சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை அடையாறு பள்ளியில் எல்கேஜி குழந்தையை ஃபெயிலாக்கிய அதிர்ச்சிகர சம்பவம்!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை அடையாறில் உள்ள சிபிஎஸ்இ பள்ளி ஒன்று எல்கேஜி படிக்கும் குழந்தையை ஃபெயிலாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அடையாறில் உள்ளது பாரத் சிபிஎஸ்இ பள்ளி. இங்கு ஜெய்சங்கர்- ஹேமாவதி தம்பதியினரின் 3 வயது குழந்தை எல்கேஜியில் படித்து வருகிறார்.

தலையில் இடி

தலையில் இடி

கடந்த மார்ச் மாதம் பள்ளிக்கு பெற்றோர் அழைக்கப்பட்டனர். அப்போது அவர்களது குழந்தை தேர்வில் சரியாக சொல்லாததால் ஃபெயில் செய்துள்ளதாக பெற்றோர் தலையில் இடியை இறக்கினர்.

தனிக்கட்டணம்

தனிக்கட்டணம்

இதையடுத்து மீண்டும் அந்த குழந்தையை எல்கேஜியே படிக்க வைக்க வேண்டும். உடனே அதற்கான தனிக்கட்டணத்தை உடனே செலுத்த வேண்டும் என பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது.

சின்னகுழந்தை பாவம்.. எப்படி மனசுவந்தது.. நல்லா சாத்துங்க.. கோவை சந்தோஷ்குமார் மீது சரமாரி தாக்குதல் சின்னகுழந்தை பாவம்.. எப்படி மனசுவந்தது.. நல்லா சாத்துங்க.. கோவை சந்தோஷ்குமார் மீது சரமாரி தாக்குதல்

கட்டணம்

கட்டணம்

எல்கேஜிக்கு ஒரு காலாண்டுக்கு கட்டணமாக ரூ. 15,275 ரூபாய் கேட்டுள்ளனர். ஏற்கெனவே எல்கேஜி படித்த போது 65,273 ரூபாய் கட்டணமாக செலுத்தியுள்ளனர்.

தலையிட வேண்டும்

தலையிட வேண்டும்

சட்டபடி 5-ஆம் வகுப்பு வரை ஒரு குழந்தையை ஃபெயில் செய்யக் கூடாது என்பது விதியாகும். எனவே இந்த விவகாரத்தில் அரசு தலையிட வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

English summary
Chennai Adyar CBSE school make fails a child in LKD. Her parents need government to help.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X