங்களை திருமாவளவன் அவர்கள் உயர்த்தி பிடிக்கிறாரோ, போற்றுகிறாரோ, அந்த மதங்கள் தான், மற்ற மத நம்பிக்கைகளை புறந்தள்ளி, தங்களின் மத நம்பிக்கைகளை உலகம் முழுவதும் எப்படியாவது கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதோடு சகிப்பு தன்மையற்று அடிப்படைவாதத்தை முன்னிறுத்துகின்றன என்பது வெளிப்படையான உண்மை.

சாதி இல்லாத அரசியல் கட்சிகள் உண்டா?
ஆகவே, மதவாதம் என்பது கிறிஸ்துவ, இஸ்லாமிய மதங்களையே சாரும். மேலும், எல்லாவற்றிற்கும் மேல், சாதி வெறி குறித்து திருமாவளவன் அவர்கள் பேசுவது வியப்பையளிக்கிறது. தமிழகத்தில் சாதி இல்லாத அரசியல் கட்சிகள் உண்டா? சாதி இல்லாத துறைகள் உண்டா? சாதி இல்லாத நிகழ்வுகள் உண்டா? சாதி இல்லாது காலச் சக்கரம் நகருமா? அப்படிப்பட்ட கட்சிகளோடு தானே திருமாவளவன் கூட்டணி வைத்து சட்டமன்ற உறுப்பினர்களை தன் கட்சி சார்பாக கொண்டு வருகிறார். நாடாளுமன்ற உறுப்பினராகிறார், தமிழகத்தில் சாதி இல்லாமல் ஒரு அணுவும் அசையாது என்பது உலகறிந்த உண்மை. இதில் திருமாவளவனும் விதிவிலக்கல்ல என்பதை நாடறியும்.

அம்பேத்கரின் கருத்தை திருமாவளவன் படிக்க வேண்டும்
கிறிஸ்துவ மதத்திலும், இஸ்லாம் மதத்திலும் பிரிவினை இல்லையா? தீண்டாமை இல்லையா? என்பதை திருமாவளவனின் மனசாட்சிக்கே (இருந்தால்) விட்டு விடுகிறேன். இனியும், இந்துக்கள் குறித்து அவதூறு பேசுவதை கைவிட்டு உண்மையிலேயே பாதிக்கப்படும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்க முயற்சி செய்வது சிறப்பைத் தரும். சாதிய கொடுமைகளை அகற்றிய பாஜகவின் தாய் இயக்கமான ஆர்.எஸ்.எஸ் குறித்து அம்பேத்கரின் கருத்தை திருமாவளவன் படித்து தெளிவு பெற வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
-
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
சீட்டுக்கு மட்டும் பேசும் திருமா! தமிழகம் வாழ..திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? ஜெ ஸ்டைலில் எடப்பாடி -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
இது திமுக பண்ணையார்தனம்.. திருமாவளவன் கண்ணீர் தான் விடவில்லை.. கோர்த்துவிட்ட ஆதவ் அர்ஜுனா -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன?










Click it and Unblock the Notifications