சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

யோகிக்கு வானதி "தேங்ஸ்".. மதுவந்தியையும் விடவில்லை.. நாங்களும் "தேங்ஸ்" .. கலாய்த்த திமுக எம்பி!

யோகிக்கு நன்றி சொன்ன வானதி சீனிவாசன்

Google Oneindia Tamil News

சென்னை: தனக்காக பிரச்சாரம் செய்ய வந்த, உபி முதல்வர் யோகிக்கு வானதி நன்றி சொல்லி உள்ளார்.. அதற்கு திமுக எம்பி, பதிலளித்து கலாய்த்து ட்வீட் போட்டுள்ளார்.

இந்த முறை கோவை தெற்கு தொகுதி மிகவும் பேசப்பட்ட தொகுதி.. இது ஒரு ஸ்டார் தொகுதி... எத்தனையோ கருத்து கணிப்புகள் வந்தாலும், இந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்று இதுவரை அறுதியிட்டு சொல்ல முடியாத தொகுதியாக உள்ளது.

அந்த வகையில் கமலுக்கும், வானதிக்கும் செம டஃப் வரும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. ஆனால், கமல் நிலவரம் எப்படி என்று தெரியவில்லை.

 கமல்

கமல்

கமல் தன்னுடைய மொத்த வேட்பாளர்களுக்கும் தான் மட்டுமே சென்று வாக்கு சேகரித்தார்.. அத்துடன் கூட்டணி கட்சியான சமகவுக்கும் சென்று வந்தார். ஆனால், வானதிக்கு தமிழக தலைவர்கள் திரண்டு வந்தனர்.. ராதாரவி, நமீதா ஆளுக்கு ஒரு பக்கம் வாக்கு சேகரித்தனர். இது போதாதென்று வடமாநில தலைவர்கள் தினம் தினம் வந்து போனார்கள். அப்படிதான் உபி முதல்வர் வந்தார்..

யோகி

யோகி

வந்த ஒரே நாளில் கோவை தெற்கு பகுதியே பரபரத்து காணப்பட்டது.. யோகி வருகையின்போது நடத்தப்பட்ட பைக் பேரணியின்போது டவுன்ஹால் பகுதியில் இஸ்லாமியர்களுடன் தகராறு ஏற்பட்டது... அப்போது அங்கிருந்த செருப்பு கடைகளின் மீது பேரணியில் வந்தவர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர்... கல்வீச்சு தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், அந்த வீடியோ காட்சி சோதிக்கப்பட வேண்டும், இந்த சின்ன விஷயத்தை ஊதி பெரிதாக்கப்படுவதாக வானதி சீனிவாசன் கூறியிருந்தார்.

 அமைதி

அமைதி

எனவே, இந்த விவகாரம் பெரிதாக்கப்பட்டுவிடுமோ, ஒருவேளை தேர்தல் இந்த தொகுதியில் மட்டும் தள்ளிப் போடப்படுமோ என்ற சந்தேகமும் எழுந்தது. ஆனால், அப்படி எதுவுமே நடக்கவில்லை.. தேர்தலும் அமைதியாக நடந்து முடிந்துவிட்டது. தனக்காக ஓட்டு கேட்க வந்த அனைவருக்கும் வானதி சீனிவாசன் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். முக்கிய நபர்களுக்கு தனித்தனியாக ட்வீட் போட்டு தன்னுடைய நன்றியை வானதி வெளிப்படுத்தி உள்ளார்.

எம்பி

எம்பி

அதில், தனக்காக பிரச்சாரம் செய்ய வந்த மதுவந்திக்கும் நன்றி சொல்லி உள்ளார்.. அதேபோல, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கும் தனது நன்றியினை வானதி சீனிவாசன் தெரிவித்திருந்தார்... இந்த அந்த பதிவுக்கு "நாங்களும் அவருக்கு எங்களின் மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்" என்று திமுக தருமபுரி எம்பி டாக்டர் செந்தில்குமார் கலாய்த்து பதிவிட்டுள்ளார்.

English summary
BJP Vanathi Srinivasan thanked to Yogi and DMK MP show his thanks
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X