டிசம்பர் 3ல் சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு வேலைநாள்.. இவங்க மட்டும் வந்தா போதும்.. வெளியான அறிவிப்பு
சென்னை: சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு டிசம்பர் 3ம் தேதியான சனிக்கிழமை வேலைநாள் எனவும், 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் இயங்கும் என முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் அக்டோபர் இறுதியில் வடகிழக்கு பருவமழை துவங்கியது. துவக்கம் முதலே சென்னையில் பருவமழை வெளுத்து வாங்கியது.
சென்னையில் மழை பெய்வதை கணித்து வானிலை ஆய்வு மையம் கூறி வந்த நிலையில் மாணவ-மாணவிகளின் நலன் கருதி விடுமுறைகள் அளிக்கப்பட்டன.

சனிக்கிழமை பள்ளிகள்
கடந்த மாதம் மட்டும் தலைநகர் சென்னை உள்பட பல மாவட்ட பள்ளிகளுக்கு விடுப்புகள் விடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது சென்னை உள்பட தமிழகத்தின் பல இடங்களில் மழை என்பது சற்று குறைந்து காணப்படுகிறது. பள்ளிகள் வழக்கம்போல் இயங்கி வருகின்றன. விரைவில் அரையாண்டு தேர்வு துவங்கி நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் மழைக்காக விடுமுறை வழங்கப்பட்டதை ஈடுசெய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

சென்னை தொடர்பான அறிவிப்பு
அதன்படி மாவட்டத்தில் உள்ள மழை நிலைமையை பார்த்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் முடிவு செய்து நடைமுறைப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் வரும் சனிக்கிழமை பல மாவட்டங்களில் பள்ளிகள் இயங்க உள்ளது. அந்த வகையில் தான் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் சார்பில் இன்று அறிவிப்பு ஒன்று வெளியானது.

6 முதல் 12 வரை வகுப்புகள்
அதன்படி, சென்னையில் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதனை ஈடுசெய்யும் வகையில் சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு வரும் சனிக்கிழமையான டிசம்பர் 3ம் தேதி வேலை நாளாகும் என கூறப்பட்டுள்ளது. அன்றைய தினம் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்.

ஆரம்ப பள்ளிகளுக்கு விடுமுறை
மாறாக அன்றைய தினம் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான ஆரம்ப பள்ளி மாணவர்கள் பள்ளிகளுக்கு வரவேண்டாம். அவர்களுக்கு அன்றைய தினம் விடுமுறையாகும் என்று சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் அறிவித்துள்ளார்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications