சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஹேப்பி நியூஸ்.. சென்னை மெட்ரோ ரயில் புதிய கட்டண விவரம் வெளியீடு.. செம்ம மாற்றம்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் புதிய கட்டண விவரம் வெளியிடப்பட்டுள்ளது. கட்டணம் பெரிய அளவில் குறைக்கப்பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கியது. படிப்படியாக பணிகள் முடிந்து இப்போது . முதல்கட்ட மெட்ரோ ரயில் சேவை முழுயைமாக பயன்பாட்டுக்கு வந்துள்ளது. விமான நிலையம் முதல் விம்கோ நகர் (திருவெற்றியூர்) வரை மெட்ரோ ரயில் சேவை இரு வழித்தடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.

கோயம்போடு, சென்ட்ரல் வழியாக ஒரு வழித்தடமும், தேனாம்பேட்டை, நந்தனம், சென்ட்ரல் வழியாக இன்னொரு வழித்தடத்திலும் வண்ணாரப்பேட்டை மற்றும் விம்கோ நகரை அடையலாம். இதுதவிர கோயம்பேடு பரங்கிமலை வரையிலும் ஒரு பாதை உள்ளது. தற்போதைய நிலையில் வேளச்சேரி- பரங்கி மலையை மட்டும் பறக்கும் ரயில் இணைத்துவிட்டால் கிட்டத்தட்ட சென்னையின் முக்கிய பகுதிகளை எளிதாக ரயிலில் அடைய முடியும் என்ற நிலை உள்ளது.
இதனிடையே அடுத்தததாக 118.90 கி.மீட்டர் தூரத்துக்கு சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது. பூந்தமல்லி தொடங்கி, போரூர் வழியாக மைலாப்பூரை இணைக்கும் பாதையாக வரப்போகிறது.

முதல்வர் அறிவிப்பு

முதல்வர் அறிவிப்பு

இதனிடையே சென்னை மெட்ரோவில் பயணிகள் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்து வந்தனர், இதைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சென்னையில் மெட்ரோ ரயில் கட்டணம் ரூ.10 முதல் 20 வரை குறைக்கப்படுவதாக நேற்று அறிவித்தார். இந்த கட்டண நடைமுறை நாளை முதல் (திங்கட்கிழமை) நடைமுறைக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மெட்ரோ ரயில் கட்டணம்

மெட்ரோ ரயில் கட்டணம்

இதன்படி நாளை முதல் அமலுக்கு வரும் புதிய கட்டண விவரத்தை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டு உள்ளது. முன்பு அதிக பட்சமாக இருந்த ரூ.70 கட்டணம் தற்போது ரூ.50 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. சென்ட்ரல்- விமான நிலையம் கட்டணம் ரூ.40 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.. இதற்கு முன்பு இது ரூ.50 ஆக இருந்தது. இதேபோல் கோயம்பேடு- விம்கோ நகர் இடையே மெட்ரோ ரயில் கட்டணம் ரூ.50 ஆக குறைந்துள்ளது. இதற்கு முன்பு இது ரூ.60 ஆக இருந்தது.

வடபழனி- சென்ட்ரல்

வடபழனி- சென்ட்ரல்

மற்ற இடங்களுக்கு மெட்ரோ ரயில் புதிய கட்டணம் விவரங்களை பார்ப்போம்: வடபழனி- சென்ட்ரல்-ரூ.40, எழும்பூர்- விமான நிலையம் ரூ.40, விமான நிலையம்- விம்கோ நகர்- ரூ.50, எழும்பூர்- கோயம்பேடு-ரூ.30, தண்டையார்பேட்டை- விமான நிலையம் ரூ.50

சென்ட்ரல்- கோயம்பேடு

சென்ட்ரல்- கோயம்பேடு

கோயம்பேடு- ஆலந்தூர்- ரூ.30, கோயம்பேடு- சைதாப்பேட்டை- ரூ.40, கோயம்பேடு- ஐகோர்ட்டு- ரூ.40, சென்ட்ரல்- கோயம்பேடு- ரூ.30, சென்ட்ரல்- கிண்டி-ரூ.30, சென்ட்ரல்- டி.எம்.எஸ்.-ரூ.30, சென்டரல்- விம்கோநகர்-ரூ40, சென்ட்ரல்- வண்ணாரப்பேட்டை-ரூ.30,

திருவொற்றியூர்- விமான நிலையம்

திருவொற்றியூர்- விமான நிலையம்

கிண்டி - ஐகோர்ட்டு- ரூ.40, அண்ணாநகர் டவர்- விமான நிலையம்- ரூ.40, எழும்பூர்- ஷெனாய் நகர்- ரூ.20, எழும்பூர்-அண்ணா நகர்-ரூ.30, அசோக்நகர்- ஆயிரம் விளக்கு-ரூ.40, எழும்பூர்- பரங்கி மலை ரூ.40, திருவொற்றியூர்- விமான நிலையம் ரூ.50, திருவொற்றியூர்- எழும்பூர்-40.

ஒரு மாத கட்டணம்

ஒரு மாத கட்டணம்

கியூ.ஆர்.கோடு மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தொடுதல் இல்லா மதிப்பு கூட்டு பயண அட்டை மூலம் பயணம் செய்பவர்களுக்கு மேலும் கூடுதலாக அனைத்து பயணசீட்டுகளுக்கும் அடிப்படை கட்டணத்தில் இருந்து 20 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. இதேபோல் ஒரு நாளில் மெட்ரோவில் பயணிக்க வரையறுக்கப்படாத கட்டணம் வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான கூடுதல் வழித்தடத்தையும் சேர்த்து மாற்றம் இன்றி ரூ.100 ஆக உள்ளது. ஒரு மாத வரையறுக்கப்படாத மெட்ரோ ரயில் பயணத்திற்கு கூடுதல் வழித்தடத்தையும் சேர்த்து மாற்றம் இன்றி ரூ.2,500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

English summary
Chennai Metro Rail has announced new fare details. People are happy because the fee has been reduced drastically.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X