Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் ஒரே நாளில் 978 டெலிவரி ஊழியர்கள் மீது வழக்கு.. எந்த நிறுவனத்தின் மீது அதிக கேஸ் தெரியுமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: சாலை விதிகளை முறையாகக் கடைப்பிடிக்காமல் சென்றதாக நேற்று ஒரே நாளில் மட்டும் 978 உணவு மற்றும் ஈ- காமர்ஸ் ஊழியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் பிரபல உணவு டெலிவரி நிறுவனமான ஜொமேட்டோ 10 நிமிடங்களில் உணவு டெலிவரி செய்வது தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

அதாவது ஆர்டர் செய்த 10 நிமிடங்களில் உணவு டெலிவரி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இது பெரிய அளவில் சர்ச்சையானது.

விளக்கம்

விளக்கம்

சென்னை போன்ற போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள நகரத்தில் 10 நிமிடங்களில் உணவு டெலிவரி எப்படி சாத்தியம் என்ற கேள்வி எழுந்தது. மேலும், போக்குவரத்து விதிகளையும் பின்பற்றாமல் போகும் சூழல் ஏற்படும் என்றும் விமர்சனங்கள் எழுந்தன. இது தொடர்பாகச் சென்னை போலீசாரும் அந்த நிறுவனத்திடம் விளக்கம் கேட்டிருந்தது. அதைத் தொடர்ந்து 10 நிமிட டெலிவரி என்பது சோதனை திட்டம் என்றும் சென்னையில் அத்திட்டத்தைக் கொண்டு வரும் எண்ணமில்லை என்றும் அந்த நிறுவனம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

 சிறப்பு வாகன தணிக்கை

சிறப்பு வாகன தணிக்கை

இதன் பின்னரே அந்த சர்ச்சை சற்று ஓய்ந்தது. அதேநேரம் பொதுவாகவே உணவு டெலிவரி மற்றும் ஈ-கார்மரஸ் டெலிவரி செய்யும் ஊழியர்கள் போக்குவரத்து விதிகளை முறையாகக் கடைப்பிடிப்பது இல்லை என்ற விமர்சனம் அதிகம் உள்ளது. இந்தச் சூழலில் நேற்றைய தினம் சென்னையில் போலீசார் சிறப்பு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். விதிமுறைகளை கடைப்பிடிக்காத உணவு டெலிவரி மற்றும் ஈ-காமர்ஸ் டெலிவரி செய்யும் ஊழியர்கள் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

 978 வழக்குகள்

978 வழக்குகள்

சாலை விதிமுறைகளை கடைப்பிடிக்கவில்லை என்று கூறி நேற்று ஒரே நாளில் 978 உணவு மற்றும் ஈ- காமர்ஸ் ஊழியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து அபராதமாக ரூ.1,35,400 விதிக்கப்பட்டது. வேகமாகச் செல்லுதல், தலைக்கவசம் அணியாமல் செல்லுதல், சிக்னல் விதிகளைப் பின்பற்றவில்லை போன்ற காரணங்களுக்காக டெலிவரி ஊழியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 உணவு டெலிவரி ஊழியர்கள் மீது வழக்கு

உணவு டெலிவரி ஊழியர்கள் மீது வழக்கு

அதிகபட்சமாக ஸ்விக்கி டெலிவரி ஊழியர்கள் 450 பேர் மீதும் ஜொமேட்டோ நிறுவனத்தின் 278 பேர் மீதும் டன்சோ நிறுவனத்தின் 188 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல அமேசான், பிளிப்கார்ட் போன்ற ஈ-காமர்ஸ் டெலிவரி ஊழியர்கள் 62 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. சிக்னலை மதிக்காமல் சென்றதாக 581 பேர் மீதும், நிறுத்தற்கோடுகள் கடந்து வாகனங்கள் நிறுத்தியதாக 131 பேர் மீதும், ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 115 பேர் மீதும், தவறான பாதையில் சென்றதாக 70 பேர் மீதும், மொபைல் பேசியபடி வாகனம் ஓட்டியதாக 20 மீதும், வேகமாகச் சென்றதாக 61 மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+