• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

சித்ரா இறக்கும் முன்பு என்ன நடந்தது? பரபரப்பு சிசிடிவி வீடியோ வெளியிட்ட ஹேமந்த் அப்பா.. டுவிஸ்ட்!

Google Oneindia Tamil News

சென்னை: மறைந்த, பாண்டியன் ஸ்டோர்ஸ் 'புகழ்' நடிகை சித்ரா பற்றி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தகவல் வெளியாகி கொண்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

  சென்னை: சித்ரா மரணம்.. முந்தின நாள் என்ன நடந்தது..? ஹேமந்த அப்பா வெளியிட்ட ‘பரபர’ வீடியோ..!

  சித்ரா தற்கொலை செய்தாரா? கொலை செய்யப்பட்டாரா என்று பல்வேறு யூகங்கள் எழுந்த நிலையில், ஒரு நாள் தாமதமாக அவரது பிரேத பரிசோதனை நடைபெற்றது. ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

  சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம் சாட்டி, போலீசார் அவர் கணவர் ஹேமந்த்தை கைது செய்துள்ளனர். ஆனால் விசாரணை ஒரே பக்கமாக போகிறது என்று சில விமர்சனங்கள் எழுதுவதையும் பார்க்க முடிகிறது.

  "இது கொலைதான்.. தற்கொலையே கிடையாது.. அவன்தான் காரணம்".. சித்ராவின் அம்மா ஆவேசம்!

  ஆடி கார், வீடு

  ஆடி கார், வீடு

  சீரியல்களில் நடிப்பதற்கு குறைந்த சம்பளமே வழங்கப்படும் நிலையில், ஆடி காரில் எப்படி சித்ரா வலம் வர முடிந்தது? 1.5 கோடியில் திருவான்மியூரில் வீடு வாங்க முடிந்தது எப்படி? சித்ரா இறந்த நாள் அன்று இரவு ஒரு முக்கிய புள்ளியின் கார் அந்த ஓட்டலுக்கு எதற்கு வந்தது? திரையில் அவருடன் நடித்த ஒரு நடிகையுடன் டேட்டிங் சென்று அது வீடியோவாக பதிவு செய்யப்பட்டதாக வெளியான தகவல் உண்மையா? என சித்ராவின் இன்னொரு பக்கம் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் மற்றொரு தரப்பால் சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்படுகிறது.

  அரசியல் வீடு

  அரசியல் வீடு

  சித்ரா வெறுமனே சீரியல்களில் நடிக்கவில்லை. ஹோட்டல் திறப்பு போன்ற நிகழ்ச்சிகளிலும் கெஸ்டாக கலந்து கொண்டு உள்ளார். பெரம்பலூரைச் சேர்ந்த ஒரு அரசியல் பிரமுகர், ஏற்கனவே பெண்கள் விஷயத்தில் சர்ச்சையில் சிக்கியவர். அவரும் சித்ராவும் இணைந்து சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளனர். அவரோடு புலி பொம்மையுடன் சித்ரா எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகி புருவங்களை உயர்த்த வைத்துள்ளது. இத்தனைக்கு அந்த நபர் ஹோட்டல் அறையில் தங்கியிருந்த பெண்களுடன் தப்பாக நடந்து வீடியோ வெளியிட்டதாக சர்ச்சையில் சிக்கியவராம். ஆடி காரை இவர்தான் ஸ்பான்சர் செய்ததாக ஒரு தகவல் பரவி வருகிறது.

  சித்ரா மாமனார்

  சித்ரா மாமனார்

  இந்த நிலையில்தான் சித்ராவின் மாமனார் ரவிச்சந்திரன், அதாவது ஹேமந்த்தின் தந்தை நேற்று உதவி போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். அதில், விசாரணை ஒரே பக்கமாக நடப்பதாகவும், விசாரணையை வேறு கோணங்களில் விரிவுபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

  சித்ரா ரசிகர்கள் குமுறல்

  சித்ரா ரசிகர்கள் குமுறல்

  சித்ரா போனுக்கு பல பிரமுகர்களிடமிருந்து அழைப்பு வரும் என்றும் ஏன் இப்படி அழைப்பு வந்தது, அதன் பின்னணி என்ன என்பது பற்றி விசாரிக்க வேண்டும் என்று ரவிச்சந்திரன் போலீசிடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் சித்ராவின் இன்னொரு பக்கம் குறித்து ரவிச்சந்திரன் பல தகவல்களை புகாரில் கூறியுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சித்ரா பற்றி ரவிச்சந்திரன் இவ்வாறு கூறியிருக்க கூடாது என்று சித்ரா ரசிகர்கள் சமூக ஊடகங்களில் குமுறி வருகிறார்கள்.

  சிசிடிவி காட்சி

  சிசிடிவி காட்சி

  இதன் பிறகு ரவிச்சந்திரன் அளித்த பேட்டியில் கூறியதாவது: திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு மண்டபம் பார்க்க சென்றோம். அப்போது சித்ராவும் எங்கள் கூட வந்தார். அவர் இறப்பதற்கு 1 நாள் முன்பு மாலையில்தான் மண்டபம் பார்க்கச் சென்றோம். மண்டபத்தில் பதிவான அந்த சிசிடிவி காட்சி எங்களிடம் உள்ளது. அதில் சித்ரா எங்களிடம் சந்தோஷமாக பேசியபடி வருகிறார். அப்புறம் எப்படி தற்கொலைக்கு தூண்டியதாக கூற முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

  அவசரமாக ஹேமந்த் கைது ஏன்?

  அவசரமாக ஹேமந்த் கைது ஏன்?

  சித்ரா செல்போனுக்கு யார் யாரிடமிருந்து கால் வந்தது, அவரை யார் யார் தொடர்பு கொண்டார்களோ அதைப் பற்றி விசாரிக்க வேண்டும். ஆர்டிஓ விசாரணை துவங்கும் முன்பாக போலீசார் முன்கூட்டியே ஹேமந்தை கைது செய்தது ஏன் என்று தெரியவில்லை. விசாரணைக்கு ஒத்துழைத்தும் திடீரென கைது செய்யப்பட்டார். எனவே, விரிவான விசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை விடுத்துள்ளேன் என்றார் அவர்.

  மண்டபம் செல்லும் சித்ரா

  மண்டபம் செல்லும் சித்ரா

  சித்ரா மாமனார் அளித்த வீடியோ காட்சியில், ஹேமந்த் மற்றும் சித்ரா இருவரும் ஆடி காரிலிருந்து இறங்கி மண்டபத்திற்குள் செல்லும் காட்சிகள் உள்ளன. மண்டபத்திற்கு உள்ளே பதிவான காட்சிகளும் உள்ளன. அதில் சித்ரா பதற்றம் இல்லாமல் இயல்பாகத்தான் ஹேமந்த் மற்றும் குடும்பத்தாரிடம் பேசியபடி செல்கிறார்.

  English summary
  Many controversies surrounded in serial actress Chitra death, her father in law raises many doubts. CCTV footage released.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X