ஒரேபோடு.. ‛‛ஒன்றியம்’’னு சொன்னா தான் பாஜகவுக்கு கோபம் வரும்.. அழுத்திய உதயநிதி ஸ்டாலின்.. பின்னணி
சென்னை: மத்திய அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ‛‛ஒன்றியம்னும் சொன்னா தான் அவங்களுக்கு கோபம் வரும் ஒன்றிய அரசின் பிரதமர் நரேந்திர மோடி'' எனக்கூறி திமுகவின் இளைஞரணி செயலாளராரும் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் பேசி மீண்டும் பாஜகவினரை சீண்டினார்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு திமுக ஆட்சியை பிடித்தது. அன்று முதல் இன்று வரை தொடர்ந்து திமுக அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே வார்த்தை போர் தொடர்ந்து வருகிறது.
குறிப்பாக மத்திய அரசு மீது பிற மாநிலங்களை போல் தமிழக அரசு ஜிஎஸ்டி நிலுவை தொகை, பேரிடர் இழப்பு தொகை உள்ளிட்டவற்றை வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது. இதற்கு அப்பாற்பட்டு மத்திய அரசின் இந்தி மொழி நிலைப்பாட்டுக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
அதன்படி புதிய கல்வி கொள்கைக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியை இணைப்பு மொழியாக்க வேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

பயிற்று மொழியாக இந்தி
இதற்கிடையே தான் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு, மத்திய பல்கலைக்கழகங்கள் உள்பட அனைத்து தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் அல்லாத கல்வி நிறுவனங்களிலும் பயிற்று மொழி கட்டாயமாக இந்தியாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. மேலும் ஒரே பொது நுழைவு தேர்வு கொண்டு வரவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கும் தற்போது கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் உள்பட திமுகவின் கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்த்துள்ளன. மீண்டும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை வெடிக்க செய்ய வேண்டாம் என கடுமையாக மத்திய அரசுக்கு எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திமுக ஆர்ப்பாட்டாம்
இந்நிலையில் இன்று திமுகவின் இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் தமிழகம் முழுவதும் இந்தி திணிப்பு மற்றும் பொது நுழைவு தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே திமுக. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார்.

ஒன்றியம்... பாஜகவை சீண்டிய உதயநிதி
அப்போது உதயநிதி பேசும்போது, ‛‛இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக நேற்று அறிக்கை வெளியிட்டோம். ஒரு நாளில் இவ்வளவு பெரிய கூட்டம் எழுச்சியை காட்டியுள்ளோம். ஒன்றியம்னு சொன்னாதான் அவங்களுக்கு கோபம்வரும். நாம் அதையே சொல்லுவோம். ஒன்றிய பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களே தமிழ்நாட்டில் நடப்பது அதிமுக ஆட்சி இல்லை. இப்போது முதல் அமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீ்ர செல்வம் இல்லை. தமிழ்நாட்டை ஆண்டு கொண்டு முதல் அமைச்சராக இருப்பவர் எங்கள் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். திமுகவின் முக்கிய கொள்கைளில் ஒன்று இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்பது தான். இதனை எப்போதும் விட்டுக்கொடுக்க மாட்டோம். ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் தொடர்ந்து எதிர்ப்போம்'' என்றார்.

முன்பு திமுக-பாஜகவினர் மோதல்
இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் ஒன்றியம் எனக்கூறி பாஜகவினரை உதயநிதி ஸ்டாலின் சீண்டியுள்ளார். தமிழகத்தில் திமுக ஆட்சி வந்தது முதல் மத்திய அரசை ஒன்றிய அரசு என முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் திமுகவினர் கூறி வருகின்றனர். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பை கூறினர். இருப்பினும் திமுக தனது நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை. இது ட்விட்டர் உள்பட பல்வேறு சமூக வலைதளங்களில் பெரும் விவாதப்பொருளானது. திமுகவினர் -பாஜகவினர் இடையே கருத்து மோதல்கள் வெடித்தன.

சட்டசபையில் ஸ்டாலின் விளக்கம்
மேலும் மத்திய அரசை ஒன்றிய அரசு எனக்கூற எதிர்ப்பு தெரிவித்து பாஜகவின் எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் சட்டசபையில் பேசியிருந்தார். இதற்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளிக்கையில், ‛‛'ஒன்றிய அரசு' என சொல்வதை ஏதோ சமூகக் குற்றம் போல யாரும் நினைக்க வேண்டாம். சட்டத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ, அதைத்தான் நாங்கள் சொல்கிறோம். நம் அரசியலமைப்பு சட்டத்தின் முதல் வரி, 'இந்தியா, அதாவது பாரதம், மாநிலங்களை கொண்ட ஓர் ஒன்றியமாய் இருக்கும்' என்று தான் உள்ளது. அதைத் தான் பயன்படுத்துகிறோமே தவிர, சட்டத்தில் இல்லாததை நாங்கள் பயன்படுத்தவில்லை. ஒன்றியம் என்பது தவறான சொல் அல்ல. மாநிலங்கள் ஒன்று சேர்ந்தது என்பது தான் அதன் பொருள். இதனால் ஒன்றியம் என்ற வார்த்தையை பார்த்து யாரும் மிரளத் தேவையில்லை'' என்றார்.

மீண்டும் விவாதமா?
இதன் தொடர்ச்சியாகவும் திமுகவினர் மத்திய அரசை ஒன்றிய அரசு என கூறி வந்தாலும் கூட ஒன்றியம் தொடர்பான வார்த்தையை அடிப்படையாக வைத்து திமுகவினர்-பாஜகவினர் இடையே வார்த்தை மோதல் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் தான் தற்போது மீண்டும் உதயநிதி ஸ்டாலின், ‛‛ஒன்றியம்னு சொன்னாதான் அவங்களுக்கு (பாஜகவினருக்கு) கோபம் வரும்'' எனக்கூறி பேசியுள்ளார். இதனால் மீண்டும் ஒன்றியம் எனும் வார்த்தை விவாதத்துக்கு உள்ளாகலாம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
-
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications