சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பயணிகள் கூட்டம் இல்லையாம்... சென்னை-மதுரை தேஜஸ் ரயில் ரத்து... ரெயில்வே அதிரடி முடிவு!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை-மதுரை, மதுரை-சென்னை இடையே இயக்கப்பட்டு வந்த தேஜஸ் சிறப்பு ரயில் வருகிற ஜனவரி 4 முதல் ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாததால் தேஜஸ் சிறப்பு ரயில் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

சென்னை-மதுரை, மதுரை-சென்னை இடையே வாரத்தில் 6 நாட்கள் தேஜஸ் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. சென்னையில் காலை தினமு ம் 6 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு மதியம் 12.30 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கமாக மதுரையில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு சென்னைக்கு வந்து சேரும்.

Chennai-Madurai Tejas express will be canceled from January 4

முழுக்க குளிர்சாதன பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் டிவி வசதியும் உள்ளது. ஆனால் எதிர்பார்த்தபடி இந்த ரயிலுக்கு பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லை என கூறப்படுகிறது. கொரோனா காரணமாக சில மாதங்கள் இந்த ரயிலின் சேவை நிறுத்தப்பட்டு இருந்தது. சில வாரங்களுக்கு முன்பு இதன் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது.

கேரள தங்க கடத்தல் வழக்கு... ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் மீது.. அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்!கேரள தங்க கடத்தல் வழக்கு... ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் மீது.. அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்!

இந்த நிலையில் இந்த தேஜஸ் ரெயில் நிரந்தரமாக ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக ரெயில்வே வெளியிட்ட செய்தியில், சென்னை-மதுரை இடையே இயக்கப்படும் தேஜஸ் சிறப்பு ரெயில் ஜனவரி 4-ம்தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது.பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாததால் தேஜஸ் சிறப்பு ரயில் ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கபட்டுள்ளது.

English summary
The Tejas special train between Chennai-Madurai and Madurai-Chennai will be canceled from January 4
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X