‘சாமியோவ்’ இனி இல்லை! அறிவியல் வளந்துருச்சு! தண்டோரா இனி வேண்டாம்! அதிரடி காட்டிய இறையன்பு ஐஏஎஸ்!
சென்னை : கனமழை எச்சரிக்கை மற்றும் பிற அறிவிப்புகளுக்கு தண்டோரா மூலம் அறிவிக்கப்படும் போது அதனை சொல்பவர்கள் 'சாமியோவ்' என முடிக்கிறார்கள் என சர்ச்சை எழுந்த நிலையில் தமிழ்நாட்டில் தண்டோரா போட கடுமையான தடை விதிப்பது நல்லது என மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலர் இறையன்பு ஐஏஎஸ் அறிவுறுத்தியுள்ளார்.
பண்டைக் காலங்கள் முதல் அரசு அறிவிப்புகள் கனமழை எச்சரிக்கை வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களுக்கு மக்களை எச்சரிப்பதற்காக தண்டோரா போடும் பழக்கம் இன்னும் நடைமுறையில் இருக்கிறது.
தண்டோரா அல்லது பறை மூலம் சத்தமாக இசைத்து பின்னர் மக்களுக்கு சொல்ல வேண்டிய அறிவிப்புகளை ஊரகப் பணியாளர்கள் ஒவ்வொரு ஊரில் உள்ள தெருக்களில் முனைகளில் நின்று சத்தமாகச் சொல்லிவிட்டு செல்வார்கள்.

தண்டோரா
கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக பள்ளியில் திருடப்பட்ட பொருட்களை மீண்டும் அதே இடத்தில் கொண்டு வந்து வைக்க வேண்டும் என தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டது. மேலும் தற்போது காவிரியில் பெருக்கெடுத்து வரும் வெள்ளம் காரணமாக கரையோர மக்களுக்கு எச்சரிக்கையானது காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது இப்போதும் தண்டோரா முறை மூலம் தான் இந்த தகவல்கள் வெளியாகின்றன.

தகவல் தொடர்பு சாதன வசதிகள்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளும் அரசின் அறிவிப்புகள் பலவற்றை கிராமப் பகுதிகளில் தண்டோரா மூலம் போட்டு அறிவிக்கின்ற முறைதான் வழக்கத்தில் இருக்கும் நிலையில் தகவல் தொடர்பு சாதன வசதிகள் பல்கிப் பெருகிவிட்ட இந்த காலத்தில் உலக நாடுகளுக்கு இணையாக போட்டி போடும் இந்தியாவில் இன்னும் தண்டோரா போடுகின்ற முறையானது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரை இன்னமும் கீழாநிலையில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

தண்டோரா அறிவிப்பு
மேலும் தண்டோரா அறிவிப்பை சொல்லும் பணியாளர்கள் இறுதியில் 'சாமியோவ்' என்று சொல்வதும் நடைமுறையில் இருக்கிறது. இவ்வாறு சொல்வது அந்த சமுதாயத்தினரை இழிவு படுத்துவது போல் இருக்கிறது என சர்ச்சை எழுந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இந்த முறையை ஒழிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

தண்டோரா போட தடை
இந்த நிலையில் தான் தண்டோரா போடுவதை தடை செய்வது நல்லது என தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில் "மக்களிடம் முக்கிய செய்திகளை விரைவாக சேர்க்கும் விதத்தில் இன்னும் பல ஊர்களில் தண்டோரா போடும் பழக்கம் இருப்பதையும் அதை சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டு வேதனைப்படுவதையும் கண்டேன் அறிவியல் வளர்ந்து விட்டது தொழில்நுட்பம் பெருகிவிட்டது.

இறையன்பு ஐஏஎஸ்
இந்தச் சூழலில் தண்டோரா போடுவது இன்னும் தொடர வேண்டிய தேவையில்லை ஒலிபெருக்கிகளை வாகனங்களில் பொருத்தி வளம் வரச் செய்வதன் மூலம் மூளை முடுக்குகளில் எல்லாம் தகவல்களைக் கொண்டு சேர்த்திட இயலும் எனவே தண்டோரா போட கடுமையான தடை விதிப்பது நல்லது நீரில் ஈடுபடுத்துபவர்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பது அவசியம் இச்செய்து ஊராட்சி அமைப்புகள் வரை ஊடுருவுமாறு பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்" என கூறியுள்ளார். அவரது இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
-
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications