பக்தி இல்லாதவர்களை கோவில் அறங்காவலர்களாக நியமிக்க முடியாது.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக கோவில்களில் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான வழக்குகளில், ‛‛தெய்வ பக்தி இல்லாதவர்களை கோவில் அறங்காவலர்களாக நியமிக்க அனுமதிக்க முடியாது'' என்று சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் ஏராளமான கோவில்கள் இயங்கி வருகின்றன. பல கோவில்களில் அறங்காவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த அறங்காவலர்களின் மேற்பார்வையில் கோவில்கள் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் அடிக்கடி கோவில்களில் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான சர்ச்சைகள் எழுவது வாடிக்கையான ஒன்றாக உள்ளது. இதுதொடர்பாக நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு

உயர்நீதிமன்றத்தில் வழக்கு

இந்நிலையில் தான் தமிழக கோவில்களில் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான வழக்குகள் இன்று சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அரசியல் சார்பு கேள்வி ஏன் இல்லை?

அரசியல் சார்பு கேள்வி ஏன் இல்லை?

வழக்கை விசாரித்த நீதிபதிகள், அறங்காவலர்கள் தேர்வுக்கான விண்ணப்பங்களில் அரசியல் சார்பு குறித்த கேள்வி இடம் பெறாதது ஏன்? என இந்து சமய அறநிலையத்துறைக்கு கேள்வி எழுப்பினர். இதற்கு இந்து அறநிலையத்துறை சார்பில் பதிலளிக்கப்பட்டது. இதுதொடர்பாக இந்து அறநிலையத்துறை தரப்பு வழக்கறிஞர் பதில் அளித்தார்.

பதில் என்ன?

பதில் என்ன?

அப்போது அவர் ‛‛வழக்கின் கடந்த விசாரணையின்போது தெய்வ பக்தி கொண்ட அரசியல் கட்சியை சேர்ந்தவராக இருந்தால் அவரை அறங்காவலராக நியமிக்கலாம் என நீதிமன்றம் தெரிவித்து இருந்தது. இதனால் அறங்காவலர் தேர்வுக்கான விண்ணப்பங்களில் அரசியல் சார்பு கேள்வியை இடம்பெற செய்யவில்லை'' என பதிலளித்தார்.

நீதிபதிகள் உத்தரவு

நீதிபதிகள் உத்தரவு

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‛‛தெய்வ பக்தி இல்லாத எவரையும் கோவில் அறங்காவலர்களாக நியமிக்க அனுமதிக்க முடியாது. அறங்காவலர் தேர்வு தொடர்பான விண்ணப்பத்தில் அரசியல் சார்பு குறித்த கேள்வியை சேர்க்க வேண்டும்'' என திட்டவட்டமாக கூறினர். மேலும் அறங்காவலர் தேர்வுக்காக மாவட்ட அளவிலான குழு நியமனம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் இந்து சமய அறநிலையத்துறைக்கு அதிரடியாக உத்தரவிட்டார். அதன்பிறகு வழக்கின் விசாரணையை ஜனவரி 25ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+