தூசி தட்டி வரும் பாபா.. மலரும் தாமரை! வில்லன் ராமசாமியாம்.. திருக்குறள் ஏன்? அரசியல் மந்திரம் வருமா?
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் திரைக்கதை எழுதி நடித்த பாபா திரைப்படத்தின் மறு வெளியீடு டிரைலர் வெளியாகி இருக்கும் நிலையில் அதில் இடம்பெற்ற காட்சிகளை வைத்து ரசிகர்கள் பல்வேறு சந்தேகங்களை கிளப்பி வருகிறார்கள்.
கடந்த 2002 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடித்த பாபா திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது.
சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய இந்த படத்துக்கு, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருந்தார். இதில் நடிகையாக மனிஷா கொய்ராலா நடித்து இருந்தார். நகைச்சுவை நடிகர் கவுண்டமணி, விஜயகுமார் உள்ளிட்ட பலர் இதில் நடித்து இருந்தனர்.

படுதோல்வியடைந்த பாபா
ஆன்மீக பற்று அதிகம் கொண்ட நடிகர் ரஜினிகாந்தின் கனவு திரைப்படமான இதில் அவரது நிஜ வாழ்க்கையோடு தொடர்பு கொண்ட இமயமலை பயணம், ரிஷிகள், முனிவர்கள், பாபா போன்ற காட்சிகள் அதிகம் இடம்பெற்று இருக்கும். ஆனால், ரசிகர்களால் இந்த படம் அதிகம் விரும்பப்படவில்லை. வெளியான சில நாட்களிலேயே படம் படுதோல்வியை தழுவியது.

ரஜினிகாந்த் வேதனை
இதனால் அந்த சமயத்தில் ரஜினி கடும் மன உளைச்சலுக்கு ஆனதாகவும் கூறப்பட்டது. இதன் பிறகு பல வெற்றிப் படங்களை ரஜினிகாந்த் கொடுத்துவிட்டாலும், பாபா படத்தின் தோல்வி அவரது மனதில் காயமாகவே பதிந்துவிட்டது. இருப்பினும் தனது மனதுக்கு நெருக்கமான திரைப்படம் பாபாதான் என்று பல இடங்களில் பேசி உள்ளார் ரஜினிகாந்த்.

பாபா மறுவெளியீடு
இந்த நிலையில் 20 ஆண்டுகள் கழித்து பாபா திரைப்படத்தை ரீ ரிலீஸ் செய்வதாக கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தார். இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. சில காட்சிகள் மாற்றி அமைக்கப்படுவதாக கூறப்படுகிறது. நடிகர் ரஜினிகாந்தும் சில வசனங்களை மாற்றி மீண்டும் டப்பிங் கொடுத்து உள்ளார்.

ஆன்மீக படங்கள்
சமீபகாலமாக பான் இந்தியா என்ற பெயரில் வெளியாகும் தென்னிந்திய, இந்தி படங்கள் ஆன்மீகம் சார்ந்து உள்ளன. குறிப்பாக ஆர்.ஆர்.ஆர்., பிரம்மாஸ்திரா, ராம் சேது, ஆதிபுருஷ், காந்தாரா போன்ற படங்கள் ஆன்மீக கதை கொண்டுள்ளன. இதில் சில படங்கள் வெற்றியும் பெற்றன. அதன் தொடர்ச்சியாக தற்போது பாபாவை வெளியிட்டால் இந்திய அளவில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று ரஜினி நம்புவதாக கூறப்படுகிறது.

டிரைலர் வெளியீடு
வரும் டிசம்பர் 12 ஆம் தேதி ரஜினிகாந்தின் பிறந்தநாளன்று பாபா திரைப்படம் மறு வெளியீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. அதில் காட்சிகள் புதுப்பொழிவுடன் மறுஆக்கம் செய்யப்பட்டு டிஜிட்டலாக மாற்றப்பட்டு இருக்கிறது. பழைய படம்போல் அல்லாமல் புதிய திரைப்படத்தின் காட்சிகளைபோல் அது உள்ளன.

வில்லன் பெயர் ராமசாமி
ஆனால், இதை வைத்து பல்வேறு கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகிறார்கள். டிரைலரின் ஆரம்பத்திலேயே தாமரை மலர்ந்து லோட்டஸ் இண்டெர்நேஷனல் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் வருவது தொடங்கி வில்லன் பெயர் வரை ரசிகர்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். இந்த படத்தில் வில்லன் பெயர் ராமசாமி என்று வைக்கப்பட்டு இருக்கிறது.

பலர் கேள்வி
ஆன்மீகவாதியான ரஜினி, அரசியல்வாதியான வில்லனை எதிர்ப்பார். ராமசாமி என பெயரிடப்பட்ட வில்லனுக்கு பின்னால் சுவற்றில் திருக்குறள் எழுதப்பட்டு இருக்கிறது. பாபா திரைப்படத்தை திரையரங்கம், தொலைக்காட்சியில் பார்க்காத பலர் இதுகுறித்து தற்போது சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். பெரியாரின் உண்மை பெயர் ஈ.வே.ராமசாமி என்பதால் இந்த பெயரை வில்லனுக்கு ரஜினி வைத்துள்ளாரா என்று கேட்டு வருகிறார்கள்.

அரசியல் மந்திரம்
அதேபோல் ரீ ரிலீஸ் செய்யப்படும் இந்த படத்தில் சில காட்சிகளை ரஜினிகாந்த் மாற்றி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து பிரபல சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு பிஸ்மி தெரிவிக்கையில், "ரஜினிகாந்த் தற்போது அரசியலுக்கு வரவில்லை என்பதால், அது தொடர்பாக படத்தில் இடம்பெற்று உள்ள மந்திரத்தையும் மாற்றி இருக்கிறார் என தகவல் கிடைத்து உள்ளது." என்றார்.
-
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications