Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"வெல்கம் டூ சென்னை.. " உண்மையில் நேப்பியர் பாலம்தானா? பிருந்தா மாஸ்டர் வெளியிட்ட மேக்கிங் வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்காக ஏ.ஆர். ரஹ்மானின் வெல்கம் டூ சென்னை பாடல் உருவானது எப்படி என்பது குறித்த வீடியோவை நடன இயக்குநர் பிருந்தா மாஸ்டர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Recommended Video

    வெல்கம் டூ சென்னை.. உண்மையில் நேப்பியர் பாலம்தானா?

    44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ரஷ்யாவில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அங்கு கொரோனா பிரச்சினை உள்ளிட்ட சில காரணங்களால் அங்கு போட்டி நடத்த முடியாத சூழல் எழுந்தது.

    இதையடுத்து இந்தியாவில் போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டது. பின்னர் இந்தியாவில் எந்த மாநிலத்தில் நடத்தலாம் என்ற கேள்வி எழுந்த போது, இந்தியாவில் உள்ள கிராண்ட் மாஸ்டர்களில் பெரும்பாலானோர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.

    44 ஆவது செஸ் ஒலிம்பியாட்

    44 ஆவது செஸ் ஒலிம்பியாட்

    இதனால் 44-ஆவது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தமிழகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 28 ஆம் தேதி இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தொடக்க விழா நடைபெற்றது. நேற்று முதல் மாமல்லபுரத்தில் போட்டிகள் தொடங்கின. மாலை 3 மணிக்கு தினந்தோறும் இந்த போட்டிகள் நடைபெறுகின்றன. வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெறுகின்றன.

    ஓய்வு

    ஓய்வு

    வரும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி மட்டும் ஓய்வு ஆகும். இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பான பாடல் படப்பிடிப்பு கடந்த 7ஆம் தேதி சென்னை நேப்பியர் பாலத்தில் நடைபெற்றது. இதற்காக இந்த பாலம் முழுவதும் செஸ் தீமில் வடிவமைக்கப்பட்டது. இந்த பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார்.

    பாடலுக்கான டீசர்

    பாடலுக்கான டீசர்

    இந்த பாடலுக்கான டீசரை நடிகர் ரஜினிகாந்த் கடந்த 15 ஆம் தேதி வெளியிட்டார். வெல்கம் டூ சென்னை என தொடங்கும் இந்த பாடலில் யாதும் ஊரே யாவதும் கேளிர் என்ற வரிகளும் உள்ளன. இந்த பாடலில் கோட் சூட் போட்டுக் கொண்டு முதல்வர் ஸ்டாலின் நேப்பியர் பாலத்தில் நடந்து வருவது போல் இருந்தது.

    நேப்பியர் பாலம்

    நேப்பியர் பாலம்

    இதை பார்ப்பதற்கு உண்மையிலேயே இது நேப்பியர் பாலம்தானா இல்லை கிராபிக்ஸா என மக்களை குழப்பியது. ஆனால் அந்த குழப்பத்திற்கு விடை தரும் வகையில் அந்த பாடல் உருவான விதத்தை நடன இயக்குநர் பிருந்தா மாஸ்டர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இரு ட்வீட்களில் இந்த வீடியோ வெளியாகியுள்ளது. முதல்வர் ஸ்டாலின், ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோருடன் செஸ் ஒலிம்பியாட் கீதத்திற்காக பணியாற்றியது நல்ல அனுபவம் ஆகும். இந்த வாய்ப்பை கொடுத்த 44ஆவது செஸ் ஒலிம்பியாட் கீதத்தின் அனைத்து குழுவினருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+