சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எல்லாருக்கும் பூஸ்டர் டோஸ்.. கொரோனா 4ம் அலையில் இருந்து தப்பிக்க மத்திய அரசு திட்டம்!

By
Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் செலுத்தவதற்கான ஏற்பாடுகளை செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் முதல்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலக நாடுகள் மத்தியில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. அமெரிக்கா போன்ற உலக வல்லரசுகள் தொடங்கி எந்த நாடும் கொரோனா பெருந்தொற்றின் கோரப் பிடியில் இருந்து தப்ப முடியவில்லை.

ஆல்பா, டெல்டா, ஓமிக்ரான் என அடுத்தடுத்து புதிய கொரோனா வகைகள் உருமாறி வருவதால் அதை முற்றிலுமாக அழிப்பது கிட்டதட்ட முடியாத ஒன்றாகிவிட்டது. இதுபோன்ற உருமாறிய கொரோனா வகைகளால் அடுத்தடுத்து அலைகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.

 இந்தியாவில் தீவிர பாதிப்பு ஏற்படுத்துமா கொரோனா 4ஆம் அலை? ஆய்வாளர்கள் கூறுவது என்ன.. பரபர தகவல் இந்தியாவில் தீவிர பாதிப்பு ஏற்படுத்துமா கொரோனா 4ஆம் அலை? ஆய்வாளர்கள் கூறுவது என்ன.. பரபர தகவல்

4ம் அலை

4ம் அலை

கொரோனா முதல்முதலாக 2019ல் தொடங்கி 2020ல் உலக நாடுகளில் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தியது, அதன்பிறகு 2021ல் கொரோனா இரண்டாம் அலையில், டெல்டா வைரஸின் தாக்கத்தால் மிகப்பெரிய அளவில் உயிரிழப்புகளும் சேதங்களும் ஏற்பட்டன. இந்த டெல்டா வைரஸைப் பார்த்து உலக நாடுகளே பயந்துபோய் உள்ளன.

தடுப்பூசி

தடுப்பூசி

கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள தடுப்பூசி ஒன்று தான் தீர்வு என நிபுணர்கள் தெரிவித்தனர். இதையடுத்து உலகம் முழுவதும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமடைந்தது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஆண்டு ஜனவரி 16-ந் தேதி தொடங்கியது. முதலில், சுகாதார பணியாளர்களுக்கும்,முன்கள பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

பூஸ்டர் டோஸ்

பூஸ்டர் டோஸ்

அதற்கடுத்து 60 வயதை கடந்தவர்கள், 45 வயதை தாண்டிய அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டது. 18 வயதை தாண்டியவர்களுக்கும் அதற்கடுத்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதன் அடுத்தகட்டமாக 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கடந்த ஜனவரி 3-ந் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட முன்களப்பணியாளர்கள், 60 வயதைக் கடந்தவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டு வருகிறது.

கொரோனா அலை

கொரோனா அலை

கொரோனா குறைந்திருந்தாலும், முழுமையாக அழியவில்லை. மீண்டும் எப்போது வேண்டுமானாலும் உக்கிரமாகும் என கணிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசியால் 3ம் அலையில் பெரிய தாக்கம் இல்லாமல் இருந்தது. இதனால் தற்போது 60 வயதுக்கு மேற்பட்டொருக்கு மட்டும் வழங்கப்படும் பூஸ்டர் தடுப்பூசியை அனைவருக்கும் வழங்கலாமா என மத்திய சுகாதாரத்துறை யோசித்து வருகிறது. இதையடுத்து, அடுத்து நாடாளுமன்றம் கூடும்போது, பூஸ்டர் தடுப்பூசி குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. அதன்பிறகு அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என தெரியவந்துள்ளது.

English summary
As the corona rises again, it has been reported that the federal government plans to make arrangements to pay a booster dose to everyone.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X