ஆர்எஸ்எஸ் - ஏபிவிபியோடு தொடர்பு.. சுப்பையாவை சஸ்பெண்ட் செய்த உத்தரவு ரத்து.. சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை: அரசியல் இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாக கூறி டாக்டர் சுப்பையாவை சஸ்பெண்ட் செய்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் சுப்பையா தொடுத்த வழக்கில் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
சமீபத்தில் அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் நீதி கேட்டு ஏபிவிபி அமைப்பினர் முதல்வர் வீடு முன் போராட்டம் நடத்தி கைதும் செய்யப்பட்டனர்.
ஏபிவிபி அமைப்பை சேர்ந்த பலர் மொத்தமாக திரண்டு வந்து முதல்வர் வீட்டு வாசல் முன் காவி கொடியை ஏந்தி போராட்டம் செய்தனர். மாணவியின் பெயரை சொல்லி அவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கூறி கோஷம் எழுப்பினர்.

சுப்பையா
திடீரென முதல்வர் வீடு முன் ஏபிவிபி அமைப்பினர் இப்படி போரட்டம் நடத்தியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த போராட்டத்திற்கு பின் சுப்பையா தூண்டுதலாக இருந்ததாக புகார் வைக்கப்பட்டது. சென்னை ஏபிவிபி அமைப்பை சேர்ந்தவர் சண்முகம் சுப்பையா. ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபியின் தேசிய தலைவராக இவர் முன்பு பதவி வகித்தார்.

ஏபிவிபி
ஆதம்பாக்கத்தில் வசித்து வரும் இவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் அரசு மருத்துவராக பணி செய்து வந்தார். இதற்கு முன் புற்றுநோய் அறுவை சிகிச்சை பிரிவில் தலைவர் பதவியையும் வகித்து இருக்கிறார். முதல்வரின் வீட்டை முற்றுகையிட முயன்ற ஏ.பி.வி.பி தேசிய செயலர் நிதி திரிபாதியை மருத்துவர் சுப்பையா நேரில் சந்தித்தார். இவர் நேராக சிறைக்கு சென்று திரிப்பாதியை சந்தித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது இதன் காரணமாக மருத்துவர் பணியில் இருந்து பணியிடை நீக்கம் செய்து உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

ஏபிவிபி போராட்டம்
அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிகளை மீறிவிட்டதாக இவர் மீது புகார் அளிக்கப்பட்டு, விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் தன் மீதான சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்து டாக்டர் சுப்பையா தாக்கல் செய்த மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசியல் இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாக கூறி டாக்டர் சுப்பையாவை சஸ்பெண்ட் செய்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

சுப்பையா நீக்கம்
சென்னை உயர் நீதிமன்றத்தில் சுப்பையா தொடுத்த வழக்கில் இந்த உத்தரவை போட்டுள்ளது. சுப்பையா மீதான ஒழுங்கு நடவடிக்கை விசாரணையை 12 வாரங்களில் முடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது ஒழுங்கு நடவடிக்கை விசாரணைக்கு மனுதாரர் முழு ஒத்துழைப்பை வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மூதாட்டி வீட்டில் சிறுநீர் கழித்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுப்பையாவிற்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

வாதம் என்ன?
இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணகுமார் முன் மார்ச் 24ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, சுப்பையா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், மனுதாரர் ஏபிவிபி எனும் மாணவர் சங்கத்தின் தலைவராக 2017 முதல் 2020 வரை பதவி வகித்துள்ளதாகவும், இந்த இயக்கம் அரசியல் அமைப்பு அல்ல எனவும் வாதிட்டார். மேலும், சுப்பையா எந்த விதமான அரசியல் கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை எனவும், சஸ்பெண்ட் உத்தரவுக்கான காரணங்களை கூறும் ஆதாரங்களை வெளியிட வேண்டும் எனவும் வாதிட்டார்.

மாணவி வழக்கு
தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், மாணவி தற்கொலை விவகாரத்தில் அரசியல் கருத்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் டாக்டர் சுப்பையா பதிவு செய்துள்ளார் என தெரிவித்தார். மேலும், ஏபிவிபி ஒரு அரசியல் சார்ந்த அமைப்பு தான் எனவும் துறைரீதியான விசாரணை நடந்து வருவதாகவும், அதனை தொடர அனுமதிக்க வேண்டும் எனவும் விளக்கமளித்தார்.

உத்தரவு ரத்து
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கிருஷ்ணகுமார், இன்று பிறப்பித்துள்ள தீர்ப்பில், சுப்பையா பணியிடைநீக்கம் செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளார். துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மீதான விசாரணையை 12 வாரங்களில் முடிக்க வேண்டுமென அரசுக்கும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென மருத்துவர் சுப்பையாவுக்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்..
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications