Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தருமபுரமா? தர்மபுரியா? கன்ஃபியூசான நாராயணன் திருப்பதி! எங்க ஊர்ல ஏதுங்க ஆதினம்? கலாய்த்த திமுக எம்பி

Subscribe to Oneindia Tamil

சென்னை : தருமபுரம் ஆதீனம் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி ட்விட்டரில் தருமபுரி ஆதீனம் என குறிப்பிட்டுள்ள நிலையில், நாராயணன் Sir, சும்மா ஏதாவது பேச வேண்டும் என்பதற்காக எந்த ஊருணு கூட தெரியாம பதிவிட கூடாது என திமுக எம்பி செந்தில்குமார் பதிவிட்டுள்ளார்.

தருமபுரம் ஆதீனத்தில் பட்டணப் பிரவேச நிகழ்வானது இம்மாத இறுதியில் நடைபெற உள்ளது. திராவிடர் கழகத்தினரின் எதிர்ப்பால் ஆதினத்தை பல்லக்கில் அமர்த்தி பக்தர்கள் சுமந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பழமைவாய்ந்த சைவ மடமான தருமபுரம் ஆதினத்தின் பட்டினப் பிரவேச நிகழ்வு அப்பகுதியில் பதற்ற நிலையை உருவாக்கியுள்ளது.

பல்லக்கு தூக்கும் நிகச்சி

பல்லக்கு தூக்கும் நிகச்சி

ஆதினம் பல்லக்கு தூக்கும் நிகழ்வுக்கு தடை விதிக்கக் கூடாது எனவும், பல ஆண்டு காலமாக நடைபெறும் நிகழ்ச்சிக்கு தடை விதிப்பது மக்கள் நம்பிக்கைக்கு எதிரானது என பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கூறி வருகின்றனர். அதே நேரத்தில் மனிதனை மனிதனே சுமக்கும் நிகழ்சிக்கு தடை விதிக்க வேண்டுமென திரவிடர் கழகம், கம்யூனிஸ்ட் கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

தடை செய்ய கோரிக்கை

தடை செய்ய கோரிக்கை

அதே நேரத்தில் பட்டின பிரவேச நிகழ்ச்சி ஆதீன எல்லைக்குள் தான் நடக்கிறது. அதனை தடை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை எனவும், திட்டமிட்டு அரசியல் காரணங்களுக்காக பட்டின பிரவேச நிகழ்ச்சியை தடை செய்துள்ளதாகவும், பல்லாக்கு தூக்கும் நிகழ்ச்சிக்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கடும் எதிர்ப்பு

கடும் எதிர்ப்பு

இந்நிலையில் தருமபுரம் ஆதீனத்தில் பல்லக்கு பட்டணப் பிரவேசம் நடத்துவது தொடர்பாக விரைவில் சுமூகத் தீர்வு காணப்படும் எனவும், முதல்வர் ஸ்டாலின் இந்த விவகாரத்தில் நல்ல முடிவெடுப்பார் என தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார். இந்நிலையில் முதல்வரை ஆதீனங்கள் சந்தித்த நிலையில், பட்டின பிரவேசத்துக்கு முதல்வர் வாய்மொழி உத்தரவு அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாராயணன் திருப்பதி ட்விட்டர்

நாராயணன் திருப்பதி ட்விட்டர்

இந்த நிலையில், தருமபுரம் ஆதீனம் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், தருமபுரி ஆதீன பட்டினப்பிரவேச விவகாரத்தில் மீண்டும் தவறிழைக்கிறது தி மு க அரசு. சில களவாணி பயல்களின் கோரிக்கையை ஏற்று பல்லக்கு தூக்க தடைவிதித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. சில புறம்போக்குகள் இதை தடை செய்ய வேண்டும் என்று சொல்வதற்காக, பல நூற்றாண்டுகளாக கடைபிடித்து வரும்" என பதிவிட்டிருந்தார்.

Recommended Video

    ஆதினங்கள் கேள்வி! நாத்திகர்கள் மக்களின் மத நம்பிக்கைகளில் தலையிடுவது ஏன்? .. | Oneindia Tamil
    திமுக எம்.பி. கிண்டல்

    திமுக எம்.பி. கிண்டல்

    தனது பதிவில் தருமபுரம் என்பதற்காக தர்மபுரி என நாராயணன் திருப்பதி பதிவிட்டிருந்தார். இதனை வைத்து அவரை பலரும் கலாய்த்து வருகின்றனர். இதுகுறித்து பதிவிட்டுள்ள தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக உறுப்பினர் செந்தில்குமாரும் அவரை சீண்டியுள்ளார். நாரயணன் திருப்பதியின் பதிவை ரீ ட்வீட் செய்து, "இது என்ன எங்க ஊர் மக்களுக்கே தெரியாத🤔 தருமபுரி ஆதீன பட்டினப்பிரவேசம். நாராயணன் Sir, சும்மா ஏதாவது பேச வேண்டும் என்பதற்காக எந்த ஊருணு கூட தெரியாம பதிவிட கூடாது. அது தருமபுரம், தர்மபுரி இல்லை." எனக் குறிப்பிட்டுள்ளார். இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+