சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா பரவல் அதிகமான சென்னை தெருக்கள்!.. சல்லடை போட்டு நோய் கண்டறிய மாநகராட்சியின் புது திட்டம்!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் உள்ள தெருக்களில் 16 சதவீதம் தெருக்களில் கொரோனா நோயாளிகள் அதிகரித்து வருகிறார்கள். இதனால் தெருக்கள் வாரியாக புதிய திட்டத்துடன் சென்னை மாநகராட்சி களம் இறங்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் தமிழகத்தில் 70 சதவீத கேஸ்கள் சென்னை மண்டலத்தை சேர்ந்தவர்கள். அதில் ராயபுரம், தண்டையார்பேட்டை, திருவிக நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய பகுதிகளில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை அதிகளவில் இருக்கிறது.

சென்னை மாநகராட்சியில் மொத்தம் 15 மண்டலங்கள் உள்ளன. இங்கு மொத்தம் தெருக்கள் 39,537 உள்ளன. இதில் 6,537 தெருக்களில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. அதாவது சென்னையில் உள்ள தெருக்களில் இது 16 சதவீதமாகும். 5,943 தெருக்களில்தான் அனைத்து ஆக்டிவ் கேஸ்களும் உள்ளன.

அமித்ஷாவின் டிஜிட்டல் பேரணிக்கு நூதன எதிர்ப்பு- தட்டுகளை தட்டி ராப்ரிதேவி உள்ளிட்டோர் போராட்டம்அமித்ஷாவின் டிஜிட்டல் பேரணிக்கு நூதன எதிர்ப்பு- தட்டுகளை தட்டி ராப்ரிதேவி உள்ளிட்டோர் போராட்டம்

நோயாளிகள்

நோயாளிகள்

தண்டையார்பேட்டையில் மொத்தம் உள்ள 2,995 தெருக்களில் 870 தெருக்களில் 2,249 கொரோனா நோயாளிகள் உள்ளனர். அது போல் போல் 76 தெருக்களில் மட்டுமே 5 கேஸ்களுக்கு மேல் உள்ளது. இதுகுறித்து கொரோனா தடுப்பு அதிகாரி ஜே ராதாகிருஷ்ணன் கூறுகையில் கொரோனாவை தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளையும் விழிப்புணர்வு பிரசாரங்களையும் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

நோயாளிகள்

நோயாளிகள்

தினந்தோறும் 90 முதல் 100 முகாம்களை ஏற்படுத்தி காய்ச்சல் இருக்கிறதா என கண்டறிகிறோம். இந்த தெருக்களில் கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் உள்ள அனைவருக்கும் கொரோனா சோதனை மேற்கொள்கிறோம். ராயபுரத்தில் 563 தெருக்களில் 3,344 நோயாளிகளும் திருவிக நகரில் 497 தெருக்களில் 1,925 நோயாளிகளும் கோடம்பாக்கத்தில் 373 தெருக்களில் 1,934 நோயாளிகளும் உள்ளனர்.

தனிமை

தனிமை

சனிக்கிழமை நிலவரப்படி 9,392 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை தடுக்க ஒவ்வொரு தெருக்களிலும் மைக்ரோ திட்டத்தை அமல்படுத்தவுள்ளோம். எங்கெல்லாம் கிளஸ்டர் பரவுதல் இருக்கிறதோ அங்கெல்லாம் கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை எடுப்பதோடு அந்த நபர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவோம்.

சிறப்பு குழு

சிறப்பு குழு

அப்போதுதான் கொரோனா இல்லாத தெருக்களை ஒருங்கிணைப்பதற்கு இது உதவும். முன்பு இதை ஒரு ஏரியாவில் கடைப்பிடித்தோம். தற்போது தெருக்களில் கடைப்பிடிக்கிறோம். எடுத்துக்காட்டாக ஏரியாவாக பிரிக்கப்பட்ட சுனாமி காலனி தற்போது 5 தெருக்களாக பிரிக்கப்படும். இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மண்டல சிறப்பு குழுவினருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

English summary
Chennai corporation is implementing a new street plan to control coronavirus spread.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X