சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை மக்களுக்கு குட்நியூஸ்.. மின்சார ரயிலில் வரும் அசத்தல் மாற்றம்.. தமிழ்நாடு அரசின் மாஸ் பிளான்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை மின்சார ரயிலில் விரைவில் ஏசி வசதி உள்ள கோச்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.

சென்னையில் உள்ள மின்சார ரயில்களில் தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்கிறார்கள். அதிலும் காலை மற்றும் மாலை நேரத்தில் பல்லாயிரக்கணக்கான பேர் இதில் பயணம் மேற்கொள்கிறார்கள்.

விலை குறைவாக இருக்கிறது, வேகமாக சென்றுவிடுகிறது போன்ற காரணங்களால் பணிக்கு செல்வோர், கல்லூரிகளுக்கு செல்வோர் தொடங்கி கூலி வேலை பார்ப்பவர்கள் வரை பலர் இந்த ரயிலை பயன்படுத்துகிறார்கள்.

வாட்டி வதைக்கும் வெயிலுக்கு இதமாக ஜில்லென்ற பயணம்....சென்னை மெட்ரோ ரயிலில் குவியும் கூட்டம் வாட்டி வதைக்கும் வெயிலுக்கு இதமாக ஜில்லென்ற பயணம்....சென்னை மெட்ரோ ரயிலில் குவியும் கூட்டம்

ரயில் பயணம்

ரயில் பயணம்

அதே சமயம் நீண்ட தூரம் இந்த ரயிலில் பயணம் செய்பவர்கள், அதாவது சென்ட்ரலில் இருந்து செங்கல்பட்டு பக்கம் போகும் மக்கள் தங்களுக்கு ஏசி கோச் வேண்டும் என்று கேட்க தொடங்கி உள்ளனர். கடந்த சில காலமாகவே இந்த கோரிக்கை இருந்து வருகிறது. நீண்ட தூரம் செல்லும் மின்சார ரயிலைகளில் ஏசி கோச் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இதை ரயில்வே நிர்வாகம் இதுவரை செவி மடுக்கவில்லை.

 ஏசி கோச்

ஏசி கோச்

இந்த நிலையில்தான் மின்சார ரயிலில் ஏசி கோச்களை அமைக்க ரயில்வே நிர்வாகத்திடம் தமிழ்நாடு அரசு திட்டம் ஒன்றை வழங்கி உள்ளது. அதன்படி தமிழ்நாடு அரசின் நிதி உதவியுடன் இங்கு நீண்ட தூரம் செல்லும் மின்சார ரயில்களில் ஏசி கோச் அமைக்க திட்டமிட்டு உள்ளது. இதற்கான திட்ட அறிக்கையை தமிழ்நாடு அரசு தென்னக ரயில்வே துறையிடம் அளித்துள்ளது. அந்த திட்ட அறிக்கை மத்திய ரயில்வே துறையிடம் வழங்கப்பட்டுள்ளது.

மின்சார ரயில்

மின்சார ரயில்

அதன்படி மின்சார ரயிலில் ஏசி கோச் அமைக்க தமிழ்நாடு அரசு அளிக்கும். மின்சார ரயிலில் ஒன்று இரண்டு கோச்கள் ஏசி வசதியுடன் இருக்கும். அந்த கோச் வருவாய் மட்டும் மாநில அரசுடன் பகிர்ந்து கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான திட்ட அறிக்கைக்கு மத்திய ரயில்வே துறை இனிதான் ஒப்புதல் அளிக்க வேண்டும். அதிக பயணிகள் பயணிக்கும் காலை மற்றும் மாலை நேரத்தில் மட்டும் இந்த ஏசி கோச் இயக்கப்படும் என்கிறார்கள்.

மும்பை மின்னணு ரயில்

மும்பை மின்னணு ரயில்

மும்பையில் மின்னணு ரயில் இதேபோல் மாநில அரசு - ரயில்வே நிர்வாகம் மூலம் இணைந்து. செயல்படுத்தப்படுகிறது. அங்கு சமீபத்தில் இதேபோல் ஏசி கோச் அறிமுகப்படுத்தப்பட்டது. மாநில அரசின் கோரிக்கையை ஏற்று இந்த கோச் அறிமுகம் செய்யப்பட்டது. அதேபோல்தான் சென்னையிலும் கொண்டு வர வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தனது கோரிக்கை திட்ட அறிக்கையில் கூறி உள்ளது. இந்த ஏசி கோச் வரும் நிலையில் அது பல பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Chennai Sub Urban electric trains will get AC coaches soon with TN Govt proposal. சென்னை மின்சார ரயிலில் விரைவில் ஏசி வசதி உள்ள கோச்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X