சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஊரடங்கு முடியும் வரை கட்டணம் செலுத்தாவிட்டாலும் இணைப்பு துண்டிக்கக் கூடாது- ஹைகோர்ட்

By Sivam
Google Oneindia Tamil News

சென்னை: ஊரடங்கு முடியும் வரை கட்டணம் செலுத்தவில்லை என்றாலும் மின் இணைப்பு துண்டிக்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் ஏப்ரல் 13ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், மின் கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகை செலுத்துவதற்கான இறுதி நாள் மாா்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை உள்ள தாழ்வழுத்த மின் பயனீட்டாளா்கள் ஊரடங்கு அமல்படுத்தியது.

Chennai HC orders not to do DC those who are not paid EB bill

இதன் காரணமாக, தாமதக் கட்டணம் மற்றும் மின் துண்டிப்பு அல்லது மறு இணைப்புக் கட்டணமின்றி மே 6-ஆம் தேதி வரை செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், மின்கட்டண கவுன்ட்டா்களுக்கு வருவதைத் தவிா்க்கும் வகையில், ஏற்கெனவே பயனீட்டாளா்கள் ஆன்லைன் மூலம் பணம் செலுத்த வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

இந்நிலையில் மே 6 ஆம் தேதிக்குள் மின் கட்டணம் இறுதி கெடுவை ரத்து செய்யக் கோரியும், ஜூலை 31ஆம் தேதி வரை தாழ்வழுத்த மின்னிணைப்புகளுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது என உத்தரவிடக் கோரியும் வாய்ஸ் ஆஃப் தமிழ்நாடு அறக்கட்டளையின் நிறுவனரான வழக்கறிஞர் சி.ராஜசேகர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

எம் மக்களுக்கு உழைப்பேன்.. சிவில் சர்வீஸ் தேர்வில் வென்ற கேரள பழங்குடி பெண்.. மலைக்க வைக்கும் கதை!எம் மக்களுக்கு உழைப்பேன்.. சிவில் சர்வீஸ் தேர்வில் வென்ற கேரள பழங்குடி பெண்.. மலைக்க வைக்கும் கதை!

அவர் மனுவில், வீட்டு மின் இணைப்பு பெற்றவர்கள், விவசாயிகள், சிறு குறு நிறுவனங்கள் ஆகியவை ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மே 6ஆம் தேதிக்குள் கட்டணம் செலுத்துவது என்பது சாத்தியமில்லை என குறிப்பிட்டிருந்தார்.

தாழ்வழுத்த மின் இணைப்பு பெற்றுள்ளவர்களில் பெரும்பாலானோர் வருமானம் இழந்திருப்பதை தமிழக அரசும், மின்சார வாரியமும் கருத்தில் கொண்டு ஜூலை 31-ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்த தேவையில்லை என்று அறிவிக்க உத்தரவிட வேண்டுமென பிரதான கோரிக்கை வைத்திருந்தார்.

மே 6-க்குள் மின் கட்டணம் செலுத்தாத இணைப்பை துண்டிக்க இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வினித் கோத்தாரி, நீதிபதி புஷ்பா சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடைபெற்றது.

மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஜி .ராஜேஷ் ஆஜராகி வாதிட்டார் வழக்கை விசாரித்த நீதிபதிகள் மே 18 ம் தேதி வரை மின் கட்டணம் செலுத்தவில்லை என்றாலும், மின் இணைப்புகளை துண்டிக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளனர். மேலும் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் அளித்து அரசு முடிவு எடுக்க அறிவுறுத்தியுள்ளனர்.

English summary
Chennai HC orders to not to disconnect the EB connection despite anyone not paid EB bill.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X