சென்னை மாநகராட்சி பட்ஜெட்: முதல் பட்ஜெட்டை ஏப். 9ல் தாக்கல் செய்கிறார் மேயர் பிரியா

சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை இம்மாதம் 9ஆம் தேதி தாக்கல் செய்கிறார் மேயர் பிரியா. பட்ஜெட் மீதான விவாதமும் அன்றே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மாநகராட்சியின் 2022-23 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் இம்மாதம் 9ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று மேயர் பிரியா அறிவித்துள்ளார். பட்ஜெட் மீதான விவாதமும் அன்றே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில், 2016ஆம் ஆண்டுக்கு பின்னர் மேயர், துணை மேயர் இல்லாததால், அதிகாரிகள் தயாரித்த பட்ஜெட் நேரடியாக இணையதளத்தில் வெளியிடப்பட்டு வந்தது. ஆறு ஆண்டுக்கு பின், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு தற்போது 200 கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, மறைமுக தேர்தலில் பெரும்பான்மை அடிப்படையில், திமுகவைச் சேர்ந்த பிரியா மேயராகவும், மகேஷ்குமார் துணை மேயராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சென்னை மேயர் பிரியா

சென்னை மேயர் பிரியா

சென்னை மாநகராட்சி மேயர் பதவி முதன்முறையாக பட்டியலினப் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு கடும் போட்டி நிலவி வந்த நிலையில், புதிய மேயராக சென்னை திருவிக நகர் 74-வது வார்டு கவுன்சிலர் பிரியா ராஜன்(28) கடந்த மாதம் 4ஆம் தேதி பதவியேற்றார். இளம் வயது மேயர் என்பதால் திமுக சார்பில் பதவி, பணிகள், செயல்பாடுகள் குறித்து பிரியா ராஜனுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. மகளிர் தின விழா, கொரோனா தடுப்பூசி முகாம்கள், குழந்தைகளுக்கான குடற்புழு நீக்க மாத்திரை வழங்குதல், மாநகராட்சி ஒப்பந்ததாரர்களுடன் ஆலோசனை, அதிகார துஷ்பிரயோகம் செய்யும் கவுன்சிலர்களுக்கு எச்சரிக்கை என தனது செயல்பாடுகள் மூலம் பலருக்கு பதிலளித்து வருகிறார் பிரியா

ஆறு ஆண்டுகளுக்குப் பின் பட்ஜெட் தாக்கல்

ஆறு ஆண்டுகளுக்குப் பின் பட்ஜெட் தாக்கல்

பெருநகர சென்னை மாநகராட்சியில் 6 ஆண்டுக்கு பின், மாநகராட்சி பட்ஜெட் மாமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. மேயர் பிரியா பதவியேற்று முதல் பட்ஜெட் என்பதால், மாநகராட்சி வளர்ச்சி, மக்களுக்கான புதிய அறிவிப்புகள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஏப்ரல் 9ல் பட்ஜெட் தாக்கல்

ஏப்ரல் 9ல் பட்ஜெட் தாக்கல்

இந்நிலையில் 2022 -23ஆம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட் வரும் ஏப்ரல் 9ம் தேதி மாமன்றத்தில் காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் மீதான விவாதமும் அன்றே நடைபெற உள்ளது. இறுதியில் 2022-23ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்திற்கான ஒப்புதல் அளிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சிங்காரச்சென்னை 2.0 திட்டம்

சிங்காரச்சென்னை 2.0 திட்டம்

அதன்படி, மாநகராட்சி பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் வருவாயை பெருக்குவதற்கான ஆதாரங்கள், மாநில பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சிங்கார சென்னை திட்டம், மழைநீர் வடிகால்வாய் போன்றவை முக்கியத்துவம் பெறும் என்று எதிர்பார்க்கப்டுகிறது.

பட்ஜெட் நிதி எவ்வளவு

பட்ஜெட் நிதி எவ்வளவு

கடந்த ஆண்டு மாநகராட்சி பட்ஜெட் ரூ.2,438 கோடிக்கு தாக்கல் செய்யப்பட்டது. மூலதன செலவினத்தை விட வருவாய் 2,084 கோடி ரூபாயாக இருந்தது. நிதி பற்றாக்குறையின் நிலையில் கொரோனா மற்றும் மழை வெள்ளம் போன்றவற்றின் செலவினம் அதிகரித்தது. இந்நிலையில், 2022-23ஆம் ஆண்டுக்கான புதிய பட்ஜெட்டில் தரமான சாலைகள், மழைநீர் வடிகால், ஸ்மார்ட் சிட்டி போன்ற நகரை அழகுப்படுத்தும் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

உள்ளாட்சி பிரதிநிதிகள் முதல் கூட்டம்

உள்ளாட்சி பிரதிநிதிகள் முதல் கூட்டம்

உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்து எடுக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் கலந்து கொள்ளும் முதல் கூட்டம் இது. அனைவரும் கூட்டத்தில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று மேயர் பிரியா தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி மன்ற தலைவராக ராமலிங்கம், துணைத் தலைவர்களாக காமராஜ் மற்றும் ராஜகோபால், கொறடாவாக நாகராஜன், பொருளாளராக வேளச்சேரி மணிமாறன் ஆகியோர் தங்கள் பணிகளை அன்றைய கூட்டத்தில் தொடங்குகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+