Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"உங்களில் ஒருவன்" பாஜகவுடன் திமுக சமரசமா? சிரித்துக்கொண்டே முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த நச் பதில்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜகவுடன் திமுக சமரசம் செய்துகொண்டுவிட்டதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் திமுகவின் தலைவராக தொடர்ந்து இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து அரசியல் குறித்தும், நிர்வாகம் குறித்தும், கொள்கைகள் குறித்தும் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது.

சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, மு.க.ஸ்டாலின் தற்போது 'உங்களில் ஒருவன் பதில்கள்' என்ற தலைப்பின் கீழ் பல்வேறு பதிலளித்துள்ளார்.

2வது முறையாக திமுக தலைவர்

2வது முறையாக திமுக தலைவர்

அதில் இரண்டாவது முறையாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். கழகத்தை வழிநடத்த புதிய திட்டம் ஏதேனும் வைத்துள்ளீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, அண்ணா வழியில் அயராது உழைப்போம். கருணாநிதி கட்டளையை கண்போல் காப்போம் என்ற அடிப்படையிலான திராவிட மாடல்தான் எப்போதும் எனது பாதை. கொள்கையும், கோட்பாடும் எவ்வளவு முக்கியம் என்பதை கழக தொண்டர்கள், உடன்பிறப்புகள் உணரவேண்டும்.

மு.க.ஸ்டாலின் விருப்பம்

மு.க.ஸ்டாலின் விருப்பம்

பொதுகுழுவில் பேசும்போது கூட கொள்கை, நட்பையும்தான் அதிகமாக வலியுறுத்தி பேசினேன். தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கும் வழிகாட்டியாக திமுக இருக்க வேண்டும். இனி தமிழ்நாட்டில் திமுக தான் ஆளும் என்ற நிலை ஏற்பட வேண்டும். அதற்கு என் முதல் கடைக்கோடி தொண்டன் வரை அனைவரும் உழைக்க வேண்டும். அதுதான் என் விருப்பம் என்று தெரிவித்தார்.

நாற்பதும் நமதே, நாடும் நமதே

நாற்பதும் நமதே, நாடும் நமதே

தொடர்ந்து நாற்பதும் நமதே, நாடும் நமதே என்ற முழக்கத்தை வைத்துள்ளீர்கள். அதனை நிறைவேற்றுவதற்கு, 2024 நாடாளுமன்றத் தேர்தலில், இந்திய அரசியலில் உங்கள் தலைமையிலான கழகத்தின் பங்களிப்பு என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு, தமிழகம் புதுவை மாநிலங்களில் நாற்பது தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற வேண்டும் என்பது திமுகவின் இலக்கு. இந்தியா முழுவதும் சமூகநீதியில், கூட்டாச்சி அடிப்படையிலான நம்பிக்கையான ஆட்சி அமைய வேண்டும் என்பது நமது அடுத்த இலக்கு. இதற்கான அரசியல் நடவடிக்கைகளில் தேர்தல் நேரத்தில் இறங்குவோம் என்று தெரிவித்தார்.

கோபாலபுரம் டூ கோட்டை

கோபாலபுரம் டூ கோட்டை

பின்னர் கோபாலபுரம் டூ கோட்டை.. இந்த அரை நூற்றாண்டு கால பொது வாழ்க்கையை நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள் என்று முன்வைக்கப்பட்ட கேள்விக்கு, பொது வாழ்க்கை என்பது முள் கீரிடம் என்பதுபோல் சொல்வார்கள். என்னுடைய பொது வாழ்க்கைக்கு அங்கீகாரம் என்பது தலைவர் கருணாநிதி சொன்னாரே 'உழைப்பு, உழைப்பு, உழைப்பு' என்பது மட்டுமே.

50 ஆண்டுகள்

50 ஆண்டுகள்

என்னை பொறுத்தவரை அந்த உழைப்பால் மக்களுக்கு என்ன விளைவுகள் ஏற்படும் என்பதுதான். அதுதான் எனது பொது வாழ்க்கை. கழக பொறுப்புகள் பொறுத்தவரைக்கும் கோபாலபுரத்தில் 13 வயது இளைஞராக கோபாலபுரம் இளைஞர் திமுகவை தொடங்கினேன். அதன்பிறகு பல்வேறு பொறுப்புகளை கடந்து 50 ஆண்டுகள் சுமந்து வந்ததால்தான் இன்று கழகத்தின் இரண்டாவது முறையாக தலைவராக கழக உடன்பிறப்புகளால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன்.

 மேயராக மு.க.ஸ்டாலின்

மேயராக மு.க.ஸ்டாலின்

அதேபோல், மக்கள் பணியை பொறுத்தவரைக்கும் மேயராக நான் ஆற்றிய பணிக்கு தலைநகர் சென்னையின் வளர்ச்சியே சாட்சியாக இருக்கிறது. அமைச்சராக, துணை முதலமைச்சராக என் நெஞ்சத்திற்கு நெருக்கமான திட்டங்களை பலமுறை எடுத்து கூறியுள்ளேன். ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டம், மகளிர் சுய உதவிக்குழு போன்ற திட்டங்கள். தற்போது முதலமைச்சராக காலை உணவுத் திட்டம், மகளிருக்கான இலவச பயணத் திட்டம், நான் முதல்வன் திட்டங்கள் எனக்கு மகிழ்ச்சி அளிக்கும் திட்டங்கள் என்று தெரிவித்தார்.

விமர்சனங்கள்

விமர்சனங்கள்

அரசியல்ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் கொச்சையாக விமர்சனம் செய்பவர்களை எளிதாக புறந்தள்ளிவிட்டு போகிறீர்கள், அது எப்படி என்ற கேள்விக்கு, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பேசப்படுவது என் காதுகளுக்கு எட்டுமே தவிர, அவற்றை என் மனதிற்கு எடுத்து செல்வதே இல்லை. என் சிந்தனை எல்லாம் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் கொண்டு வரவேண்டும். அவர்கள் மனங்களில் மகிழ்ச்சியை விதைக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்களுக்கு பணியாற்றுவது என் வாழ்வின் கடமையாக கருதுகிறேன் என்று தெரிவித்தார்.

 பாஜகவோடு சமரசமா?

பாஜகவோடு சமரசமா?

பின்னர், பாஜக-வுடன் திமுக சமரசத்துக்குப் போய்விட்டதாக சிலர் சொல்கிறார்களே என்ற கேள்விக்கு, இப்படி சொல்வதை பாஜகவே ஏற்காது என்று பதிலளித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோ கட்சியினர் மத்தியில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+