தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தினால் கடும் நடவடிக்கை.. சென்னை போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை!
சென்னை: தமிழக அரசின் உத்தரவை மீறி விநாயகர் சிலைகள் வைத்து ஊர்வலம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று ஓரளவு கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் அண்டை மாநிலமான கேரளாவில் தொற்று அதிகமாக இருப்பதால் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டியதுள்ளது. கொரோனா குறைந்துள்ளதால் தமிழகத்தில் ஏராளமான தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
அதே வேளையில் ஆன்மிக கூட்டம், அரசியல் கூட்டம் உள்ளிட்ட பிற கூட்டங்களில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவில்களில் முக்கியமான விழாக்கள் பக்தர்கள் கூட்டமின்றி தான் நடைபெறுகிறது. வார இறுதி நாட்களில் கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு தடை
இந்த நிலையில் வருகிற 10-ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைப்பதற்கும், விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்வதற்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. தமிழக அரசின் உத்தரவுக்கு தமிழக பாஜக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. விநாயகர் சிலை ஊரவலத்துக்கு தமிழக அரசு அனுமதி மறுக்க கூடாது என்று பாஜகவினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஏற்புடையது அல்ல
''கொரோனா சூழல் காரணமாக கட்டுப்பாடுகளை போடுவதற்கு தமிழக அரசுக்கு உரிமை உள்ளது. தமிழகத்தில் இரண்டாம் அலை கட்டுக்குள் வந்துள்ளது. மூன்றாவதாக அலைக்கு எந்த சாத்தியக்கூறுகளும் தென்படவில்லை இப்படி இருக்கும் பட்சத்தில் விநாயகசதுர்த்திக்கு அனுமதிக்க மாட்டேன் எனக் கூறுவது ஏற்புடையது கிடையாது. மகாராஷ்டிராவில் தமிழகத்தை விட கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தாலும் அங்கு கட்டுப்பாட்டை போட்டு அனுமதி அளிக்கின்றனர். ஆனால் தமிழகத்தில் மட்டும் அனுமதி மறுப்பது ஏன் என்று தெரியவில்லை'' என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.

எம்.ஆர். காந்தி கோரிக்கை
தமிழக அரசு தனது உத்தரவை மறுபரிசீலனை செய்யும் என்று நம்புவதாகவும், இல்லாவிடில் தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறும் என்று அண்ணாமலையும், சில பாஜக தலைவர்களும் கூறியுள்ளனர். விநாயகர் சதுர்த்தி சிலை ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று பாஜகவைச் சேர்ந்த நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். காந்தி இன்று சட்டசபையில் கோரிக்கை விடுத்தார்.

சேகர் பாபு விளக்கம்
இதற்கு பதில் அளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, கொரோனா பரவி விடாமல் தடுப்பதற்காக கொரோனா காலத்தில் எந்த ஒரு பண்டிகைக்கும், விழாக்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை செயலாளர் அனைத்து மாநிலங்களுக்கும், சுற்றறிக்கை வாயிலாக கூறியுள்ளார். இந்த உத்தரவின்பேரிலேயே தமிழகத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது'' என்று கூறினார்.

எச்சரிக்கை
இந்த நிலையில் அரசின் உத்தரவை மீறி விநாயகர் சிலைகள் வைத்து ஊர்வலம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். ''ஒரு சிலர் தடையை மீறி விநாயகர் சிலை நடத்த போவதாக செய்திகள் வருகின்றன. உயர்நீதிமன்ற உத்தரவின்படி அமைப்புகளின் சார்பில் விநாயகர் சிலையை பொது இடங்களில் வைப்பது தவறாகும். தடையை மீறி விநாயகர் சிலையை பொது இடத்தில் வைத்து வழிபட்டாலோ, ஊர்வலமாக எடுத்து சென்றாலோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று சங்கர் ஜிவால் கூறினார்.
-
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications